Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை - திருச்சி : நெடுஞ்சாலைப் பயணத்தில் மிஸ் பண்ணக்கூடாத தலங்கள்!

சென்னை - திருச்சி : நெடுஞ்சாலைப் பயணத்தில் மிஸ் பண்ணக்கூடாத தலங்கள்!

சென்னையில் - திருச்சி செல்ல இளைஞர்கள் பெரிதும் பயன்படுத்துவது பேருந்து, ரயில் சேவைகளைவிட இருசக்கர வாகனங்களையே. அந்தவகையில் பயணம் பாதுகாப்பாகவும், எளிதாகவும் இருக்க இந்த வழித்தடத்தை ட்ரை பண்ணுங்களேன்.

தமிழகத்தின் தலைநகரம், தென்னிந்தியாவின் வாசல், இந்தியாவில் தில்லி, மும்பை, கல்கத்தா நகரங்களுக்கு அடுத்து பெரிய நகரம். சிறந்த துறைக நகரங்களில் ஒன்று. 2000 ஆண்டுகள் பழமையானது... இன்னும் எத்தனை எத்தனையோ சிறப்புகளையும், பெருமைகளையும் கொண்டுள்ளது நம்ம சென்னை நகரம். இதற்கு அடுத்ததாக தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக இருப்பது திருச்சிராப்பள்ளி என்னும் திருச்சி. பெரும்பாலும், தொழில் அல்லது கல்வி நிமித்தமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு அதிகளவிலானோர் படையெடுத்துச் செல்வது வழக்கம். மேலும், திருச்சியில் அமைந்துள்ள உலக பிரசிதிபெற்ற பல கோவில்கள் காரணமாகவும் சுற்றுலாப் பயணிகள் இங்கே குவிவது வழக்கம். அவ்வாறாக சென்னையில் இருந்து திருச்சி செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் இந்த தேசிய நெடுஞ்சாலையில் தவறவிடக் கூடாத பல்வேறு பகுதிகளையும் கண்டு ரசித்து வாருங்கள்.

சென்னை- திருச்சி

சென்னை- திருச்சி


சென்னையில் இருந்து திருச்சிக்கு வழக்கமான விழுப்புரம், நெய்வேலி சாலையைக் காட்டிலும் பாண்டிச்சேரி, கடலூர் வழியான கடற்கரை சாலை உங்களது பயணத்தை மேலும் வண்ணமயமாக்கும். மேலும், இப்பகுதியில் சுற்றுப் பார்க்க ஏராளமான பகுதிகளும், ஆன்மீகத் தலங்களும் உள்ளன. இதில், பாண்டிச்சேரி அருகே உள்ள காரைக்கால் மணற் கடற்கரை, தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம், ஆரோவில் நகரம், சிவாலயம், கடலூரில் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள், செயிண்ட் டேவிட் கோட்டை, பூவராக சுவாமி கோவில், பாடலீஸ்வரர் கோவில், கும்பகோணத்தில் சோமேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ கம்பஹரேஸ்வரர் ஆலயம், ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் உள்ளிட்டவை பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களும், ஆன்மீகத் தலங்களும் நிறைந்து காணப்படுகிறது. இவை உங்களது பயணத்தை மேலும் உற்சாகமூட்டும்.

L.vivian.richard

சென்னை - மாமல்லபுரம்

சென்னை - மாமல்லபுரம்


சென்னையில் இருந்து பாலவாக்கம், சௌம்பாக்கம் வழியாக சுமார் 57 கிலோ மீட்டர் பயணித்தால் மாமல்லபுரத்தை அடையலாம். இதற்கு இடைப்பட்ட தூரத்தில் அமைந்துள்ள இசிஆர் கடற்கரை, கோவலம் கடற்கரை, பஞ்ச பாண்டவ ரதங்கள், கடற்கரை கோவில், திருவிடந்தை பூமிநாதர் கோவில், தேவனேரி முன்னதாக உள்ள புலி குகை உள்ளிட்டவை சிறந்த சுற்றுலாத் தலங்கள் ஆகும்.

Thurika


மாமல்லபுரம் பஞ்ச பாண்டவ ரதங்கள்

மாமல்லபுரத்தில் உள்ள பஞ்சபாண்ட ரதம் என்று அழைக்கப்படும் இந்த ஐந்து ரதங்களும் ஒற்றைப்பாறையில் தேர் போன்ற நுணுக்கத்துடன் செதுக்கி கட்டமைக்கப்பட்ட கோவில்கள் ஆகும். கடற்கரைக் கோவிலைப் போலவே இவையும் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவை முதலாம் மஹேந்திரவர்மர் மற்றும் அவரது புதல்வராகிய முதலாம் நரசிம்மவர்மர் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாகும்.

