» » செட்டிநாடு- பேரைக்கேட்டாலே பசிக்குமே

செட்டிநாடு- பேரைக்கேட்டாலே பசிக்குமே

Posted By: Staff

செட்டிநாடு, தென் தமிழக மாவட்டங்களான புதுக்கோட்டை, காரைக்குடி,சிவகங்கை மற்றும் ராமநாதபுர மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். 19ஆம் நூற்றாண்டின் பிற்ப்பகுதியில் இந்தப்பகுதிகளில் அதிகமாக வாழ்ந்த வாணிபத்தொழில் செய்து வந்த 'நகரத்தார்' எனப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கு சென்று வாணிபம் செய்து பெரும் பொருள் சேர்த்தனர். பின்னர் அவர்கள் 20ஆம் நூற்றாண்டில் திரும்பவும் செட்டி நாட்டுக்கே  திரும்பி வந்து விடுகின்றனர்.

இன்று நாம் பார்த்து வியக்கும் செட்டிநாட்டு அரண்மனைகளும், வீடுகளும் இப்படி வந்தவர்களால் கட்டப்பட்டதே. செட்டிநாட்டில் செய்யப்படும் உணவுகள் உலகப்பிரபலமானவை . வாருங்கள் பிரமாண்டமான வீடுகளையும், மணக்க மணக்க இருக்கும் சுவையான உணவுகளையும் கொண்ட  செட்டிநட்டைப்பற்றி அறிந்து கொள்வோம்.

செட்டிநாடு ருசி:

செட்டிநாடு ருசி:

செட்டிநாடு உணவு வகைகளில் மிகவும் பிரபலமானவை செட்டிநாட்டு சிக்கன் குழம்பு தான். தமிழ்நாட்டுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இதை சுவைப்பதற்காகவே செட்டிநாட்டு பகுதிகளுக்கு வருகின்றனர். புகைப்படம்: Charles Haynes

செட்டிநாடு ருசி:

செட்டிநாடு ருசி:

செட்டிநாட்டு உணவுகள்.
புகைப்படம்: @agentcikay

செட்டிநாடு ருசி:

செட்டிநாடு ருசி:

செட்டிநாட்டு உணவுகள்.
புகைப்படம்: Sonja Pieper

செட்டிநாடு கட்டிடக்கலை:

செட்டிநாடு கட்டிடக்கலை:

செட்டிநாட்டில் இருக்கும் அரண்மனைகளும் வீடுகளும் தனித்துவமான வடிவமைப்பை கொண்டவை. மிகப்பெரிய முற்றங்கள், தேக்கு மரங்களில் இளைத்து செய்யப்பட்ட மரத்தூண்கள், செட்டிநாட்டிலேயே தயாராகும் பிரத்யேக கற்கள் பதித்த தரைகள் என இவை மலைப்பூட்டுபவை.
புகைப்படம்: Ashwin Kumar

செட்டிநாடு கட்டிடக்கலை:

செட்டிநாடு கட்டிடக்கலை:

தமிழ் நாட்டில் அதிக திரைப்பட படப்பிடிப்புகள் நடக்கும் இடங்களில் ஒன்றாக இந்த வீடுகள் உள்ளன. கிராமத்து பின்னணியில் வந்த அனேக தமிழ் படங்களில் குறைந்தபட்சம் 2-3 காட்சிகளிலாவது இந்த வீடுகள் நிச்சயம் இடம் பெரும். புகைப்படம்: Jean-Pierre Dalbéra

ஆத்தங்குடி டைல்ஸ்:

ஆத்தங்குடி டைல்ஸ்:

செட்டிநாட்டில் ஆத்தங்குடி என்னும் இடத்தில் தயாரிக்கப்படும் டைல்ஸ்கள் பல வண்ண நிறங்களில், பல வகையான முறைகளில் செட்டிநாட்டில் கிடைக்கும் மண்ணைக்கொண்டே தயாரிக்கப்படுகிறது. இயந்திரங்களால் தயாரிக்கப்படும் டைல்ஸ்கள் வந்துவிட்டாலும் கைகளால் தயாரிக்கப்படும் இந்த ஆத்தங்குடி டைல்ஸ்களை இன்றும் மக்கள் விரும்புகின்றனர்.

புகைப்படம்: Jean-Pierre Dalbéra

 கண்டாங்கி! கண்டாங்கி!

கண்டாங்கி! கண்டாங்கி!

செட்டிநாட்டில் பிரபல்யமான விஷயங்களுள் முக்கியமானது கண்டாங்கிப் புடவை. பலவண்ண நிறங்களில், ஆச்சர்யமூட்டும் டிசைன்களில் இவை கிடைக்கின்றன. இதன் கண்ணைப்பறிக்கும் வண்ணங்களும், லேசான எடையுமே இதை பெண்கள் விரும்பி அணிவதற்கு காரணமாக இருக்கிறது. கையால் நெய்யப்படும் இப்புடவைகள் இன்றும் காரைக்குடி, புதுக்கோட்டை பகுதிகளில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.

புகைப்படம்: Simply CVR

செட்டிநாடு

செட்டிநாடு

தமிழ் நாட்டுக்குள்ளேயே ஒரு மினி தமிழ்நாடு போன்ற இந்த செட்டிநாட்டுக்கு வாய்ப்புக்கிடைத்தால் தவறாமல் ஒருமுறை சென்று வாருங்கள். புகைப்படம்: Natesh Ramasamy