» »டில்லி- ஜோத்பூர் ஒரு அருமையான ஹேப்பி பயணம் போலாம் வாங்க!!

டில்லி- ஜோத்பூர் ஒரு அருமையான ஹேப்பி பயணம் போலாம் வாங்க!!

Written By: Balakarthik Balasubramanian

ஒரு நீண்ட நெடிய வார விடுமுறையை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டுமென்றால் அதற்குத் தில்லியிலிருந்து ஜோத்பூரை தேர்ந்தெடுப்பது ஒரு அருமையானப் பொழுதுப்போக்குப் பயணம் என்று நாம் சொல்லலாம். அப்படி என்ன தான் இருக்கிறது ராஜஸ்தானில் என்பதனை இந்தக் கட்டுரையைப் படிப்பதன் மூலம், செல்லும் வழியில் நாம் ரசிக்கத்தக்கப் பகுதிகள் பற்றி இப்பொழுது தெரிந்துக்கொள்ளலாம்.

ராஜஸ்தானின் இரண்டாவதுப் பெரிய நகரம் ஜோத்பூர் ஆகும். இந்த நகரத்தி "சூர்ய நகரம்என்றும் அழைப்பர். ஆம், காலையில் எழும் கதிரவனை நாம் ஆச்சரியத்துடன் காண்பதனைப் போல் இங்கு இருக்கும் பற்பலக் கட்டிடங்களின் அற்புதத்தை ஆச்சரியத்துடன் பலரும் கண்டு செல்கின்றனர். பதினைந்தாம் நூற்றாண்டில் இருந்த ஒரு அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது, மெஹ்ரன்கார்ஹ் கோட்டைபோல கண்களுக்கு இதமானக் கட்டிடங்கள் நிறைய இங்கு உள்ளது. இங்குக் காணப்படும் வீடுகளின் நீல வண்ணச் சுவர்கள் காண்போர் மனதினைக் கொள்ளைக் கொள்ள செய்கிறது.

தில்லியிலிருந்து ஜோத்பூர் செல்வதற்கானத் தூரம் தோராயமாக 596 கிலோமீட்டர்கள் ஆகும். இந்த 596 கிலோமீட்டரைக் கடக்க நமக்கு சுமார் 9 மணி நேரம் 54 நிமிடங்கள் ஆகிறது. தில்லியிலிருந்து ஒரே நேர்க்கோட்டில் நாம் ஜோத்பூர் நோக்கி சென்றாலும், செல்லும் வழியில் காணப்படும் ஆடம்பர அழகுக் காட்சிகளை நாம் ஒருபோதும் பார்க்காமல் தவிர்த்து விடக் கூடாது. அதனால் வார விடுமுறையை சந்தோஷத்துடன் செலவழிக்க ஒரு அருமையான வழி தான் இந்த தில்லியிலிருந்து ஜோத்பூர் செல்லும் பயணம் என்பதனை நாம் நினைவில் கொள்ளவேண்டியது அவசியமாகும்.

அதுமட்டுமல்லாமல் தில்லியிலிருந்து ஜோத்பூர் செல்லும் வழியில், நாம் காணும் கம்பீரமான இயற்கைக் காட்சிகளும், ராஜஸ்தான் மக்களின் நாகரிகமும் நம் பயணத்தினை மேலும் இனிமையாக்குகிறது என்றேக் கூறவேண்டும்.

தில்லியிலிருந்து ஜோத்பூர் செல்லும் வழி:

தில்லியிலிருந்து ஜோத்பூர் செல்லும் வழி:

தி-ஜெயப்பூர் -அஜ்மீர் -பேவார் -பார் -நிமஜ் -பிலாரா -ஜோத்பூர். இந்த இடங்களை எல்லாம் நாம் கடந்து ஜோத்பூரினை அடைய, தோராயமாக 596 கிலோமீட்டர்கள் ஆகிறது.

