Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய இசை திருவிழா – இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்ய முந்துங்கள்!

சென்னையில் நடைபெறவிருக்கும் மிகப்பெரிய இசை திருவிழா – இப்போதே டிக்கெட் முன்பதிவு செய்ய முந்துங்கள்!

சிங்கார சென்னை தமிழகத்தின் தலைநகராக பல முகங்கள் கொண்டு லட்சக்கணக்கான மக்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. கோட்டைகள், கோவில்கள், மால்கள், தியேட்டர்கள், சந்தைகள், உயர்தர ஹோட்டல்கள், கஃபேக்கள், பப்கள் என அனைத்தையும் நீங்கள் சென்னையில் பார்க்கலாம். இத்தனை நவீனம் நிறைந்து இருக்கும் சென்னையில் கலாச்சாரமும் பாரம்பரியமும் இன்னும் நிறைந்து இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாக சென்னையில் வருடா வருடம் கர்நாடக இசைத்திருவிழா நடப்பதை நீங்களே அறிந்து இருப்பீர்கள். இந்த வருடமும் அந்த பிராமாண்ட இசைத்திருவிழா நடக்க இருக்கிறது. எங்கே? எப்போது? டிக்கெட் விலை குறித்த தகவல்கள் கீழே!

டிசம்பரில் நடைபெறும் இசைத் திருவிழா

டிசம்பரில் நடைபெறும் இசைத் திருவிழா

டிசம்பர் மாதம் சென்னையை சுற்றிப்பார்க்க ஒரு அற்புதமான நேரம். வானிலை முன்னெப்போதையும் விட இனிமையாக இருக்கும். டிசம்பரில் சென்னைக்கு பயணம் செய்வது உங்கள் திட்டமாக இருந்தால், உங்கள் பயணத் திட்டத்தில் கர்நாடக இசை விழாவைச் சேர்க்கவும். மார்கழி 1 முதல் அடுத்த 3௦ தேதிகளுக்கும் இந்த இசைத் திருவிழா நடைபெறும்.

மிகவும் பிரபலமான இசைத் திருவிழா

மிகவும் பிரபலமான இசைத் திருவிழா

சென்னையின் இசை ஆர்வலர்கள், வரவிருக்கும் மாபெரும் இசை விழாவுடன் 2022 இன் கடைசி இனிமையான தருணங்களைக் காண தயாராகிவிட்டனர். நீங்களும் இந்த உற்சாகமான திருவிழாவில் பங்கு கொள்ள மறக்காதீர்கள். இந்த இசை திருவிழாவில் பங்கேற்க இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் வருவது வழக்கம். ஏனெனில் புகழ்பெற்ற பல பிரபல பாடகர்கள் அனைவரையும் நீங்கள் ஒரே மேடையில் காணுவீர்கள். இது நிச்சயம் ஒரு அரிய நிகழ்வு தானே!

இந்தியாவிலேயே மிக பழமையான இசைத் திருவிழா

இந்தியாவிலேயே மிக பழமையான இசைத் திருவிழா

மட்ராஸ் மியூசிக் சீசன் என்ற பெயரில் 1927 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இசைத் திருவிழா மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் பழமையான கலாச்சார நிகழ்வாகும். ஏன், சொல்லபோனால் இது இந்தியாவிலேயே உள்ள பழமையான கலாச்சார விழாக்களில் ஒன்றாகும். இதில் பல புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். இசையில் நாட்டம் கொண்ட எவரும் காண வேண்டிய அற்புத நிகழ்வு இதுவாகும், மிஸ் பண்ணிடாதீங்க மக்களே.

இசை மட்டுமல்ல, நடனங்களையும் கண்டு மகிழலாம்

இசை மட்டுமல்ல, நடனங்களையும் கண்டு மகிழலாம்

பல ஆண்டுகளாக, கர்நாடக சங்கீதத்தை மட்டுமே நிகழ்த்தி கொண்டிருந்ததால் இந்த இசைத் திருவிழா இந்தியா முழுக்க மிகவும் பிரபலமடைந்தது. ஆனால் காலப்போக்கில் வண்ணமயமான நடனங்களும், பல நிகழ்சிகளும் அதனுடன் சேர்ந்து இன்னும் பிரபலமடைந்தது. ஒவ்வொரு ஆண்டும் போல் இல்லாமல், இந்த ஆண்டு கர்நாடக இசை விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நீங்கள் காணலாம்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் தேதி

நிகழ்ச்சி நடைபெறும் இடம் மற்றும் தேதி

சென்னை மியூசிக் சீசன் 15 டிசம்பர் 2022 அன்று தொடங்கி ஜனவரி 1, 2023 வரை தொடரும். இசை நிகழ்ச்சி நடைபெறும் இடம் டி.கே ரோடு வென்யு ஆகும். இளம்வயது கலைஞர்கள் முதல் தொழில்முறை கலைஞர்கள் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்கள் வரை, பல்வேறு இசைக்கலைஞர்கள் மேடையை அலங்கரிப்பார்கள். அவர்களின் கம்பீரமான மற்றும் ஆத்மார்த்தமான நிகழ்ச்சிகளால் உங்களை மயக்குவார்கள். மார்கழியின் இதமான வானிலையில் இசை மழையில் நீங்கள் தயாராகிக் கொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X