» »சென்னையில் 2 ஏலகிரி – மனம் கவரும் சுற்றுலாத்தலம் ...

சென்னையில் 2 ஏலகிரி – மனம் கவரும் சுற்றுலாத்தலம் ...

Posted By: Gowtham Dhavamani

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய மலை வாசஸ்தலம், ஊட்டி போன்ற புகழ்பெறவில்லை என்றாலும் ஏலகிரி நிச்சயமாக நீங்கள் பார்த்து அனுபவிக்க அதிகம் இடங்களை கொண்டுள்ளது . தமிழ்நாடு பல்வேறு வகையான மலை வாசஸ்தலங்களைக் கொண்டிருக்கிறது. பிரமாண்டம் எதுவும் இல்லாமல் ஒரு மலை வாசஸ்தலத்தை நீங்கள் விரும்புவதாக இருந்தால், கட்டாயம் இங்கே வரவேண்டும்.

ஏலகிரி என்பது அமைதியான நகரம், அந்நகரம் அற்புதமான விஷயங்களைக் கொண்டுள்ளது. அவை சூரிய அஸ்தமனத்தை ரசிக்கும் இடம் , பசுமையான பூங்காக்கள், ஏரிகள் என இன்னும் கூறிக்கொண்டே செல்லலாம். ஏலகிரி இயற்கை அழகு உங்களை ஆச்சர்யமூட்டும். சென்னையில் இருந்து ஏலகிரிக்கு செல்ல ஏறக்குறைய 5 மணி நேரம் ஆகும்.

ஏலகிரி செல்ல சிறந்த நேரம்:

ஏலகிரி செல்ல சிறந்த நேரம்:

ஏலகிரி, அதன் அட்சரேகை நிலை காரணமாக ஆண்டு முழுவதும் இனிமையான காலநிலை கொண்டுள்ளது. வெப்பம் என்பது ஏலகிரி மக்களுக்கு தெரியாத ஒன்று. ஆண்டு முழுவதும் பொது மக்கள் வர ஏற்றதாக இருந்தாலும், நவம்பர் முதல் பிப்ரவரி வரையான காலப்பகுதி வேறு வகையிலான சூழ்நிலையை வழங்குகிறது, எனவே இது ஏலகிரிக்கு மிகச் சிறந்த நேரம். கோடைக்கால விழாவைப் பார்க்க விரும்பும் மக்களுக்கு, மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை சிறந்த நேரம் ஆகும்.

PC: McKay Savage

ஏலகிரிக்கு செல்வது எவ்வாறு:

ஏலகிரிக்கு செல்வது எவ்வாறு:

விமானம் வழி:


ஏலகிரிக்கு அருகில் உள்ள விமான நிலையம் பெங்களூர் விமான நிலையம், 160 கி.மீ தொலைவில் உள்ளது. மீதமுள்ள தூரத்தை கடப்பதற்கு அடிக்கடி பேருந்துகள் அல்லது வாடகை வண்டிகள் உள்ளன.

ரயில் பயணம்:


ஜோலார்பேட்டை ரயில் நிலையம் ஏலகிரியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஏலகிரி வரை டாக்ஸி அல்லது ஒரு வாடகை வண்டியை எடுத்துக் கொள்ளலாம். தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் ஏலகிரிக்கு ஏராளமான பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன.

சாலை பயணம்:


பஸ் அல்லது கார் மூலம் சாலையில் பயணம் செய்து சென்னையிலிருந்து வரும் நேரங்களில், பல வகையான இயற்கை எழில்மிகு இடங்களை பார்க்கலாம். உங்கள் பயணத்தின் ஊடாக அற்புதமான ,மற்றும் நம்பமுடியாத இயற்கை அழகை நீங்கள் காணலாம்.

உள் நகர பயணத்தினை எளிதில் டாக்ஸி, வாடகை வண்டி அல்லது ஆட்டோ மூலம் பார்க்கலாம். வழக்கமான பஸ்கள் நகரத்திற்குள் இயக்கப்படுகின்றன.PC: McKay Savage

ஏலகிரி செல்ல சிறந்த வழிகள்:

ஏலகிரி செல்ல சிறந்த வழிகள்:

வழி1: சென்னை - வேலூர் - ஏலகிரி (4 மணி 45 நிமிடங்கள் மற்றும் 232 கிலோமீட்டர்
)

வழி2: சென்னை - காஞ்சிபுரம் - ஏலகிரி (5 மணி நேரம் மற்றும் 234 கிலோமீட்டர்)

இரு வழிகளும் சமமானவை என்றாலும், வழி1 -ல் 15-20 நிமிடங்கள் குறைகிறது, இது ஒரு சிறந்த விருப்பமான வழியாகும்.

ஆரம்ப இடம் – சென்னை:

ஆரம்ப இடம் – சென்னை:

இந்தியாவில் உள்ள நான்கு மெட்ரோபாலிடன் நகரங்களில் ஒன்று சென்னை. சென்னைக்கு தென் இந்தியாவின் நுழைவாயில் என்ற புனைப்பெயரும் உண்டு. பாண்டிச்சேரி, கன்னியாகுமரி மற்றும் திருப்பதி போன்ற இடங்களுக்கு இது மிகவும் அருகில் உள்ளது. பண்டைய கோட்டைகள் மற்றும் கோவில்கள், வரலாற்று நினைவுச்சின்னங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தேவாலயங்கள் மற்றும், அற்புதமான ஷாப்பிங் அனுபவங்களும் சென்னையில் உள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை மெரினா பீச் ஆகும்.