தில்லியிலிருந்துப் புறப்பட்டு குர்கான் வழியாக, அதாவதுத் தேசிய நெடுஞ்சாலை 48 (அ) தேசிய நெடுஞ்சாலை 248A இன் வழியாக நாம் செல்வோமாயின் சவாய் மாதோபூரை நம்மால் அடைய முடியும். அதன் பிறகு ஓசியன் வழியாக கண்களால் காணும் காட்சிகளை ரசித்துக்கொண்டே ஜோத்பூரினை அடையலாம்.

இந்தச் சாலைவழிப் பயணத்தை ரசிப்பதற்க்கு நமக்கு தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை தேவைப்படுகிறது. இரவு நேரத்தில் நாம் தங்குவதற்கு சவாய் மாதோபூர் அல்லது அதன் அருகில் இருக்கும் ஓசியன், உதவி செய்கிறது. இந்த வழியில் எண்ணற்ற கோட்டைகளையும், மாளிகைகளையும், வரலாற்று கட்டிடக்கலைகளையும், அருங்காட்சியகங்களையும் நம்மால் காணமுடிகிறது. இதனை மட்டும் தான் காணமுடியுமா என்றுக் கேட்டால், இன்னும் காணலாம் எனப் பார்ப்பதற்கு ஏதுவான இடங்களின் பட்டியலும் மேலும் நீள்கிறது.

ஆரம்பிக்கும் இடம்: தில்லி
இறுதியாக காணப்போவது: ஜோத்பூர்

johnson

இந்தப் பகுதியைப் பார்ப்பதற்கு ஏதுவான ஒருக் கால நிலை:

இந்தப் பகுதியைப் பார்ப்பதற்கு ஏதுவான ஒருக் கால நிலை:

அக்டோபர் முதல் மார்ச் வரை நம்மால் இந்தப் பகுதிகளை எந்த ஒரு சிரமமுமின்றிக் காணமுடிகிறது. எது எப்படியாக இருந்தாலும், நம் திட்டங்களுக்கு ஏற்றவாறு இந்தப் பகுதிகளின் தன்மையும் மாறுகிறது. ஆம், அக்டோபர் முதல் பிப்ரவரி வரை வரக்கூடிய காலத்தின் உச்ச நிலைக் காரணமாக வானிலையின் ஏற்ற இறக்கம், சுமார் 10 டிகிரி செல்சியஸிலிருந்து 23 டிகிரி செல்சியஸ் வரைக் காணப்படுகிறது. இந்த வானிலையின் ஏற்ற இறக்கத்தால் நம்முடையப் பயணமும் இன்னும் சிறப்பாக அமைகிறது என்றேக் கூற வேண்டும்.

சிறந்த வழி மற்றும் முக்கிய நிறுத்தங்கள்:

தில்லியிலிருந்து சவாய் மாதோபூர் சென்று, ஓசியன் வழியாக ஜோத்பூரை அடையும் வழியில் பல அருமையானக் காட்சிகள் நம் கண்களில் தென்படுகிறது. இந்த வழியில் நம் பயணத்திற்கு ஓய்வுத் தந்து நிறுத்தக்கூடிய முக்கியமான இடங்களாக, ஜெய்ப்பூர், சவாய் மாதோபூர், அஜ்மீர், புஷ்கார், பேவார், ஓசியன் ஆகியவை அமைந்துள்ளது. இவற்றைக் கடந்து நாம் இறுதியாக ஜோத்பூரை அடைந்து அங்கிருக்கும் அழகிய இடங்களை ரசிக்கலாம்.

