Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து சூப்பர் ஒரு நாள் ட்ரிப் – ஷாப்பிங், கோவில்கள் விசிட், ருசியான உணவு வகைகள்!

சென்னையிலிருந்து சூப்பர் ஒரு நாள் ட்ரிப் – ஷாப்பிங், கோவில்கள் விசிட், ருசியான உணவு வகைகள்!

சென்னையில் இருந்து காலையில் கிளம்பி அழகாக சுற்றி பார்த்து விட்டு இரவு வீட்டுக்கு வந்து விடக்கூடிய ஒரு அற்புதமான, வரலாற்று மற்றும் கலாச்சாரம் நிறைந்த இடத்தைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்! பல நூற்றாண்டு வரலாறு நிறைந்த இந்த நகரம் நமக்கு அருகில் இருப்பது நம் அதிர்ஷ்டம் தான். பல்லவ மற்றும் சோழர் காலத்து கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் பல நூறு கோவில்கள், அந்த இடத்திற்கே உரித்தான பட்டாடைகள், விதவிதமான சுவையான உணவு வகைகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் என ஒரு சூப்பர் ஒரு நாள் ட்ரிப் பிளான் இதோ உங்களுக்காக!

சென்னை to காஞ்சிபுரம் ஒரு நாள் ட்ரிப்

"ஆயிரம் கோவில்களின் பொன் நகரம்" என்றழைக்கப்படும் காஞ்சியில் உள்ள அற்புதங்கள் யாவையும் ஒரே நாளில் பார்த்துவிட முடியாது. அது கனவிலும் கடினம் ஆயிற்றே! சென்னையில் இருந்து காலையில் கிளம்பி சில மனதைக் கொள்ளையடிக்கும் இடங்களை பார்த்துவிட்டு, சுவையான உணவு வகைகளை உண்டு மகிழ்ந்து, மனதிற்கு பிடித்த பட்டு மற்று பிற ஆடைகளை ஷாப்பிங் செய்து விட்டு நீங்கள் வீடு திரும்பலாம்.

chennai

காலை 9 மணிக்கு கிளம்ப வேண்டும்

காலை 10 மணிக்கு நீங்கள் காலை உணவை முடித்துக்கொண்டு வீட்டில் இருந்து கிளம்பினால் நீங்கள் 11.30 மணி அளவில் காஞ்சியை அடைந்து விடுவீர்கள். நீங்கள் பேருந்தில் சென்றால் இன்னும் சௌரியம், ஏனென்றால் அத்தி வரதர் குடி கொண்டிருக்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தேவராஜ சுவாமி கோவில் சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்து இருப்பதால் நீங்கள் வழியிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

முதலில் ஸ்ரீ தேவராஜ பெருமாள் கோவில்

பேருந்து உங்கள் கோவில் வாசலிலியே இறக்கி விடும், ஆகையால் அதிக சிரமின்றி நீங்கள் நடந்தே கோவிலுக்கு சென்று விடலாம். முதலில் அத்திவரதர் வீற்றிருக்கும் அனந்த சரசை தரிசித்துவிட்டு கோவிலுக்கு விஜயம் செய்யுங்கள். பின்னர், நரசிம்மர், தாயார் சன்னதி, மேலும் பல சன்னதிகளை தரிசித்துவிட்டு மூலவரான தேவராஜ சுவாமியை தரிசியுங்கள்.

மதிய உணவு மற்றும் ஷாப்பிங்

நீங்கள் 23 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ள தேவராஜ சுவாமி கோவிலை தரிசித்துவிட்டு வரவே நிச்சயம் மணி 1 ஐ கடந்து விடும். 12.30 மணி முதல் 4 மணி வரை அனைத்துக் கோவில்களும் மூடப்பட்டு இருக்கும் என்பது நாம் அறிந்த விஷயமே. ஆகையால் இந்த ஒரு கோவிலை மட்டும் பார்த்துவிட்டு நீங்கள் மதிய உணவு அருந்த செல்வதே சிறந்த யோசனை. இந்தக் கோவிலுக்கு பக்கத்திலும், நகருக்கு உள்ளேயும் பல உயர்தர மலிவு விலை சைவ உணவகங்கள் உள்ளன.

