Search
  • Follow NativePlanet
Share
» »தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகராக சோழர்கள் கட்டிய மற்றுமொரு அற்புதம் எது தெரியுமா?

தஞ்சை பெரிய கோயிலுக்கு நிகராக சோழர்கள் கட்டிய மற்றுமொரு அற்புதம் எது தெரியுமா?

By Staff
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

Arian Zwegers

தமிழர் பெருமையை உலகறியச் செய்ததில் சோழர்களின் பங்கு மகத்தானது. ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் வானுயர்ந்து நிற்கும் கோயில்களே அதற்கு சான்று. சோழர்களின் கட்டிடக்கலை வெளிப்பாட்டின் உச்சமாக சொல்லப்படுவது முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெருவுடையார் கோயிலாகும்.  

அதற்கு நிகராக 12ஆம் நூற்றாண்டில் கும்பகோணத்தில் கட்டப்பட்டது தான் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் ஆகும். தமிழகத்தின் மிகச்சிறந்த சுவர்ச் சிற்பங்கள் இருக்கும் கோயில் என்று இதனை சொல்லலாம். 

கோயில் வரலாறு: 

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

 ஐராவதேஸ்வரர் கோயில் இரண்டாம் ராஜராஜ சோழன் கட்டியிருக்கிறான். இம்மன்னன் கங்கை கொண்ட சோழபுரத்தை விடுத்து தாராச்சுரத்தை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்ய முடிவெடுத்த பிறகே இக்கோயிலை எழுப்பியிருக்கிறான்.  

ஐராவதேஸ்வரர் கோயில் - பெயர் காரணம்:  

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

Vinoth Chandar

தேவர்களின் அரசனான இந்திரனின் யானையின் பெயர் ஐராவதம் ஆகும். துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த ஐராவதம் இக்கோயில் குளத்தில் நீராடி சிவபெருமானின் அருளால் சாபம் நீங்கப்பெற்றதாகவும் அதனாலேயே ஐராவதேஸ்வரர் கோயில் என்று இத்திருத்தலம் பெயர்பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. 

சிற்பச் சொர்க்கம்:  

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

Balaji.B

தமிழகத்தில் இருக்கும் கோயில்களிலேயே இங்கு தான் அதிகளவிலான நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் இருக்கின்றன. இங்குள்ள தூண்களிலும், சுவர்களிலும் நாட்டிய முத்திரைகளும், தத்ரூபமான விலங்குகளின் உருவங்களும் தேர் போன்ற கற்சக்கரங்களும் இங்கே ஏராளமாக இருக்கின்றன.  

வேறங்கும் காணக்கிடைக்காத சிவனின் ரூபங்கள்: 

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

Rsp3282

ஐராவதேஸ்வரர் கோயிலில் வேறந்த கோயிலிலும் காணக்கிடைக்காத சிவபெருமானின் ரூபங்களாய் காணலாம். கிருஷ்ணனை போன்றே குழலூதும் சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் ஆகிய கோலங்களை நாம் இங்கே காணலாம்.   

ராஜ மண்டபம்:  

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

Varun Shiv Kapur

ஐராவதேஸ்வரர் கோயிலின் ராஜ மண்டபம் எனப்படும் மகாமண்டபம் ஒரு பக்கம் இங்கு சாபம் நீங்கப்பெற்ற ஐராவதம் யானையாலும், மறுபக்கம் குதிரைகளாலும் இழுக்கப்படுவது போல கட்டப்பட்டுள்ளது.  

இதர சிறப்புகள்: 

கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், மூன்றுமுகங்கள் மற்றும் எட்டுக்கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர், பலி பீடத்தின் அருகே உள்ள இசைப்படிகள், ராஜ மண்டபத்தின் நுழைவு வாயிலில் உள்ள மெல்லிய செருப்பு அணிந்த கண்ணப்ப நாயனாரின் அழகிய சிற்பம் போன்றவை இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலை பற்றிய மேலும் பல தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள். 

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more