கடற்கரை கோவில்

கடற்கரை கோவில் என நாடு முழுவதும் அறியப்படும் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் கிரானைட் கற்களால் கட்டப்பட்டதாகும். மகாபலிபுரத்தில் உள்ள முக்கிய கலைச் சின்னங்களில் ஒன்றாக இந்த கோவில் யுனெஸ்கோ அமைப்பினால் உலகப்பாரம்பரிய தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் திராவிட சிற்பக்கலை மரபை பிரதிபலிக்கும் மிக முக்கியமான கோவிலாகவும் இது பிரசித்தி பெற்றுள்ளது. சிவலிங்கம் மற்றும் விஷ்ணுவுக்கான சன்னதி ஆகியவை இந்த கோவிலில் இடம் பெற்றுள்ளன. சிம்ம வாகனத்தில் அமர்ந்தபடி துர்க்கை வீற்றிருக்கும் சிலையை இங்கு தரிசிக்கலாம். சைவம் வைணவம் போன்ற அனைத்து மரபுகளும் ஒன்றாக இக்கோவிலில் இடம் பெற்றிருப்பது மற்றொரு முக்கியமான அம்சமாகும்.

புலிக் குகை

புலிக்குகை எனப்படும் இந்த பாறைக்குடைவு கோவில் வளாகம் மாமல்லபுரத்தில் இருந்து சற்று வெளியே தேவனேரிக்கு முன்னதாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் வாயிலில் புலித்தலை சிற்பங்கள் வடிக்கப்பட்டிருப்பதாலேயே இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. கடற்கரையை ஒட்டி தனிமையான சூழலை கொண்டிருப்பதால் உள்ளூர் மக்களின் முக்கியமான சிற்றுலாத்தலங்களில் ஒன்றாக இது பிரசித்தி பெற்றுள்ளது. 2005-ம் ஆண்டில் இங்கு ஒரு கல்வெட்டு பாறை மண்ணிலிருந்து வெளிப்பட்ட பின் இப்பகுதியில் விரிவான அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டு மண்ணில் புதையுண்டிருந்த புராதன சங்ககால சுப்ரமணியர் கோவிலும் இங்கு கண்டெடுக்கப்பட்டிப்பதை காணலாம்.

மாமல்லபுரம் - பாண்டிச்சேரி

மாமல்லபுரம் - பாண்டிச்சேரி


மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 99 கிலோ மீட்டர் பயணித்தால் பாண்டிச்சேரியை அடைந்துவிடலாம். இந்த பயணத்தையும் நீங்கள் வாகனத்தின் உள்ளேயே செலவிட வேண்டும் என அவசியம் இல்லை. இங்கு உங்களுக்கான சுற்றுலா விருந்து காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஒன்றா, இரண்டா அத்தனை சுற்றுலாத் தலங்களையும் கண்டுரசித்துச் செல்ல உங்களுக்கு அதிக நாட்கள் தேவைப்படும். இருப்பினும், பயணத்தில் சோர்வைப் போக்கும் வகையிலான ஒருசில தலங்களுக்கு மட்டும் சென்று ஓய்வு எடுத்து வரலாம். அப்படி பாண்டிச்சேரியில் தவறவிடக் கூடாத முக்கியமாக சுற்றுலாத் தலங்களில் தூய இருதய கிறிஸ்து தேவாலயம், தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம், காரைக்கால் அம்மையார் கோவில், ஆரோவில் நகரம், யானம் சிவாலயம், பாண்டிச்சேரி அருங்காட்சியகம், பாண்டிச்சேரி கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வரலாம்.

தூய இருதய கிறிஸ்து தேவாலயம்

பாண்டிச்சேரியில் உள்ள புகழ் பெற்ற மற்றும் முக்கியமான தேவாலயங்களில் ஒன்று தூய இருதய கிறிஸ்து தேவாலயம். கோதிக் கட்டிடக்கலையை இடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம் வருடம் முழுவதும் பார்வையாளர்களை ஈர்க்கும் இடமாகும். குறிப்பாக இந்த தேவாலயத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அமைதி மற்றும் நிம்மதியை பெறும் சூழ்நிலையை அனுபவிப்பார்கள்.

தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம்

பாண்டிச்சேரி தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகத்தில் இருக்கும் அரிய தாவர இனங்கள் அறிவியல் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கவர்ந்து இழுப்பதாக உள்ளன. 22 ஏக்கர் நிலப்பரப்பளவில் விரிந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா மற்றும் மீன் காட்சியகம் ஆகியவை பாண்டிச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளிவரும் தெற்கு புற நுழைவாயிலுக்கு மிகவும் அருகில் அமைந்துள்ளது. இங்குள்ள மீன் காட்சியகத்தில் உள்ள பல்வேறு வகையிலான மீன் வகைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புகழ் பெற்றவையாகும். குறிப்பாக, இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான ரயில் வண்டி, நடனமாடும் நீரூற்று, சில அரிய வகை அலங்கார மீன்களையுடைய காட்சியகம் மற்றும் 6 நீரூற்றுகள் உள்ளன.

காரைக்கால் அம்மையார் கோவில்

63 நாயன்மார்களில் ஒரேயொரு பெண்பால் மனிதர் காரைக்கால் அம்மையார் மட்டுமே. இந்த கோவிலில் மிகப்பெரிய பெண் கடவுளாக இருக்கும், புனிதவதியார் என்ற பெண் கடவுளின் சிலையும் உள்ளது. அபூர்வமான சக்திகளை வேண்டி இந்த பெண் கடவுளை உள்ளூர்வாசிகள் துதித்திருப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும், தமிழ் மாதமான ஆனி மாதத்தின் பௌர்ணமி தினத்தில், அதாவது ஜூன்- ஜூலை மாதங்களில் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் அம்மையாரின் அருளைப் பெறுவதற்காக மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்திடும்.

ஆரோவில் நகரம்

பாண்டிச்சேரி நகரத்திலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும் ஆரோவில் நகரம், பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களையும், கலாச்சாரங்களையும் இணைக்கும் நகரமாக திகழ்கிறது. 50 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்களையுடைய இந்த நகரம் ஒரு சர்வதேச நகரமாகும். சாலை வழியாக எளிதில் அடையும் வகையில் இருக்கும் ஆரோவில் கலாச்சார அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் அடையாளமாக உள்ளது. தன்னுடைய கட்டிடக்கலை வடிவமைப்பிற்காக பார்வையாளர்களைக் கவரும் மாத்ரிமந்திர் இந்நகரத்தின் முதன்மையான சுற்றுலா பகுதியாகும். இந்நகரத்திற்கு அருகிலிருக்கும் ஆரோ கடற்கரை சுற்றுலாப் பயணிகள் ஓய்வெடுக்க மிகவும் ஏற்ற இடமாகும்.

பாண்டிச்சேரி அருங்காட்சியகம்

பாண்டிச்சேரி வருபவர்கள் தவறாமல் பார்க்க வேண்டிய இடமாக பாண்டிச்சேரி அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியக் காட்சிப் பகுதியில் சில சிற்பங்களும், அரிக்கமேடு பகுதிகளில் கண்டறியப்பட்ட ரோமானிய தொல்பொருள் சின்னங்களும் வைக்கப்பட்டுள்ளன. காலத்தால் அழியாத தொல்பொருள் சின்னங்களின் வைப்பறையாகவே இந்த மியூசியம் உள்ளது. இந்த மியூசியத்தில் சோழர்கள் மற்றும் பல்லவ மன்னர்களின் அரிய பித்தளை மற்றும் கற்சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கே பாண்டிச்சேரி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட கூடுகளின் தொகுப்புகளும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மியூசியத்திற்கு வரும் பார்வையாளர்கள் காலனீய ஆதிக்கத்தின் சுவடுகளை அறிந்து கொள்ளவும் மற்றும் பிரெஞ்சு காலனி ஆட்சி முறையைப் பற்றி தெளிவாக புரிந்து கொள்ளவும் முடியும். நீங்கள் பாண்டிச்சேரிக்கு வந்து விட்டீர்களென்றால் பாரதி பூங்காவில் உள்ள பாண்டிச்சேரி மியூசியத்தை எளிதில் அடைந்திட முடியும்.

Karthik Easvur

பாண்டிச்சேரி - சீர்காழி

பாண்டிச்சேரி - சீர்காழி


பாண்டிச்சேரியில் சுற்றுலாவை முடித்து விட்டு பயணத்தை தொடங்குனீர்கள் என்றால் 85 கிலோ மீட்டர் தொலைவில் கடலூர், சிதம்பரத்தினைக் கடந்து சீர்காழியை அடையலாம். இதன் இடைப்பட்ட தொலைவில், கடலூரில் செயிண்ட் டேவிட் கோட்டை, பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள், நிலக்கரி சுரங்கங்கள், கடல் துறைமுகம், பூவராக சுவாமி கோவில், தேவநாத சுவாமி கோவில், சில்வர் பீச் உள்ளிட்டவை இந்த பயணத்தை மேன்மையடையச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. குறிப்பாக, இங்கே அமைந்துள்ள கோவில்களும், கடற்கரைகளும் நீங்கள் வாலிப நண்பர்களுடன் பயணம் செய்தாலும சரி, குடும்பத்தினருடன் பயணம் செய்தாலும் சரி, அனைத்து தரப்பினரையும் ஈர்க்கும் வல்லமை கொண்டவை.

பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்

கடலூரின் முக்கிய சுற்றுலாத் தலமாக பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் விளங்குகின்றன. உலகிலேயே இரண்டாவது மிகப் பெரியதாகவும் மற்றும் ஆரோக்கியமானதாகவும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள் கருதப்படுகின்றன. இது குறுக்கும் நெடுக்குமாக இங்கு செல்லும் எண்ணற்ற சிறு சிறு தீவுக்கூட்டங்கள் உள்ளூர் மற்றும் இடம்பெயரும் வெளிநாட்டு பறவைகளின் தங்குமிடமாக அமைந்திருக்கின்றன. வாட்டர் ஸ்னிப்ஸ், ஹெரான், பெலிகன், கார்மோரான்ட்ஸ் மற்றும் ஈக்ரெட் ஆகியவை அவற்றில் சில குறிப்பிடத்தக்க பறவை வகைகள் ஆகும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும் மற்றும் நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரையிலும் உலகெங்கிலும் உள்ள பறவை ஆர்வலர்களை ஈர்க்கும் இடமாக இந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளுக்குள் படகுப் பயணம் செய்து சுற்றிப் பார்க்க முடியும் என்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு அம்சமாகும்.

செயிண்ட் டேவிட் கோட்டை

கெட்டிலம் நதிக்கரையில் அமைந்துள்ள செயிண்ட் டேவிட் கோட்டையை ஆங்கிலேயர்கள் மராத்தியர்களிடமிருந்து விலைக்கு வாங்கி சில வருடங்களுக்கு தங்குளுடைய தலைமையகமாக பயன்படுத்தி வந்தனர். அப்பொழுது இந்த கோட்டை ராபர்ட் கிளைவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த கோட்டையை பிரெஞ்சுப் படைகள் 1758 மற்றும் 1782-ம் ஆண்டுகளில் கைப்பற்றிய போதும் ஆங்கிலேயர்கள் திரும்பப் பெற்றனர். அழிவுகள் மற்றும் வரலாற்று சின்னங்களை தாங்கிக் கொண்டு கெட்டிலம் நதிகளில் நின்று கொண்டிருக்கும் இந்த கோட்டையை கண்டிப்பாக நீங்கள் தவறவிட்டுவிடக் கூடாது.

நிலக்கரி சுரங்கங்கள்

கடலூரில் உள்ள நெய்வேலியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைந்துள்ளன. இங்கு கிடைக்கும் நிலக்கரி எரிபொருள் இரண்டு அனல் மின் நிலையங்களின் மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலக்கரியில் இருந்து உரங்கள் மற்றும் குக்கிங் கோல் ஆகியவையும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மிகப்பெரிய திறந்தவெளி அச்சு சுரங்கத்தையுடைய இடமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி மையம் விளங்குகிறது. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தை அறிய ஆவலாக நீங்கள் இருந்தால் கண்டிப்பாக இவ்விடத்திற்கு சென்று வரலாம்.

பூவராக சுவாமி கோவில்

கடலூரில் அடிமைந்துள்ள பூவராக சுவாமி கோவிலானது எட்டு பெரும் வைணவ தலங்களில் ஒன்றாகும். ஸ்ரீ முஷ்ணத்தில் நாயக்கர் வம்சத்தவர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் அவர்களின் படங்களை முற்றத்திலுள்ள ஒவ்வொரு தூணிலும் தாங்கி நிற்கிறது. இந்த கோவிலின் சிறப்பம்சமாக அதன் தோற்றம் சொல்லப்படுகிறது. இதன் வராக அவதார தோற்றம் சுயமாக உருவானது என்று பொருள்படும் ஸ்வயம் வியாக்டஷேத்ரா என்று வழங்கப்படுகிறது. இந்த கோவிலின் உள்ளே புருஷசுகாரா என்னும் மண்டபமும் உள்ளத. 17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த தேர் வடிவ மண்டபத்தை குதிரைகளில் போர்வீரர்கள் இழுத்துச் செல்ல, பின்னால் யானைகள் தொடர்ந்து வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேவநாத சுவாமி கோவில்

