Search
  • Follow NativePlanet
Share
» »தண்டோபாவுக்கு ஓர் மலையேற்றம் செல்வோம் வாருங்கள்!

தண்டோபாவுக்கு ஓர் மலையேற்றம் செல்வோம் வாருங்கள்!

தண்டோபாவுக்கு ஓர் மலையேற்றம் செல்வோம் வாருங்கள்!

By Udhay

சாங்க்லி நகரத்திலிருந்து 25 நிமிட பயண தூரத்தில் இந்த தண்டோபா மலை வாசஸ்தலம் அமைந்துள்ளது. தண்டோபா மலை மீது அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் தண்டோபா மலை வனச்சரகத்தையும் உள்ளடக்கியுள்ளது. இந்த மலை வாசஸ்தலம் பல புராதன மலைக் கோயில்களையும் வரலாற்று சின்னங்களையும் கொண்டுள்ளது. மேலும், இங்குள்ள வனச்சரகப் பகுதியில் பல தாவர வகைகளும் காட்டுயிர்களும் நிறைந்துள்ளன. காட்டுயிர் ரசிகர்கள், மலையேற்றப்பிரியர்கள் மற்றும் இயற்கை ரசிகர்களுக்கு ஏற்ற ஸ்தலமாக இந்த வனச்சரகம் பிரசித்தமாக அறியப்படுகிறது.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

எங்குள்ளது

எங்குள்ளது

சாங்க்லி நகரத்திலிருந்து 25 நிமிட பயண தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது.

பச்சை பசேலென்று மரம் செடி கொடிகளென இயற்கை எழில் சூழ அமைந்திருக்கும் இந்த மலைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.

sangli.nic.in

எப்படி அடைவது

எப்படி அடைவது

விமானம் மூலமாக

இந்த இடத்துக்கு அருகிலுள்ள விமான நிலையம் 250 கிமீ தொலைவில் இருக்கும் புனே சர்வதேச விமான நிலையம் ஆகும்.

ரயில் மூலமாக

மிராஜ் ரயில் நிலையம் இதன் அருகிலுள்ள ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்து வெறும் 30கிமீ தூரத்தில் இது அமைந்துள்ளது.

பயண வழிகாட்டி

பயண வழிகாட்டி

கோல்காபூரிலிருந்து 2 மணி நேர பயணத்தில் எளிதாக செல்லும் பயண வழிகாட்டி இது.

கோல்காபூரிலிருந்து தண்டோபா

மொத்த தொலைவு - 77கிமீ

பயண நேரம் - 2 மணி நேரம் தோராயமாக

சுய வாகனத்தில் பயணிக்க விரும்புபவர்கள் கோல்காபூர் - சாங்க்லி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணா நதியைக் கடந்து அங்கலி வரை பயணித்து பின் குங்கேஸ்வர் - தட்டேவாடி சாலையில் சென்று மிராஜ் வழியாக தண்டோபாவுக்கு செல்லமுடியும்.

மாருதி ரோடு

மாருதி ரோடு

சாங்க்லி நகரத்தின் முக்கியமான ஷாப்பிங் சென்டர் இந்த மாருதி ரோடு ஆகும். நகரத்தின் முக்கியப்பகுதியான இங்கு அருமையான மராத்தி உணவுகளும் கிடைக்கும்.இந்த சாலையின் ஒரு பகுதியில் சாங்க்லி நகரத்தின் பெரிய துணி மார்க்கெட் காணப்படுகிறது. பலவிதமான துணி வகைகளும், ரெடிமேட் ஆடைகளும் இந்த மார்க்கெட் பகுதியில் கிடைக்கின்றன.

மீரஜ் தர்க்கா

மீரஜ் தர்க்கா

காஜா மீர்சாஹேப் தர்கா அல்லது மீரஜ் தர்க்கா என்று அழைக்கப்படும் இந்த தர்கா சாங்க்லி நகரத்திலேயே உள்ளது. 500 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டுள்ள இந்த தர்கா அதன் தொன்மையை தன் தோற்றத்திலேயே கொண்டுள்ளது. சர்வ மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இந்த தர்க்காவுக்கு எல்லா மதங்களைச் சேர்ந்த மக்களும் விஜயம் செய்கின்றனர். இங்கு வருடாந்திரமாக நடத்தப்படும் இசைத்திருவிழா பிரசித்தமாக அறியப்படுகிறது.

Kothariutkarsh88

சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம்

சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம்


சாங்க்லி நகரத்தின் அருகில் உள்ள இந்த சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக உள்ளது. இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடிக்கும்படியாக இங்கு பலவகை தாவரவகைகளும் உயிரினங்களும் காணப்படுகின்றன. சாங்க்லி நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள இந்த சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் மனித முயற்சியில் காட்டுப்பிரதேசங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. 10.87 ச.கி.மீ பரப்பளவிற்கு பரந்து காணபடும் இந்த சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயத்தில் சிறுத்தைகள், மான்கள், காட்டுப்பசு, மயில் மற்றும் முயல்கள் போன்றவை வசிக்கின்றன. பலவகை பூச்சி வகைகள் மற்றும் ஊர்வன விலங்குகளையும் இங்கு காணலாம். இந்த சரணாலயத்திற்கு அருகிலேயே சங்கமேஷ்வர் கோயிலும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Kothariutkarsh88

பஹுபாலி மலைக்கோயில்கள்

பஹுபாலி மலைக்கோயில்கள்

இந்த பஹுபாலி மலைக்கோயில்கள் சாங்க்லிக்கு மிக அருகில் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. இந்த கோயில்கள் அமைந்துள்ள மலையின் பெயராலேயே இவை அழைக்கப்படுகின்றன. இந்த கோயிலில் பளிங்கினால் ஆன 28 அடி உயர பஹுபாலி பௌத்தகுருவின் சிலை அமைந்துள்ளது. மேலும் இந்த கோயில் வளாகத்தில் 24 தீர்த்தங்கரர் சிலைகளும் காணப்படுகின்றன. பக்தர்களும் பயணிகளும் வருடம் முழுவதும் அதிக அளவில் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

Read more about: travel hills
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X