Search
  • Follow NativePlanet
Share
» »கைலாய யாத்திரை செல்லும் இந்திய பயணிகள் மீது வெறுப்பை உமிழும் சீனா – எகிறிய டிக்கெட் விலை!

கைலாய யாத்திரை செல்லும் இந்திய பயணிகள் மீது வெறுப்பை உமிழும் சீனா – எகிறிய டிக்கெட் விலை!

சிவபெருமானை அனுதினமும் வணங்கும் எவருக்குமே வாழ்வில் ஒரு முறையேனும் அவர் குடிகொண்டு வாழும் கைலாயத்திற்கு யாத்திரை சென்று வந்திட வேண்டும் என்ற ஆசை இருக்கும். 'ஈசன் அருள் இல்லையெனில் எவரும் அந்த மண் மிதித்திட முடியாது' என்று கூறுவார்கள்! மிகவும் புனிதமான யாத்திரையாக கருதப்படும் கைலாய யாத்திரைக்கு ஆண்டின் குறிப்பிட்ட மாதங்களில் (ஜூன்-செப்டம்பர்) மட்டுமே செல்லுவதற்கு அனுமதி கிடைக்கும். அது போல இந்த ஆண்டிற்கான யாத்திரை தொடங்கும் நேரம் தான் இது. கைலாஷ் மானசரோவர் யாத்திரையில் இருந்து குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் வெளிநாட்டு யாத்ரீகர்களை விலக்கி வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சிக்கலான விதிமுறைகளை சீன அரசாங்கம் விதித்துள்ளது. இது இந்திய யாத்ரீர்கர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன அரசாங்கம் விதித்த இந்த தேவையற்ற நிபந்தனைகளால் இந்தியர்கள் கூடுதலாக சில லட்சங்கள் செலுத்த வேண்டுமாம்!

kailashyatracover

உலகெங்கிலும் இருந்து யாத்ரீகர்களை ஈர்க்கும் கைலாயம்

உலக மக்களுக்கு பெரும்பாலும் சிவபெருமானின் இருப்பிடமாக அறியப்படும் கைலாய மலை, இந்துக்களுக்கு மட்டுமின்றி ஜைனர்கள் மற்றும் பௌத்தர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புனித யாத்திரை ஸ்தலமாகும். வ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மானசரோவரின் அழகையும் பக்தியையும் அனுபவிக்க வருகிறார்கள். கைலாஷ் மலைக்கு பயணம் செய்வது உடல் ரீதியாக மிக மிக கடினமானது. இருப்பினும், அங்கிருந்து நாம் பார்க்கக்கூடிய பிரமிக்க வைக்கும் காட்சிகளும் அதைச் சுற்றியுள்ள நிலப்பரப்பும் நாம் கடந்து வந்த கஷ்டங்களை காணாமல் போக வைக்கின்றன.

கடினமான கைலாய யாத்திரை பயணம்

நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழியை பொருத்து கைலாஷ் மானசரோவர் பயணம் காத்மாண்டு அல்லது லக்னோவிள் தொடங்கும். அங்கிருந்து, நேபாளத்தின் எல்லை நகரமான ஹில்சாவுக்கு யாத்ரீகர்கள் பயணித்து, பின்னர் திபெத்தின் எல்லையை கடந்து செல்ல வேண்டும். திபெத்திய பீடபூமியின் கரடுமுரடான நிலப்பரப்பு வழியாக பேருந்து அல்லது ஜீப்பில் பயணம் தொடர்கிறது, வழியில் பல்வேறு புனித தலங்களில் நிறுத்தப்படும். அதோட இறுதியாக மானசரோவர் ஏரியை யாத்ரீகர்கள் அடைவார்கள். பல புனித மடங்களால் சூழப்பட்டுள்ள மானசரோவர் ஏரியில் யாதீர்கர்கள் நீராடி கைலாய மலையை பார்த்து மனமுருகி வேண்டி யாத்திரையை முடிக்கலாம்.