PC: Thangaraj Kumaravel

முதல் நிறுத்தம், வேலூர்:

முதல் நிறுத்தம், வேலூர்:


139 கிலோமீட்டர் தூரத்தில், சுமார் மூன்று மணிநேரம் பயணம் செய்து, பயணிகளின் பிரபலமான போக்குவரத்து மையங்களில் ஒன்றை நீங்கள் அடைவீர்கள். வேலூர் கலாச்சார பாரம்பரியம் நிறைந்த ஒரு இடம். திராவிட நாகரிகத்தின் ஒரு நித்திய மரபுடன் ஆசீர்வதிக்கப்பட்டது.

வேலூரில் பல சுற்றுலா தலங்கள் உள்ளன, அவற்றில் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றன. வேலூர் கோட்டை, ஜலகாந்தீஸ்வரர் கோயில், பேர்ல் அரண்மனை, மாநில அரசு அருங்காட்சியகம், பிரஞ்சு பங்களா மற்றும் கடிகார கோபுரம் ஆகியவை பிரபல சுற்றுலாத் தளங்களாகும்.

PC: Soham Banerjee

இறுதி இலக்கு, ஏலகிரி:

இறுதி இலக்கு, ஏலகிரி:

PC: solarisgirl

மற்றொரு 93 கிலோமீட்டர், இரண்டு மணி நேரம் பயணித்தால் நீங்கள் இலக்கை அடைவீர். ஏலகிரி, இது சில நம்பமுடியாத, இயற்கை அதிசயங்களை உள்ளடக்கி உள்ளது. ஒரு வார விடுமுறையில் ஏலகிரி செல்வது பல நினைவுகளை உங்களுக்கு வழங்கும்..

ஏலகிரி மற்றும் சுற்றி உள்ள இடங்கள்:

ஜலகம்பாரை நீர்வீழ்ச்சி:

ஜலகம்பாரை நீர்வீழ்ச்சி:


நகர மையத்திலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு 5 கி.மீ நடைப்பயணம் செய்ய வேண்டும். மலைப் பாறைகள் மலைத்தொடரில் ஒரு அழகான வீழ்ச்சியாய் பாயும் அட்டாறு நதியைப் பிரித்து வைக்கின்றன.

PC: Ashwin Kumar

இயற்கை பூங்கா:

இயற்கை பூங்கா:

PC: Ashwin Kumar

புங்கானூர் ஏரிக்கு அருகிலுள்ள நகர மையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, இந்த இயற்கை பூங்கா, 12 ஏக்கர் பரப்பளவில் பரவி இருக்கும் மலைப்பகுதி ஆகும். தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் கொண்டு அமைதியான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சூழலை அனுபவிக்கலாம்.

செயற்கை நீர்வீழ்ச்சிகள், மூங்கில் வீடு, அழகிய நிறங்கள் கொண்ட இசை நீரூற்று, மீன் கண்காட்சி, பருவ தோட்டம், குழந்தைகள் பூங்கா மற்றும் பாலி ஹவுஸ் ஆகியவற்றைப் போன்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான புத்துணர்ச்சியூட்டும் அனுபவங்கள் போன்ற சில முக்கிய கூறுகள் இங்கு அமைந்துள்ளது.

 புங்கானூர் ஏரி:

புங்கானூர் ஏரி:

PC: solarisgirl

நகர மையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இந்த செயற்கை ஏரி 60 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. ஏரிக்கு நடுவில் ஒரு அழகான நீரூற்று உள்ளது.
ஏராளமான படகு வசதிகளும் உள்ளன.

சுவாமிமலை:

சுவாமிமலை:

PC: solarisgirl

நகர மையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது சுவாமிமலை. இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற மலைகளில் ஒன்றாகும், மிகவும் உயர்ந்த இடத்தில் இது அமைந்துள்ளது. புங்கனூர் ஏரியில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் இம்மலை உள்ளது.

ஏலகிரி நகரில் சாகசம் செய்யவேண்டுமா?

ஏலகிரி நகரில் சாகசம் செய்யவேண்டுமா?

PC:texaus

நகரின் மையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் துணிச்சலான சாகச நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட ஏலகிரி சாகச முகாம் உள்ளது. மலையேற்றம் , பாராகிளைடிங், ஹைகிங் ஆகியவை இங்கு உள்ள அம்சங்கள்.

கோடை திருவிழா:

ஏலகிரியில் நடத்தப்படும் இந்த திருவிழா, கோலகொலமாக கொண்டாடப்படும். அப்போது இங்கு சென்றால்கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் அரசு அதிகாரிகள் இங்கு வந்திருந்து இந்த இயற்கை அம்சத்தையும் மந்திர நிகழ்வுகளையும் அனுபவிக்க விரும்புவர்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்