Search
  • Follow NativePlanet
Share
» »தாய் மசாஜ் விட சிறப்பான மசாஜ்... அட நம்ம ஊர் பக்கத்துலயே!

தாய் மசாஜ் விட சிறப்பான மசாஜ்... அட நம்ம ஊர் பக்கத்துலயே!

By Udhaya

இந்தியாவின் பல்வேறு இடங்களில் குறிப்பாக இயற்கையான நீரோட்டங்கள் இருக்கும் பகுதிகளில் மசாஜ் சென்ட்டர்கள் வெட்டவெளியில் இருப்பது வழக்கம். இவை தாய் மசாஜ் சென்ட்டர்கள் அளவுக்கு வசதிகளை வழங்காவிட்டாலும், இயற்கையான மூலிகைகளை கண்முன்னே கொண்டே மசாஜ் செய்து உடலை புத்துணர்வு பெற செய்கின்றன. நமக்கு மசாஜ் என்றாலே கேரளாதான் நினைவுக்கு வரும். ஆனால் அதுமாதிரியான சொல்லப்போனோல் அதைவிட சிறந்த மசாஜ்கள் நம் கண்முன்னே நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

குற்றாலம்

குற்றாலம்

தென்இந்தியாவின் ஸ்பா' என்று பிரபலமாக அறியப்படும் குற்றாலம், தென்னிந்திய மாநிலமான தமிழ் நாட்டில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது கடல் மட்டத்திலிருந்து 167 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குற்றாலம், எண்ணற்ற சுகாதார ஓய்வு விடுதிகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட நீர்வீழ்ச்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எண்ணற்ற அருவிகளும் மற்றும் ஆறுகளும் இவ்விடத்தின் கண்களை கவரும் அழகை மேலும் அதிகரிக்க செயவதால் இன்று மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

Ruthran BalaGanesh

சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

இந்த நகரத்தின் அழகை பறைசாற்றுவது மட்டுமின்றி, இந்நகரமானது அதன் அழகிய நீர்வீழ்ச்சிகளான பேரருவி, சிற்றருவி, செண்பகதேவி நீர்வீழ்ச்சி, தேனருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, பழைய குற்றால அருவி, மற்றும் புலி அருவி போன்ற நீர்வீழ்ச்சிகளுக்கு புகழ்பெற்றது. மேலும் இந்நகரில் பல்வேறு கோயில்கள் உள்ளன. அவை திருகுற்றால நாதர் கோவில், திருமலை கோவில், குமரன் கோவில், காசி விஸ்வ நாதர் கோவில், தக்ஷினாமூர்த்தி கோவில், பாப நாசம் உலகாம்பிகை மற்றும் சிவன் கோவில், ஐயப்பன் கோவில் முதலியன.

இந்நகரத்தை சுற்றியுள்ள மற்ற கண்கவர் இடங்கள் தெற்கு மலை எஸ்டேட், ஐந்தருவியை ஒட்டி அமைந்துள்ள படகு இல்லம், மற்றும் பழைய குற்றால அருவி. பாம்பு பண்ணையும், மீன் பண்ணையும் பேரருவிக்கு அருகில் அமைந்துள்ளன மற்றும் சிறுவர்களுக்கான பூங்காக்களும் நிறைய உள்ளன. குற்றாலம் என்ற பெயர் உள்ளூர் மக்களால் இன்னும் பயன்படுத்தப்பட்டு வரும் குத்தாலம் என்ற பெயரின் திரிபாகும்.

இந்த அருவி முக்திவேலி, நன்னகரம், கந்தபிதூர், தீர்த்தபுரம், திரு நகரம் மற்றும் வசந்த பேரூர் என்ற பல பெயர்களால் அறியப்படுகிறது.

Vijay S

புராணக்கதை

புராணக்கதை

இந்த நகரத்தோடு தொடர்புடைய ஒரு பிரபலமான புராணக்கதை உள்ளது. சிவன் கைலாசமலையில் நடைபெறும் தனது திருகல்யானத்திற்கு செல்வதற்காக தெற்கில் முண்டியடித்த பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த அகஸ்திய முனிவரை அனுப்பினார் என்று நம்பப்படுகிறது. குற்றாலத்திலுள்ள பெரும்பாலான கோவில்கள் சிவனிற்கு அர்பணிக்கப்பட்டுள்ளன. பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் பல்வேறு வரலாறுகள் இக்கோவில்களில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

