» »கோயம்புத்தூர் - சென்னை : இந்த ரூட்ட ஃபாலோ பண்ணுனா 8 மணிநேரத்துல சென்னை போயிடலாம்...!

கோயம்புத்தூர் - சென்னை : இந்த ரூட்ட ஃபாலோ பண்ணுனா 8 மணிநேரத்துல சென்னை போயிடலாம்...!

Posted By: Sabarish

"ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க, நான் கோயம்புத்தூர் ஆளுங்க"-ன்னு நம்ம கோயம்புத்தூர குறித்தாலும் சரி, "சேன்ஸே இல்ல, சேன்ஸே இல்ல... நம்ம சென்னை போல வேற ஊரே இல்ல"ன்னு தமிழ்நாட்டோட அடையாளமான சென்னைய குறித்து பேசினாலும் சரி நமக்கே தெரியாம ஒரு உள்ளுணர்வு ஒருவிதமான பெருமைய நமக்கு கொடுக்கும். தமிழ்நாட்டோட பெரிய மேன்செஸ்டர் நகரங்களே இது ரெண்டும் தான. தமிழ்நாட்டுல இருந்து அன்றாடம் எத்தனை ஆயிரம் பேரோ சென்னைக்கு பயணம் செய்யுராங்க. ஆனா, கோயம்புத்தூருக்கும், சென்னுக்கும் இடையிலான உறவு மற்ற மாவட்டங்களை விட கொஞ்சம் கூடுதலாகவே இருக்குதுன்னுதான் சொல்லனும்.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

PC : Booradleyp1

இந்தியாவில் தென் மாநிலமான தமிழ்நாட்டுல உள்ள ஒரு முக்கிய நகரம். பரப்பளவு அடிப்படையில் இது இந்த மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். நகரமயமாக்கல் அடிப்படையில் இந்தியாவின் பதினைந்தாவது நகரமான இது, பெருநகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பெரிய தொழில் துறை மையமாக கோயம்புத்தூர் உள்ளதால் "தென் இந்தியாவின் மேன்செஸ்டர்" என்றும் பெருமையுன் அழக்கப்படுகிறது.

சிறப்புகள்

சிறப்புகள்

PC : jamal nazar

ஜவுளி, தொழில்நுட்ப ரீதியாக கோயம்புத்தூர் தமிழகத்தின் முக்கியமான நகரம் ஆகும். புராதான கைவினைத் தொழில்கள் மற்றும் புதிய தொழிநுட்பக் கண்டுபிடிப்புகள் ஒன்றாக கைகோர்த்து செல்லும் இடம் நம்ம ஊரு. இந்த ஊரு மண் வாசனையிலும் தனி மரியாதை கலந்து இருக்கும்.

சென்னை

சென்னை

PC : Sathyaprakash01

சென்னை இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் ஒன்று. ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலாச்சார கேந்திரமாக சுதந்திர காலம் தொட்டு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டினுடைய தலைநகரமாக சென்னை இருந்தாலும் கேரளா, தெலுங்கு மற்றும் கன்னட பாரம்பரியங்களும் இங்கு கலந்திருப்பதை ஒரு அற்புதமான தேசிய வரலாற்று பரிமாணம் எனலாம்.

மதராஸி

மதராஸி

PC : Gak2016

ஒருகாலத்தில் டெல்லிவாசிகள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் யாவரையும் ‘மதராஸி' என்றே அழைக்கும் காலமும் இருந்தது. திருவனந்தபுரமும், பெங்களூரும், ஹைதராபாத்தும் தான் அண்டை மாநிலங்களின் தலைநகரங்கள் என்றாலும் அம்மாநிலங்களை சேர்ந்த ஒருசாராருக்கு மனதளவில் சென்னைதான் தலைநகரமாக விளங்கிவருகிறது என்பதும் மறுக்க முடியாத ஒரு உண்மை.

கோயம்புத்தூர் - சென்னை

கோயம்புத்தூர் - சென்னை

Map

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு பல லட்சக் கணக்கானோர் அன்றாடம் பயணம் மேற்கொண்டாலும் கோயம்புத்தூர் - சென்னைக்கு இடையேயான உறவு முன்கூட்டியே நாம் அறிந்தது. தொழில் ரீதியாகவும், கல்லூரி மேற்படிப்பு, ஏற்றுமதி என கோயம்புத்தூருக்கும் சென்னைக்கும் இடையே மட்டுமே நாள் ஒன்றுக்கு 70 சதவிகிதம் வர்த்தகம் நடைபெறுவதாக புள்ளிவிபரங்கள் அடிப்படையில் தெரியவருகிறது.