அதேபோல், நம் நேரத்திற்கு ஏற்றவாறு சில இடங்களைத் தவிர்த்து ஜோத்பூரை அடையலாம். இருப்பினும், ஜெய்ப்பூர், சவாய் மாதோபூர் மற்றும் ஓசியனை ஒருபோதும் நம்மால் செல்லும் வழியில் தவிர்க்க இயலாது. ஒருவேளை 2 நாட்களுக்கு மேல் நம் பயணத் திட்டம் இருக்குமாயின் இன்னும் பல புதிய இடங்களைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டு அவற்றின் அழகைக் கண்டு மகிழலாம். ஆம், ஜெய்சால்மர், பாலி, பாங்கார்க் மற்றும் உதய்ப்பூர் போன்ற பகுதிகளைப் பட்டியலில் சேர்த்து நம் நேரத்தை இத்தகைய அழகிய இடங்களின் வாயிலாக செலவிட்டு சந்தோஷம் அடையலாம். இங்கு வசதிமிக்கப் பெரிய மாடமாளிகைகளும், தங்குவதற்கு வசதியான ஓய்வு விடுதிகளும் நிறையவேக் காணப்படுகிறது.

Travis Wise

இளஞ்சிவப்பு நகரம்”

இளஞ்சிவப்பு நகரம்”

ஜெய்ப்பூர்:
தூரம்: தில்லியிலிருந்து 268 கிலோமீட்டர்கள்
நெடுஞ்சாலை வழி: தேசிய நெடுஞ்சாலை 48

ஜெய்ப்பூரின் "இளஞ்சிவப்பு நகரம்" என்றழைக்கப்படும் அற்புதமான அரசக் கட்டிட கலைச் சுவடுகள், தலைநகரமான ராஜஸ்தானில் காணப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டின் ஆமீர் கோட்டை மற்றும் ஜந்தர் மந்தர் பெரிய நகரத்தின் அரண்மனைகளாக இன்றும் திகழ்கிறது. "காற்று வீசும் அரண்மனை" என அழைக்கப்படும் ஹவால் மாளிகையையும் இந்தப் பகுதியில் காண மறந்துவிடாதிர்கள். இந்த நகரம், நம் வாகனத்துக்கு ஓய்வு தந்துப் புத்துணர்ச்சியுடன் நடந்து சென்று அருங்காட்சியகங்கள், முற்றங்கள், அரண்மனைகள், தோட்டங்கள் என நம் கண்களால் காணும் அருமையான காட்சிகளின் மூலம் மேலும் புத்துணர்ச்சி அடைய உதவுகிறது.

4

அஜ்மீர்:

அஜ்மீர்:


தூரம்: தில்லியிலிருந்து 392 கிலோமீட்டர்கள்
நெடுஞ்சாலை வழி: தேசிய நெடுஞ்சாலை 48

செயற்கை ஏரி என செல்லமாக அழைக்கப்படும் அன்னா சாகர் ஏரி, ஆரவல்லி மலைகளால் சூழ்ந்து நம் கண்களை இதமாக்குகிறது. ஆஜ்மீர் ஷரிப் தர்கா, ராஜஸ்தானில் மிகவும் பிரசித்திப்பெற்ற ஒரு வழிப்பாட்டுத் தளமாகும். அதுமட்டுமல்லாமல், அஜ்மீரில் இன்னும் நிறைய இடங்கள் நம் மனதினை மேலும் மெருகூட்டி நம் பயணத்தை இன்பமானதொரு பயணமாக மாற்றுகிறது. நரேலி ஜெயின் ஆலயம், அதை தின் கா ஜோன்புரா, நசியன் ஜெயின் ஆலயம், மற்றும் சாவித்திரி ஆலயம் ஆகியவை ஆஜ்மீரின் மிகவும் பிரசித்திப்பெற்ற வழிபாட்டு ஸ்தலமாகும்.

