Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை to பெங்களூரு வெறும் இரண்டு மணி நேர பயணம் தான் – டிசம்பரில் புதிய எக்ஸ்பிரஸ்வே!

சென்னை to பெங்களூரு வெறும் இரண்டு மணி நேர பயணம் தான் – டிசம்பரில் புதிய எக்ஸ்பிரஸ்வே!

சென்னை-பெங்களூரு விரைவுச் சாலையை இந்த ஆண்டு டிசம்பருக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை அறிவித்தார். இந்த சாலை திறக்கப்பட்டதும் சென்னையிலிருந்து வெறும் இரண்டே மணி நேரத்தில் மக்கள் பெங்களூருவை அடைந்திடலாம்! ஆமாங்க! நீங்க படிச்சது சரி தான், இந்த சாலை இன்னும் சில மாதங்களில் செயல்பாட்டுக்கு வரவுள்ளதால் சென்னை மற்றும் பெங்களூருவாசிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்!

இரண்டு மணி நேரத்தில் பெங்களூரு பயணம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை கூடிய விரைவில் திறக்கப்படவுள்ளது. புதிய கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலை திறப்பு விழாவுக்குப் பிறகு பெங்களூரு-சென்னை இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரமாக குறைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அண்மையில் அறிவித்தார்! சாலை உள்கட்டமைப்பு திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக மாநிலத்தில் சுமூகமான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் நிலம் கையகப்படுத்துவதை உறுதி செய்யுமாறு புதுதில்லியில் நடந்த சந்திப்பின் போது கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை அவர் வலியுறுத்தினார் என்று கட்கரி கூறினார்.

பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தை நெடுஞ்சாலைத்துறை

'புதிய சீரமைப்பு' பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையானது ஹோஸ்கோட்டை (பெங்களூருவில்) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரிலிருந்து (சென்னையிலிருந்து 40 கிமீ) இணைக்கும். மே 2022 இல் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட NHAI ஆல் உருவாக்கப்பட்ட 36 புதிய அதிவேக நெடுஞ்சாலைகளில் இந்த அதிவேக நெடுஞ்சாலையும் ஒன்றாகும். விரைவுச்சாலை 2025 இறுதிக்குள் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பொதுமக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக விரைவுச்சாலை இந்த ஆண்டே திறக்கப்படவுள்ளது.

chennai-bengaluruexpressway

இந்த ஆண்டு இறுதிக்குள் விரைவுச்சாலை திறக்கப்படும்

பெங்களுருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை நிவர்த்தி செய்த கட்கரி, சேட்டிலைட் டவுன்ஷிப் ரிங் ரோடு (STRR) திட்டத்தை விரைவுபடுத்தும் திட்டங்களையும், டிசம்பருக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளார். 17,000 கோடி மதிப்பிலான சுற்றுச் சாலையை டிசம்பருக்குள் முடிக்க முயற்சிப்பேன் என்று அவர் கூறினார்.

17,930 கோடி ரூபாய் செலவில் தயாரான சாலை

17,930 கோடி ரூபாய் செலவில் 262 கிமீ நீளமுள்ள பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்கள் வழியாகச் செல்லும். இந்த நெடுஞ்சாலை 240 கிமீ தூரத்திற்கு எட்டு வழிச்சாலையாக இருக்கும், மீதமுள்ளவை 22 கிமீ உயரத்திற்கு உயர்த்தப்படும். இத்திட்டத்திற்காக கிட்டத்தட்ட 2,650 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

chennai-bengaluruexpresswa2

பெங்களூரு வழியாக மங்களூரு-சென்னை விரைவுச்சாலை

மூன்று கட்டங்களாக பணிகள் நடந்து வருகின்றன, முதல் கட்டமாக கர்நாடகாவின் ஹோஸ்கோட் மற்றும் பெத்தமங்களா இடையே 62.6 கி.மீ. தூரத்தை இணைக்கிறது. இரண்டாவது கட்டமாக ஆந்திராவின் பெத்தமங்களா முதல் குடிபாலா வரையிலான 85 கி.மீ. தூரத்தை இணைக்கிறது மற்றும் மூன்றாவது கட்டம் 106 கி.மீ. தூரம் குடிப்பாலையை தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரை இணைக்கிறது. பெங்களூரு-மங்களூரு கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலை மற்றும் பெங்களூரு வழியாக மங்களூரு-சென்னை விரைவுச்சாலை அமைக்கவும் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

வேலை வாய்ப்பை உருவாக்கும் எக்ஸ்பிரஸ்வே

அறிக்கையின்படி, தென்னிந்தியாவில் ஆறு தனியார் நிறுவனங்கள் இந்த விரைவுச் சாலையின் கட்டுமானத்தைக் கையாளுகின்றன. மேலும் சிறப்பான அம்சம் என்னவென்றால், விரைவுச் சாலையானது பயண நேரத்தை மட்டும் குறைக்கப் போவதில்லை, பல வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த புதிய பசுமை விரைவுச் சாலையின் கட்டுமானம் சுமார் 3,000 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்கும் மற்றும் கிட்டத்தட்ட 90,000 பேருக்கு தற்காலிக வேலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

chennai-bengaluruexpressway3

பெங்களூரு-சென்னை வெறும் 2 மணி நேரம் பயணம்

பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை மற்றும் பெங்களூரைச் சுற்றியுள்ள நகரங்களை இணைக்கும் ரிங்ரோடு ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டு திட்டங்களும் 2024 டிசம்பரில் முடிவடையும் பாதையில் இருப்பதாக அவர் கூறினார். பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை முடிவடைந்தால் இரு நகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை இரண்டு மணிநேரமாக கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

    Read more about: chennai banglore express highway
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+