பயண விரும்பிகள்

பயண விரும்பிகள்

PC : Rsrikanth05

குறிப்பாக, சென்னையில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காணவும், கோயம்புத்தூரில் உள்ள சுற்றுலாத் தலங்களையும் காணவுமே ஏராளமானோர் சாலை வழியாக பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி இந்த இரண்டு பெரிய நகரங்களுக்கும் இடையே சாலை வழியாக பயணம் மேற்கொள்ள நீங்கள் விரும்பினால் வழக்கமான சாலையை தவிர்த்து புது அனுபவமளிக்கும் மாற்றுச் சாலையில் பயணிக்களாம் வாங்க.

கோயம்புத்தூர் - தர்மபுரி வழி

கோயம்புத்தூர் - தர்மபுரி வழி

Map

கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்ல விரும்புவோர் தர்மபுரி வழியாக பயணம் மேற்கொள்லாம். இந்த சாலை வழக்கமான பயணம் போல இல்லாமல் உங்களுக்கு புதுவிதமான பல அனுபவங்களை வழங்கும். கோயம்புத்தூரில் இருந்து சுமார் 520 கிலோ மீட்டர் பயணித்தால் சென்னை மாநகரத்தை அடைந்துவிடலாம். இந்த இடைப்பட்ட தூரத்தில் என்னவெல்லாம் இருக்கு, எப்படிச் செல்ல வேண்டும் என பார்க்கலாமா ?.

கோவை - ஈரோடு

கோவை - ஈரோடு

PC : Cnu

கோயம்புத்தூரில் இருந்து அவினாசி வழியாக சுமார் 100 கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலை 544-யில் பயணித்தால் ஈரோடு மாவட்டத்தை அடையலாம். இதன் இடைப்பட்ட தூரத்தில் உள்ள அவினாசி லிங்கேஸ்வரர் ஆலயம் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்ற கோவிலாகும். இதையடுத்து ஈரோடு செல்லும் சாலை முழுக்க தொன்மையும், சிறப்புகளும் மிக்க பன்னாரி அம்மன் கோவில், நசியனூர் அம்மன் கோவில் என ஏராளமான ஆன்மீகத் திருத்தலங்கள் உள்ளன.

ஈரோடு - தர்மபுரி

ஈரோடு - தர்மபுரி

PC : Pavalarvadi

ஈரோட்டில் இருந்து சங்ககிரி, ஓமலூர் வழியாக சுமார் 113 கிலோ மீட்டர் மாநில நெடுஞ்சாலையில் பயணித்தால் தர்மபரியை அடைந்து விடலாம். ஈரோடு அடுத்து ஒரு சில கிலோ மீட்டர்களிலேயே வரும் காவிரி ஆற்றுப் பாலம், பள்ளிபாளையம் அருகே உள்ள ஸ்ரீ கலிய வரதராஜ பெருமாள் கோவில், சங்ககிரி அருகே தீரன் சின்னமலை மண்டபம் உள்ளிட்ட தலங்கள் உங்களது நீண்ட தூர பயணத்தில் சற்று ஓய்வெடுக்க உதவும்.

தர்மபுரி - வேலூர்

தர்மபுரி - வேலூர்

PC : wikipedia

தர்மபுரியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 48 வழியாக சுமார் 171 கிலோ மீட்டர் கிருஷ்ணகிரி வழியாகவும் அல்லது 170 கிலோ மீட்டர் கல்லவி- திருப்பத்தூர் சாலை வழியாகவும் பயணிக்கலாம். இருப்பினும், திருப்பத்தூர் சாலையில் நீங்கள் பயணிக்கும் போது ஏலகிரி உள்ளிட்ட மலைத் தொடர்கள் குறுக்கே உள்ளதால் பயண நேரத்தை அதிகரிக்கச் செய்யும். காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி சாலை நெடுஞ்சாலை என்பதால் போக்குவரத்து இடையூறு இன்றி நேரவிரையத்தை குறைக்கும். தொடர்ந்து, வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக விரைவில் வேலூரை அடையலாம்.