kailashyatra1

மூன்றில் ஏதேனும் ஒரு வழியை தேர்ந்தெடுத்து நீங்கள் பயணிக்கலாம்

உத்தரகாண்டில் அமைந்துள்ள லிபுக் கணவாய் வழியாக நீங்கள் சென்றால், இங்கு மலையேற்றம் மேற்கொள்ளப்படுகிறது மற்றும் ஒரு நபருக்கு கிட்டத்தட்ட ரூ.1.6 லட்சம் செலவாகும். சிக்கிமில் உள்ள நாது லா கணவாய் வழியாக செல்லும் பாதை ஒரு நபருக்கு சுமார் ரூ.2 லட்சம் செலவாகும். வாகனம் செல்லக்கூடியதாக இருப்பதால் மலையேற்றம் செய்ய முடியாத வயதானவர்களுக்கு இந்த பாதை பொருத்தமானது. காத்மாண்டு வழியாக பயணிப்பது மூன்றாவது பாதையாகும், இதற்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. இந்த மூன்று வழிகளில் ஏதேனும் ஒன்று தேர்ந்தெடுத்து பயணித்தாலும் பயணம் முடிய குறைந்தபட்சம் 14 மற்றும் அதிகபட்சம் 21 நாட்கள் ஆகும். 2019 ஆம் ஆண்டில், 31,000 இந்தியர்கள் புனித யாத்திரை சென்றனர். அதன் பிறகு இப்பொழுதே யாத்திரை தொடங்கியுள்ளது.

விதிகளை கடுமையாக்கிய சீனா

2023 ஆண்டிற்கான கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சீனா ஆக்கிரமித்துள்ள திபெத்தில் கைலாஷ் மலை அமைந்துள்ளதால் சீன அரசிடம் நாம் அனுமதி வாங்குவது அவசியம். மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் மூடப்பட்ட கைலாஷ்-மானசரோவர் யாத்திரைக்கான விசாவை சீனா வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை பெய்ஜிங் மிகவும் கடுமையான விதிகளை வகுத்துள்ளது. இதனுடன், பல வகையான பயணக் கட்டணங்களும் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளன.

kailashyatra

டபுள் மடங்காக உயர்ந்த கட்டணம்

சீனா விதித்த புதிய விதிகள் படி, இந்திய குடிமக்கள் பயணத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1.85 லட்சம் செலவழிக்க வேண்டும். ஏற்கனவே ரூ90,000 செலுத்தி யாத்திரை மேற்கொண்ட மக்கள் இப்போது இருமடங்காக கட்டணம் செலுத்த வேண்டும். .யாத்ரீகர் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி அல்லது உதவியாளரை உதவிக்காக வைத்திருந்தால், அவர்கள் கூடுதலாக $300 அதாவது ரூ.24 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் 'புல் சேதப்படுத்தும் கட்டணம்' என்று அழைக்கப்படுகிறது. பயணத்தின் போது, கைலாஷ் மலையைச் சுற்றியுள்ள புற்கள் சேதமடைகின்றன, இது பயணிகளால் ஈடுசெய்யப்படும் என்று சீனா வாதிடுகிறது.

kailashyatra1

இந்தியர்களுக்கு செக் வைத்த சீனா

ஒவ்வொரு பயணிகளும் காத்மாண்டு தளத்திலேயே தங்களின் தனிப்பட்ட அடையாளத்தைப் பெற வேண்டும். இதற்காக, கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேனிங் இருக்கும். நேபாள சுற்றுலா ஆபரேட்டர்கள் கூறுகையில், தி காத்மாண்டு போஸ்ட் படி, வெளிநாட்டு யாத்ரீகர்கள், குறிப்பாக இந்தியர்கள் நுழைவதைக் கட்டுப்படுத்த கடுமையான விதிகள் செய்யப்பட்டுள்ளன. அதே போல விசாவை பெறவும் நீங்கள் நேரில் தான் செல்ல வேண்டுமாம், ஆன்லைனில் தரப்படாது என்றும் சீனா தெரிவித்துள்ளது.

இவை அனைத்துமே இந்திய யாத்ரீகர்களை குறி வைத்தே செய்யப்பட்டது என்று ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?
Best Regards,

More News

    Read more about: kailash yatra travel news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+