Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு பக்கத்தில – பச்சை பசேல் சூழலில, ஜில்லுனு இருக்கிற தண்ணியில ஆட்டம் போட ஒரு சூப்பர் ஸ்பாட்!

சென்னைக்கு பக்கத்தில – பச்சை பசேல் சூழலில, ஜில்லுனு இருக்கிற தண்ணியில ஆட்டம் போட ஒரு சூப்பர் ஸ்பாட்!

சென்னைக்கு பக்கத்தில இருக்கிற ஒரு சூப்பர் நீர்வீழ்ச்சி இது, சென்னையின் பிஸியான வாழ்வில் இருந்து ஒரு நாள் ரெஸ்ட் எடுக்க ஒரு அற்புதமான ஸ்பாட் இது. பச்சை பசேல் சூழலில, ஜில்லுனு விழுற அருவி தண்ணியில குளிச்சி ஆட்டம் போட ஒரு சூப்பர் ஸ்பாட்டா இருக்கிற இடம் தான் இந்த தடா நீர்வீழ்ச்சி! இந்த இடத்திற்கு எப்போது போகலாம், எப்படி போகலாம் என்று தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!

1

சென்னையில் இருந்து வார இறுதியில் செல்ல ஏற்ற இடம்

பிக்னிக் ஸ்பாட் தேடுகிறீர்களா? உங்கள் அடுத்த வார விடுமுறைக்கு எங்கு செல்வது என்று யோசிக்கிறீர்களா? சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தடா நீர்வீழ்ச்சிக்குச் செல்லுங்கள். சென்னை மையத்திலிருந்து 66 கிமீ தொலைவில் அமைந்துள்ள தடா நீர்வீழ்ச்சி நண்பர்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் செல்வதற்கு ஏற்ற இடமாகும்.

2

புத்துணர்ச்சி அளிக்கும் தடா ட்ரிப்

சென்னைவாசிகள் பலரும் தடா நீர்வீழ்ச்சி பற்றி அறிந்திருப்பார்கள், கேள்விப்பட்டிருந்தாலும் பலர் சென்றிருக்க மாட்டர்கள். எது எப்படி இருந்தாலும் சென்னையிலிருந்து தடாவிற்கு பைக்கில் செல்வது ஒரு அருமையான யோசனை. வேலைப்பளு, வாழ்வில் இருக்கும் மற்ற பிரச்சனைகளை எல்லாம் ஒரு ஓரம் வைத்து விட்டு ஒரு குட்டி ட்ரிப் அடித்து விட்டு வாருங்களேன். உங்களுக்கே புது தெம்பு கிடைக்கும். புத்துணர்ச்சியும், தெளிவான மனமும் கிடைக்கும்.

3

சென்னை to தடா ஒரு நாள் ட்ரிப்

சென்னையிலிருந்து தடா நீர்வீழ்ச்சிக்கு உங்கள் காரில் அல்லது பைக்கில் செல்ல திட்டமிட்டால், கூகுள் வரைபடத்தில் "தடா நீர்வீழ்ச்சி வரவேற்பு பலகை நுழைவு" (Tada waterfall welcome board entrance) என்று தேடவும். கூகுள் மேப் நேரடியாக தடா நீர்வீழ்ச்சி வாகன நிறுத்துமிடத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கே உங்கள் வாகனங்களை பார்க் செய்து விட்டு செக் அவுட்டில் நுழைவு டிக்கெட்டுகளை வாங்க வேண்டும்.

4

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் செல்ல ஏற்ற இடம்

ஒரு நபருக்கு ரூ. 50 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங்கில் இருந்து உங்களது பைகளை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்க வேண்டும். ஒரு 15 நிமிட தூரத்தில் நீச்சல் குளம் ஒன்றை அடைவீர்கள். இது ஆழம் குறைந்த அழகான பகுதி, வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் குளிப்பதற்கு இது ஏற்ற இடம். இங்கு பல குழந்தைகளும் பெரியவர்களும் ஆனந்தமாக நீச்சல் அடித்துக் கொண்டிருப்பதை நீங்களே காணலாம்.

5

நீர்வீழ்ச்சியை அடைய ட்ரெக்கிங்

அல்லது உங்களுக்கு நீர்வீழ்ச்சியில் தான் குளிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் மேலும் ஒரு 30 நிமிடங்கள் தொடர்ந்து ட்ரெக்கிங் செய்ய வேண்டும். பிரதான நீர்வீழ்ச்சி வேலியுடன் மூடப்பட்டு இருக்கும். அங்கே நீங்கள் உங்கள் ஆசை தீர எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் குளித்து மகிழலாம். ஒரு சின்ன ட்ரெக்கிங்கிற்கு பிறகு நீர்வீழ்ச்சியை காண்பது எவ்வளவு அலாதியாக இருக்கும் அல்லவா.

6

நியாபகம் வைத்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

1. செருப்புகளை அணியுங்கள், ஷூ ஈரமாகி வழுக்கி விழுவதற்கு வழிவகுக்கும்.

2. ஜிப் வைத்த மூடிய பையை எடுத்துச் செல்லுங்கள். குரங்குகள் உங்கள் அருகில் வந்து திறந்த பை அல்லது கையில் எதையும் எடுத்துச் செல்லும்.

3. உங்களுக்கு தேவையான தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வது மிக மிக அவசியம். அங்கு எதுவும் கிடைக்காது.

4. கோயம்பேட்டில் இருந்து வரதய்யா பாலம் வரை பஸ்கள் இயக்கப்படுகின்றன, லாங் ரைடு போக வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் பைக் அல்லது காரில் செல்லலாம்.

5. சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை நோக்கி செல்லும் ரயில்கள் தடா ரயில் நிலையம் வழியாக செல்கின்றன. நீங்கள் ரயில் சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. மொத்த மலையேற்ற தூரம் என்பது 10 கிமீ, அவற்றை மனதில் வைத்துக் கொண்டு செல்லவும்.

7. சிரம நிலை நடுத்தரமானது என்பதால் வயதானவர்களும் கண்டிப்பாக வரலாம்.

8. மலையேற்ற நேரம் என்பது சீராக நடந்தால் கிட்டத்தட்ட ஒன்றரை முதல் 2 மணி நேரம் வரை ஆகிறது.

9. பார்வையிட சிறந்த நேரம் ஜூலை - ஜனவரி வரை மட்டுமே. மற்ற காலங்களிலும் நீர்வரத்து இருக்கும், ஆனால் ஜூலை - ஜனவரி அதிகமான நீர்வரத்து இருக்கும்.

More News

    Read more about: tada chennai
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+