Search
  • Follow NativePlanet
Share
» »ஒரு மினி சாக்லேட் டூர்

ஒரு மினி சாக்லேட் டூர்

By Staff

ஓவ்வொரு வருடமும், பண்டிகைகள், விஷேச தினங்கள் - அன்னையர் தினம், காதலர் தினம் என்று பல வகையான கொண்டாட்டங்களில் நாம் மகிழ்கிறோம். அந்த வகையில், சமீபகாலமாக, இளைஞர்களிடம் வரவேற்பு பெற்று வரும் ஒரு விஷேச தினம் - உலக சாக்லேட் தினம். ஜூலை 7, உலகம் முழுதும் சாக்லேட் தினமாக கொண்டாடப்படுகிறது. 400 வருடங்களுக்குமுன் ஐரோப்பா கண்டத்தில் சாக்லேட் அறிமுகமானதை நினைவுகூறும் வகையில் இந்த தினம் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஒரு மினி சாக்லேட் டூர் செல்வோம்!

Chocolate

Photo Courtesy : Milan Stankovic

ழுகா சாக்லேட் கஃபே - பாண்டிச்சேரி - Zuka Chocolate Cafe

பாண்டிச்சேரியில், அன்னை ஆசிரமம், மணக்குள விநாயகர் கோவிலுக்கு அடுத்து மிக பிரபலமானது இந்த சாக்லேட் கஃபே. தொடங்கிய சில‌ வருடங்களில், ஒட்டுமொத்த குழந்தை, இளைஞர், சுற்றுலா பயணிகள் கூட்டத்தையும் தன்வசம் ஈர்த்து கொண்டது.

சாக்லேட் பகோடாக்கள், மடகாஸ்கர் சாக்லேட், சாக்லேட் குச்சிகள், புளுபெர்ரி சாக்லேட், சாக்லேட் பானங்கள் என எண்ணற்ற சாக்லேட் வகைகள் இருக்கின்றன. சிறிய கடையாக இருந்தாலும், மேல்சுவரில் அழகான சாக்லேட் பட்டாம்பூச்சிகளின் வடிவமைப்பு, நேர்த்தியான உள்கட்டமைப்பு, கொடுக்கப்படும் சாக்லேட் ஸ்புன்கள் என படு ரசனையான கஃபே.

எம் & என் சாக்லேட் அருங்காட்சியகம், ஊட்டி.

ஊட்டிக்கும் சாக்லேட்டுக்கும் உள்ள தொடர்பு உலகறிந்தது. ஆனால், முழுக்க முழுக்க சாக்லேட்டிற்கு ஒரு அருங்காட்சியகம் இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா ? ஆம், ஊட்டி-மைசூர் சாலையில் இருக்கும் இந்துநகரில் அமைந்திருக்கும் எம் & என் சாக்லேட் அருங்காட்சியகம், குட்டீஸ்களின் மத்தியில் படு பிரபலம். சாக்லேட்டை முறையாக செய்வதெப்படி என்று சொல்லித் தருகிறார்கள். இது போக, குழந்தைகள் பார்த்து ரசிப்பதற்கு பல வகையான சாக்லேட் சிற்பங்கள் இருக்கின்றன. நீங்கள் வாங்க விரும்பும், வீட்டில் செய்யப்பட்ட ஊட்டி சாக்லேட்டுகளுக்கு என்று ஒரு கடை இருக்கிறது.

சாண்டிஸ் சாக்லேட், சென்னை.

தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம் இடங்களில் இருக்கும் இந்த சாக்லேட் கஃபே சென்னை ஜோடிகளின் கனவுப் பிரதேசம். 36 வயதினிலே, ஜோதிகாவின் மகள் சாப்பிடும் Death by Chocolate என்ற கேக் இங்கு படு பிரபலம். இந்தக் கடையின் மற்றுமொரு சிறப்பு: சிறு கேக்குகள், குக்கீகள்.

ஊட்டி சாக்லேட்ஸ், பெங்களூர்.

பெங்களூரில் இருக்கிறீர்கள். ஆனால், ஊட்டி சாக்லேட்டுகள் வேண்டுமா ? இதற்கு பல கடைகள் இருக்கின்றன. ஆனால், எந்தக் கடையில் அசல் ஊட்டி சாக்லேட்டுகள் கிடைக்கும் என்று குழப்பமா ? கோரமங்களா 4th Block'ல் இருக்கும் ஊட்டி சாக்லேட்ஸ் நிறுவனம் உங்களுக்கு உதவுகிறது. ஊட்டியிலிருந்து வரவழைக்கபட்ட சாக்லேட்டுகளை உங்களுக்குத் தருகின்றன. பட்டர்ஸ்காட்ச், பாதாம் சாக்லேட்டுகள்,புதினா சாக்லேட்டுகள்,ஆரஞ்சு,ப்ளாக் கரண்ட் சாக்லேட்டுகள் என பல வகையும் இங்கு கிடைகின்றன.

ஜஸ்ட் ட்ரஃப்ஸ், பெங்களூர் - Jus' Trufs.

இது சாக்லேட்டு கடை அல்ல மாறாக சாக்லேட் செய்யும் நிறுவனம். இந்தியாவிலேயே இவர்களதான் சாக்லேட் டூர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். பெங்களூர் ஜக்கூர் சாலையில் அமைந்திருக்கிறது. பார்வையாளர்கள், இவர்களின் நிறுவனத்திற்குச் சென்று, தாங்களும், சாக்லேட் செய்யும் முறையில் கலந்து கொள்ளலாம்,

  • இந்த சாக்லேட் டூர், ஒவ்வொரு சனிக்கிழமை மதியமும், சிறப்பு வேண்டுகோளின் பேரில் முன்பதிவு செய்யப்படுகிறது.
  • பார்வையாளர்கள், சாக்லேட் செய்முறை பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • அவர்கள் விரும்பும் சுவையில், வடிவமைப்பில் சாக்லேட்டுகள் செய்து மகிழலாம்.
  • இதைத் தவிர, இந்நிறுவனம், சாக்லேட் செய்முறை, கேக்குள் செய்வது பற்றி, பீட்சா செய்முறை என்று பல வகுப்புகள் நடத்துகின்றன. பள்ளிகளுக்கும் சென்று குழந்தைகளையும் இந்த சுவாரஸ்யமான செயல்பாடுகளில் ஈடுபடுத்துகின்றனர்.
Jus_Tru

Photo Courtesy: Official Website

ஒரு சாக்லேட் விரும்பியாக எவரும் தவறவிட கூடாது இடம் இந்த Jus' Trufs.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+