வேலூர் - சென்னை

வேலூர் - சென்னை

PC : Saravankm

வேலூர் - காஞ்சிபுரம்- சென்னை.. கோயம்புத்தூரில் இருந்து துவங்கிய உங்களது பயணத்தில் என்னவெல்லாம் தவறவிட்டீர்களோ அது அத்தனையும் இந்த வேலூர் - சென்னை சாலையில் அனுபவித்து விடலாம். வேலூரை அடுத்து வரும் ஜவ்வாது மலை, ஆற்காடு கோட்டை, பாலாறு பாலம், காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூர் கோவில், செம்பரம்பாக்கம் ஏரின்னு இந்த 137 கிலோ மீட்டர் பயண தூரத்தில் ஆன்மீகத் தலங்களும், சுற்றுலாத் தலங்களும் கொட்டிக் கிடக்கின்றன. இந்த பயணம் உங்களது திட்டமிடலையும், நீங்கள் பயணம் செய்யும் வாகனத்தை பொறுத்தும் மாறுபடலாம். எனினும், இந்த பாதையை பயன்படுத்தினால் பேருந்து, ரயில்களில் செல்லும் நேரத்தை விட குறைந்த காலத்திலேயே சென்னையை அடையலாம்.

கோவை - விழுப்புரம் - சென்னை

கோவை - விழுப்புரம் - சென்னை

PC : Manivanswiki

கோயம்புத்தூரில் இருந்து தர்மபுரி வழியாக எப்படி எளிதில் சென்னையை அடைந்தோமோ அதேப் போன்றுதான் இந்த விழுப்புரம் சாலையும். கோவையில் இருந்து ஈரோடு, சேலம், நெய்வேலி, விழுப்புரம் வழியாக சுமார் 510 கிலோ மீட்டர் பயணித்தால் சென்னையை அடையலாம். இந்த இடைப்பட்ட தூரத்தில் சேலம் அடுத்த வாழப்பாடி சாலை, வண்டிபாளையம் அடுத்துள்ள மழை அம்மன் கோவில் என ஏராளமான ஆன்மீகத் திருத்தலங்களும், பசுமைக் காடுகளும் உங்களது பயணத்தை மேன்மையடையச் செய்யும்.

கோவை - திருச்சி - சென்னை

கோவை - திருச்சி - சென்னை

PC : Vensatry

மேலே கண்ட சாலைகளைப் போல இல்லாமல் கோயம்புத்தூரில் இருந்து திருச்சி - சென்னை சாலை சற்று கூடுதல் நேரமே பிடிக்கும். இருப்பினும், நண்பர்களுடன் காரிலோ, அல்லது பிற வாகனங்களிலோ பயணம் செய்யவுள்ள நீங்கள் ஒரு முழு சுற்றுலா சென்ற அனுபவத்தினைப் பெற இந்த சாலை முற்றிலும் சரியான தேர்வாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆற்றங்கரை சாலை

ஆற்றங்கரை சாலை

PC : Ssriram mt

கோயம்புத்தூரில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு செல்ல சுமார் 547 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டும். இதன் இடைப்பட்ட தூரத்தில் கரூரில் இருந்து திருச்சி ஸ்ரீ ரங்கம் செல்லும் சாலையோரம் மூலுக்க காவிரி ஆற்றன் அழகை கண்டு ரசித்தபடியே பயணம் செய்யலாம். இதையடுத்து விழுப்புரம் முன்னதாக வரும் தென்பெண்ணை ஆற்றுப் பாலம், செங்கல்பட்டு முன்பு பாலாறு, இதற்கு இடையே திண்டிவனம் என சுற்றுலாத் தலங்களை நிறைந்த பகுதியாகவே இந்த சாலை அமைந்துள்ளது. இந்த பயணத்தின் போது வெகுதூரம் பயணிக்க வேண்டியிருப்பதால் வாகன இஞ்சின் சூட்டைத் தணிக்க ஆங்காங்கே நிறுத்தி ஓய்வெடுத்துச் செல்வது சிறந்தது. நல்ல பயணத்திற்கு வாழ்த்துக்கள்.

என்ன ரெடியாகிட்டீங்களா ?

என்ன ரெடியாகிட்டீங்களா ?

PC : dixon

இந்த மூன்று வழித்தடங்களுமே கோயம்புத்துரில் இருந்து சென்னை செல்லும் உங்களது பயணத்தை மேன்மையடையச் செய்யும். இருப்பினும், நண்பர்களுடனோ, குடும்பத்தினருடனோ கார், இருசக்கர வாகனங்கள் மூலம் இரவு நேர பயணம் செய்தலை தவிருங்கள். ஏனெனில், இதில் பெரும்பாலான சாலைகள் தேசிய நெடுஞ்சாலை என்பதால் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகளவில் இருக்கும். பின்ன என்னங்க, இந்த டூட்டையும் ஒரு முறை ட்ரைப் பன்னிதான் பாருங்களேன்.