Vijay S

சீசன்களும் விடுதிகளும்

சீசன்களும் விடுதிகளும்

சமீப காலமாக குற்றாலம் ஒரு பிரபலமான சுற்றுலா தலமாக மாறி வருவதால் உலக தரம் வாய்ந்த தங்கும் விடுதிகள் இங்கு எழுப்பபட்டு வருகின்றன. குறிப்பாக சீசன் அதிகமாக உள்ள நேரங்களில் முன் பதிவு செய்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறது. இந்நகரம் கேரளா மற்றும் தமிழ் நாடு மாநிலங்களுக்கு அருகில் இருப்பதால் இந்த இரு மாநிலங்களின் வழியாக எளிதில் அணுக முடியும்.

Sunciti _ Sundaram

குற்றாலம் செல்வோம் வாருங்கள்

குற்றாலம் செல்வோம் வாருங்கள்

குற்றாலத்தில் இருந்து 85 கி. மீ தொலைவில் உள்ள தூத்துக்குடி குற்றாலம் அருகிலுள்ள நெருங்கிய விமான நிலையம் ஆகும். சென்னை மதுரை மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் செங்கோட்டை. எனினும் திருநெல்வேலி இதன் அருகிலுள்ள பெரிய ரயில் சந்திப்பாகும். தமிழ் நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு நகரங்களில் இருந்து பேருந்து மூலமாகவும் குற்றாலத்தை அடைய முடியும்.

Madhavan Muthukaruppan

பயண வழிகாட்டி

பயண வழிகாட்டி

குற்றாலத்துக்கு சென்னை, பெங்களூர், கொச்சியிலிருந்து எப்படி வந்தடைவது என்பதை காண்போம்

விமானம் மூலமாக வருவதென்றால் எந்த ஊரிலிருந்தும் நீங்கள் வந்து சேர வேண்டிய இடம் திருவனந்தபுரம். அல்லது மதுரைக்கு வந்தும் குற்றாலத்தை எளிதில் அடையலாம்.

பயண வழிகாட்டி 1 - சென்னையிலிருந்து குற்றாலம்

சென்னையிலிருந்து ரயில் மூலம் திருநெல்வேலியை அடைந்து அங்கிருந்து குற்றாலத்துக்கு செல்வது சிறந்த வழியாகும்.

வழித்தடம் 1

பேருந்து அல்லது சுய வாகனம் என்றால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து திருச்சி வழியாக பின் மதுரை வந்து, அங்கிருந்து திருமங்கலம், ராஜபாளையம் வழியாக குற்றாலத்தை அடையலாம்

வழித்தடம் 2

சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரையை அடைந்து, மதுரையிலிருந்து திருநெல்வேலி வழியாக தென்காசிக்கு பயணிக்க வேண்டும். அல்லது திருநெல்வேலியிலிருந்தே குற்றாலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியை அடுத்த ஊர் குற்றாலம் ஆகும்.

வழித்தடம் 3

மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லாமல், விமான நிலையம் வழியாக, அருப்புக்கோட்டை, எட்டயபுரம், கோவில் பட்டி வழியாக சங்கரன்கோயிலை அடைந்து அங்கிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் குற்றாலத்தை அடையலாம்.

பயண வழிகாட்டி 2 - பெங்களூருவிலிருந்து குற்றாலம்

பயண வழிகாட்டி 2 - பெங்களூருவிலிருந்து குற்றாலம்

பெங்களூருவிலிருந்து வருவது மிகவும் சுலபமானதாகும். ஏனென்றால் தங்க நாற்கரச் சாலையில் பயணித்து மதுரை வந்து அங்கிருந்து குற்றாலத்தை அடைவது எளிமையான வழித்தடமாகும்.

வழித்தடம் 1

பேருந்து அல்லது சுய வாகனம் என்றால், பெங்களூர் - கன்னியாகுமரி (தங்க நாற்கரச் சாலை) தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து சேலம் வழியாக பின் மதுரை வந்து, அங்கிருந்து திருமங்கலம், ராஜபாளையம் வழியாக குற்றாலத்தை அடையலாம்

வழித்தடம் 2

பெங்களூருவிலிருந்து சேலம் வழியாக மதுரையை அடைந்து, மதுரையிலிருந்து திருநெல்வேலி வழியாக தென்காசிக்கு பயணிக்க வேண்டும். அல்லது திருநெல்வேலியிலிருந்தே குற்றாலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியை அடுத்த ஊர் குற்றாலம் ஆகும்.

