Search
  • Follow NativePlanet
Share
» »தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!

தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!

நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்கதர்கள் வந்து செல்லும் உலகப்பிரசித்திப் பெற்ற திருமலை வெங்கடேஸ்வரா கோவிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) தரிசனம் முதல் ரூம் வாடகை வரை என அனைத்து கட்டணங்களையும் உயர்த்தியுள்ளது. அனைத்து கட்டணங்களும் எந்த வித பாகுபாடுமின்றி இரண்டு மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன் அதிருப்தி தெரிவித்துள்ளனர். எந்தெந்த கட்டணங்கள் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளன, இதனால் பக்தர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து இங்கே காண்போம்!

திருப்பதியில் உள்ள பல்வேறு தரிசன வழிகள்

திருப்பதியில் உள்ள பல்வேறு தரிசன வழிகள்

திருமலை திருப்பதியில் கலியுகவரதனாக காட்சி தரும் திருவேங்கமுடையான் ஏழுமலையானைக் காண ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். மாதத்திற்கு குறைந்தது 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். பிரமோற்சவம், புரட்டாசி மற்றும் வைகுண்ட ஏகாதேசி காலங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஏழுமலையானை கீழ்கண்ட வழிகளில் பக்கதர்கள் தரிசனம் செய்கின்றனர்.

o சர்வ தரிசனம் (இலவச தரிசனம்)

o திவ்ய தரிசனம் (படி வழியாக நடந்து மலை ஏறும் பக்தர்கள்)

o 3௦௦ ரூபாய் சிறப்பு தரிசனம்

o சுபாதம் (1 வயது பூர்த்தி அடையாத குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்)

o பாதுகாப்பு மற்றும் ராணுவ அதிகாரிகள் மற்றும் ஊனமுற்றோர்களுக்கான சிறப்பு தரிசனம்

o வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம்

o VIP பிரேக் தரிசனம்

o பல்வேறு சேவைகளின் கீழ் தரிசனம்

o டூர் பேக்கேஜ்களின் கீழ் தரிசனம்

இந்த தரிசன டிக்கெட்டுகளின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

திருப்பதியில் தங்கும் விடுதிகளின் பட்டியல்

திருப்பதியில் தங்கும் விடுதிகளின் பட்டியல்

o ரூ 200/- திருப்பதி சீனிவாசம் வளாகம் (சாதாரண அறை)

o ரூ. 300/- திருப்பதி விஷ்ணு நிவாசம் (2 படுக்கைகள் இணைக்கப்பட்ட கழிப்பறையுடன் கூடிய ஏசி இல்லாத அறை)

o ரூ 400/- திருப்பதி செரினிவாசம் வளாகம் (ஏசியுடன் கூடிய சாதாரண அறை)

o ரூ 500/-திருப்பதி விஷ்ணு நிவாசம் (2 படுக்கைகள் இணைக்கப்பட்ட கழிப்பறையுடன் கூடிய ஏசி அல்லாத சூட்)

o ரூ 600/-திருப்பதி சீனிவாசம் வளாகம் (டீலக்ஸ் அறை)

o ரூ 800/-திருப்பதி மாதவம் விருந்தினர் மாளிகை (ஏசி சூட்)

o ரூ 800/-திருப்பதி விஷ்ணு நிவாசம் (2 படுக்கைகள் மற்றும் இணைக்கப்பட்ட கழிப்பறை கொண்ட ஏசி அறை)

o ரூ1000/-திருப்பதி மாதவம் விருந்தினர் மாளிகை & அது டிஎல்எக்ஸ் ஏசி சூட்.

o ரூ.1300/-திருப்பதி விஷ்ணு நிவாசம் ( 2 படுக்கைகள் மற்றும் இணைக்கப்பட்ட கழிப்பறை கொண்ட ஏசி சூட்)

உயர்த்தப்பட்ட ரூம் வாடகைகள்

உயர்த்தப்பட்ட ரூம் வாடகைகள்

திருமலையில், புதிதாக புதுப்பிக்கப்பட்ட விருந்தினர் மாளிகைகள் மற்றும் காட்டேஜ்களுக்கான வாடகையை TTD கிட்டத்தட்ட பத்து மடங்கு உயர்த்தியுள்ளது. நாராயணகிரி விருந்தினர் மாளிகை தங்கும் விடுதி கட்டணத்தை ரூ.750ல் இருந்து ரூ.1,700 ஆக உயர்த்தியுள்ளது. அதே வகையில், சிறப்பு காட்டேஜ்களின் வாடகையை, 750 ரூபாயில் இருந்து, 2200 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனை அறிந்த பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

முப்பது ஆண்டுகளாக உயர்த்தப்படாத வாடகை

முப்பது ஆண்டுகளாக உயர்த்தப்படாத வாடகை

இந்த கட்டண உயர்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, ரூம் வாடகையை திருத்தி பொது மக்களுக்கு மலிவு விலையில் வழங்க TTD அறக்கட்டளைக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். SV ரெஸ்ட் ஹவுஸ் மற்றும் நாராயணகிரி ரெஸ்ட் ஹவுஸ் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல வசதிகளுடன் நவீனப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த ரூம்களின் வாடகை கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக உய்ரதப்படாமல் இருக்கின்றன என்றும் TTD செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

TTD ரூம் வாடகையை உயர்த்தியிருப்பது சாமானிய மக்களை மிகவும் பாதிக்கும் எனவும் இந்த கட்டணங்களை மாற்றி அமைக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன!

Read more about: tirupati andhra pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X