பழமையான வைணவ கோவிலான தேவநாத சுவாமி கோவிலில் மூலவராக தேவநாயக சுவாமி அருள்பாலிக்கிறார். ஸ்ரீ திருமங்கை மன்னன் என்ற ஆழ்வார் இந்த திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளார். ஒளஷதகிரி மலை மற்றும் கெட்டிலம் ஆறுகளிடையே இந்த கோவில் அமைந்துள்ளது. புகழ் பெற்ற வைணவ துறவியான ஸ்ரீ ராமானுஜர் இந்த கோவிலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இப்பிராந்தியத்தில் கங்கை நதியுடன் தொடர்புடைய இடமாக இந்த கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீ ராமர், ஸ்ரீ ராஜகோபாலன், ஆண்டாள், ஸ்ரீ வேணுகோபாலன் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கான சன்னதியும் உள்ளது.

சில்வர் பீச்

தமிழகத்தில் இரண்டாவது நீளமான கடற்கரையாக கருதப்படும் சில்வர் பீச் ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. கடலூர் நகரத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும் இந்த கடற்கரை மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். குதிரையேற்றம் மற்றும் படகு சவாரி உட்பட பல பொழுதுபோக்குகளை தரும் இடமாக இந்த கடற்கரை விளங்குகிறது. சிறார்களிள் மனதை கவரும் வகையில் ஒரு படகு கூடமும், பூங்காவும் இந்த கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

rajaraman sundaram

சிதம்பரம்- சீர்காழி

சிதம்பரம்- சீர்காழி


கடலூரிரைக் கடந்து அடுத்த ஒருசில கிலோ மீட்டர்களில் சீர்காழிக்கு முன்னதாக சிதம்பரத்தை அடைந்து விடலாம். தில்லைக்காளியம்மன் கோவில், திருவேட்களம், தில்லை நடராஜர் கோவில், நடராஜர் கோவில் உள்ளிட்டவை பிரசிதிபெற்ற ஆன்மீகத் தலங்களாகும்.

Nataraja

சீர்காழி - தஞ்சாவூர்

சீர்காழி - தஞ்சாவூர்


வங்காளவிரிகுடா கடற்கரை ஓரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்துக்களின் புகழ்பெற்ற புனித ஆன்மீகத்தலம் சீர்காழி. வரலாற்றுத் தொன்மை வாய்ந்த அமைதியான நகரமான இது தென்னிந்தியப் பாரம்பரியம், சடங்குகள், சம்பிரதாயம் மற்றும் கலாச்சாரத்தினைப் பறைசாற்றி நவீன உலகத்தின் மாற்றத்தினையும் ஏற்றுக்கொண்டு வளர்ந்துவரும் ஒரு கிராமமாகவும் உள்ளது. இங்க அமைந்துள்ள கோவில்களுக்கு தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடும் அளவுக்கு சீர்காழி மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமாகும். சீர்காழியில் இருந்து சரியாக 100 கிலோ மீட்டர் தொலைவில்தான் தஞ்சாவூர் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய கலாச்சார பூமியான தஞ்சை மாவட்டமானது தமிழ் திராவிட தென்னிந்தியாவை ஆண்ட மூவேந்தர்களுள் சோழர்கள் ஆண்ட மண்ணாகும். ராஜராஜசோழனால் கட்டப்பட்ட பிருகதீஸ்வரர் ஆலயம் எனப்படும் தஞ்சை பெருவுடையார் கோவில் இந்நகரத்தின் கலாச்சார அடையாளமாக வீற்றிருப்பதோடு உலகளாவிய ஈர்ப்பையும் பெற்றுத்தருகிறது.

Parthiban B

தஞ்சாவூர் - திருச்சி

தஞ்சாவூர் - திருச்சி


தஞ்சாவூரில் இருந்து பிள்ளையார்பட்டி, துவாக்குடி வழியாக சுமார் 59 கிலோ மீட்டர் தொலைவில் தான் திருச்சி அமைந்துள்ளது. அல்லது, திருவையாறு, பூண்டி, ஸ்ரீரங்கம் வழியாகவும் திருச்சையை அடையலாம். திருச்சியில் உள்ள கல்லணை, முக்கொம்பு அணை, மலைகோட்டை உச்சி பிள்ளையார் கோவில், செயின்ட் ஜோசப் தேவாலயம், குணசீலம் உள்ளிட்டவை முக்கிய சுற்றுலாத் தலங்களாக திருச்சியில் அறியப்படுகிறது. நேரம் இருப்பின் இப்பகுதிகளுக்கு எல்லாம் பயணம் மேற்கொள்ளலாம்.

Vensatry

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X