வழித்தடம் 3

மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லாமல், விமான நிலையம் வழியாக, அருப்புக்கோட்டை, எட்டயபுரம், கோவில் பட்டி வழியாக சங்கரன்கோயிலை அடைந்து அங்கிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் குற்றாலத்தை அடையலாம்.

கொச்சியிலிருந்து குற்றாலம்

கொச்சியிலிருந்து குற்றாலம்

கொச்சியிலிருந்து குற்றாலத்துக்கு மொத்தம் மூன்று வழித்தடங்களில் பயணிக்கலாம்

வழித்தடம் 1

பேருந்து அல்லது சுய வாகனம் என்றால், கொச்சியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 66, 11, 5, 8 ஆகியவற்றில் பயணித்து தென்மலா வழியாக குற்றாலத்தை அடையலாம்

வழித்தடம் 2

கொச்சியிலிருந்து தேனி வழியாக மதுரையை அடைந்து, மதுரையிலிருந்து திருநெல்வேலி வழியாக தென்காசிக்கு பயணிக்க வேண்டும். அல்லது திருநெல்வேலியிலிருந்தே குற்றாலத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தென்காசியை அடுத்த ஊர் குற்றாலம் ஆகும்.

வழித்தடம் 3

மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லாமல், விமான நிலையம் வழியாக, அருப்புக்கோட்டை, எட்டயபுரம், கோவில் பட்டி வழியாக சங்கரன்கோயிலை அடைந்து அங்கிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் குற்றாலத்தை அடையலாம்.

திருவனந்தபுரத்திலிருந்து

திருவனந்தபுரத்திலிருந்து

திருவனந்தபுரத்திலிருந்து 100 கிமீ பயணம் செய்தால் எளிதில் குற்றாலத்தை அடையலாம். வழியில் தென்மலாவையும் ரசித்துவிட்டு வரலாம். இங்கு அருகில் காணவேண்டிய இடங்களாக, பொன்முடி, அகத்தியர் மலை, பாபநாசம்,தேன்மலா, செங்கோட்டை, நெய்யார் காடுகள், குற்றாலத்தின் பல அருவிகள் காணப்படுகின்றன.

ஆயில் மசாஜ்

ஆயில் மசாஜ்

ஆயில் மசாஜ் எனப்படுபவை மூலிகை எண்ணெய் கொண்டு செய்யப்படும் மசாஜ்கள் ஆகும். உடலை நீவி விட்டு, உடலின் பல குறைபாடுகளை போக்கமுடியும் என்கிறது ஆயுர்வேதம். இந்த ஆயுர்வேதத்தைத் தேடி பலர் கேரளத்துக்கு செல்கிறார்கள். ஆனால் அதே மாதிரியான மசாஜ்கள் குற்றாலத்திலேயே கிடைக்கிறது. இதுமாதிரி வட தமிழகத்தில் இருப்பவர்கள் ஒக்கேனக்கல் செல்லலாம். அங்கும் மசாஜ்கள் பிரபலம்.

இதற்காக தாய் மசாஜ் தான் உலகின் சிறந்தது என்று பலர் வாதிடலாம். ஆனால் இயற்கை முறையில், நம் மண்ணில் நடைபெறும் இதுபோன்ற மருத்துவங்கள்தான் நம் உடலுக்கு ஏற்றதாக அமையும். முழு பலனும் கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 எப்போ வரலாம்

எப்போ வரலாம்

குற்றாலம் வருவதற்கு சிறந்த பருவம் குற்றாலத்தை சுற்றிப்பார்க்க சிறந்த பருவம் ஜூலை முதல் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட பருவமழை மற்றும் குளிர்கால பருவங்கள் ஆகும். கோடைகாலம் வெப்பமாகவும் வறண்டும் காணப்படுவதால் முக்கிய சுற்றுலா ஈர்ப்பான அருவிகள் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படும். பருவ மழை மாதங்களும் அதே போல் குளிர்கால மாதங்களும் மிகவும் இனிமையாக இருக்கும். ஆண்டின் இந்த பருவ மழை காலங்களில் காணப்படும் மழைச்சாரலும், இதமான காற்றும் இந்த காலகட்டத்தில் இந்நகரை சுற்றிப்பார்பதற்கு மேலும் வசீகரிப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.

Jeya2lakshmi

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X