kanchi puram

எங்கே சாப்பிட வேண்டும்

ஆரிய பவன், சரவண விலாஸ், அன்னப்பூர்ணா பவன், ஹோட்டல் சக்தி, ஆனந்த பவன், சரவண பவன் ஆகிய இடங்களில் ருசிகரமான சைவ உணவுகள் கிடைக்கின்றன. சிறிது ரெப்ஃரெஷ் செய்துவிட்டு மதிய உணவை அருந்திய பிறகு, கோவில் மூடப்பட்டு இருக்கும் இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் ஷாப்பிங்கிற்கு செல்லலாம்.

எங்கே ஷாப்பிங் செய்ய வேண்டும்

பச்சையப்பாஸ், முருகன், எஸ்.எம் சில்க்ஸ், பாபு ஷா, ஸ்ரீ சந்திரா, வெங்கடேஸ்வரா மற்றும் பல துணிக் கடைகள், (இல்லை கடல்கள் என்று தான் கூற வேண்டும்) காஞ்சி நகர் முழுக்க நிறைந்து இருக்கின்றன. ஆகையால் மலிவு விலையில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் முதல், வேட்டி, துண்டு, பட்டு புடவைகள் வரை நமக்கு தேவையானவற்றை வாங்கி மகிழுங்கள்.

ஏகாம்பரேஸ்வரர் கோவில்

நீங்கள் ஷாப்பிங் செய்து முடிப்பதற்கு எப்படியும் 4 மணி ஆகி விடும். அதற்குள் கோவில்களின் நடைகளும் திறக்கப்பட்டு விடும். ஷேர் ஆட்டோ அல்லது ஆட்டோ மூலம் நகரின் மையத்தில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலை எளிதாக அணுகலாம். விஜயநகர காலத்து ராஜ கோபுரம், 3000 வருட பழமையான ஸ்தல விருட்சமான மாமரம், பஞ்சபூத லிங்கங்களில் ஒருவரான மண்ணால் ஆன மூலவர் எம்பெருமான் சிவன், ஆயிராங்கால் மண்டபம், மண்டபத்தை ஒட்டி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட லிங்கங்கள் ஆகியவற்றை நீங்கள் இங்கே தரிசிக்கலாம்.

chennai

காஞ்சி காமாட்சி கோவில்

தந்திர சூடாமணியின் படி 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், ஆதி சங்கரரால் குறிப்பிட்டப்பட்ட மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் புகழ்பெற்ற இந்த காமாட்சி கோவிலுக்கு இந்தியா முழுவதிலுமிருந்தும், ஏன் வெளி நாட்டவரும் கூட வருகை தருகின்றனர். மேலும் காமாட்சி கோவிலில் காமாட்சி அம்மன் விளக்கு வாங்கி வீட்டில் வைத்து விளக்கேற்றுவதும், ஆதி சங்கரரால் பிரதிர்ஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரத்தின் மகா மேருவை வாங்கி வீட்டில் வைத்து பூஜிப்பதும் குடும்பத்திற்கு பல நன்மைகளை பயக்கின்றன.

காஞ்சிபுரத்திற்கு எப்படி செல்வது?

சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தை ரயில் வாயிலாகவும், பேருந்து வாயிலாகவும் எளிதில் அணுகலாம். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து எண் 79 மற்றும் எண் 115 ஆகிய பேருந்துகள் வழக்கமான முறையில் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டணம் ஒரு நபருக்கு 60 ரூபாய் ஆகும். மேலும் சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து திருமால்பூர் செல்லும் ரயிலும் தினமும் இயக்கப்படுகின்றன. ஒரு நபருக்கான ரயில் கட்டணம் 20 ரூபாய் ஆகும்.

ஒரு நாளில் இவ்வளவையும் செய்து விடலாம்! நீங்கள் சென்று பாருங்களேன்!

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+