Singh92karan

சவாய் மாதோபூர்:

சவாய் மாதோபூர்:

தூரம்:

i. தில்லியிலிருந்து ஜெய்ப்பூர் வழியாக 362 கிலோமீட்டர்கள்
(ராஜஸ்தான் மாநில நெடுஞ்சாலை 25இன் வழியாக)
ii. தில்லியிலிருந்து ஜெய்ப்பூர் வழியாக 375 கிலோமீட்டர்கள்
(தேசிய நெடுஞ்சாலை 48இன் வழியாக)

நெடுஞ்சாலை வழி:

ராஜஸ்தான் மாநில நெடுஞ்சாலை 25
(அ)
தேசிய நெடுஞ்சாலை 48

நம்முடையப் பயணத்தை தேசிய நெடுஞ்சாலை 248 A அல்லது தேசிய நெடுஞ்சாலை 48இன் வழியாக ஆரம்பிக்கலாம். ஆம், குர்கானிலிருந்துப் புறப்பட்டு 381 கிலோமீட்டர்கள் பயணம் செய்தால் சவாய் மாதோபூரை நாம் அடையலாம். இந்த 381 கிலோமீட்டரைக் கடக்க நமக்கு 7 மணி நேரம் தேவைப்படுகிறது. சவாய் மாதோபூரில் வாகனத்தினை நிறுத்தும் நாம், ரந்தம்போர் தேசியப் பூங்காவை கண்டுக்களிக்கலாம். அதுமட்டுமல்லாமல் புலிகளின் சரணாலயம் என அழைப்படும் இந்தப் பூங்கா, பிரசித்திப்பெற்ற தேசிய பூங்காவினுள் ஒன்றாக இந்தியாவில் திகழ்கிறது. மாலைப் பொழுதின் இயற்கை அழகினைக் கண்டு ரசிக்கும் நாம், இயற்கை அன்னையால் நமக்கு தரப்பட்ட சர்வால் ஏரியின் கொள்ளை அழகில் மயங்கி மனம் மகிழலாம். மேலும், ரந்தம்போர் கோட்டை மற்றும் காந்தர் கோட்டையும் இந்தப் பகுதியில் பார்ப்பதற்கு ஏதுவான அம்சங்களுடன் காணப்படுகிறது.

Indrapal Jangid

பேவார்:

பேவார்:

தூரம்: தில்லியிலிருந்து 442 கிலோமீட்டர்கள்
நெடுஞ்சாலை வழி: தேசிய நெடுஞ்சாலை 48

ராஜ்புதானா மாநிலத்தில் உள்ள மெட்வாடாவின் நிதித் தலைநகரமாக விளங்கும் ஒரு இடம் தான் பேவார் ஆகும். இதனை ஆலயம் மற்றும் யாத்திரை மையம் என்றும் அழைப்பர். நம்முடையப் பயணத்திற்கு அணைக்கட்டி தடுத்து, இங்குக் காணப்படும் பழைய விஷ்னு ஆலயம், சங்கத் மோட்சன் ஹனுமான், சுபாஸ் தோட்டம், நீல்காந்த் மாஹாதேவ் மற்றும் பல அற்புத இடங்களினை கண்டு செல்வது நம் பயணத்தை மேலும் இனிமையாக்குகிறது. நாம் அறிவால் ஆராய்ந்து ஆச்சரியப்படகூடிய வரலாற்று நகரமான பேவாரின் சந்தைகளும் ஷாப்பிங்க் பகுதிகளும் மிகவும் பேசப்படக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது.

Crunchyheart

ஓசியன் :

ஓசியன் :

தூரம்: தில்லியிலிருந்து 581 கிலோமீட்டர்கள்
நெடுஞ்சாலை வழி: தேசிய நெடுஞ்சாலை 48

ஓசியன் பகுதியில் காணப்படும் மஹாவிர் ஆலயம், காளிக் கோயில், சச்சிய மாதா ஆலயம், சூர்ய ஆலயம் என நாம் செல்லும் வழியில் காணப்படும் எண்ணற்ற ஆலயங்களும், யாத்திரை மையங்களும் நம் கண்களை நிலைப்படுத்தி பயணத்தையும் இனிமைப்படுத்துகிறது. அதனால், நாம் காண தவிர்க்க இயலாத இடங்களுள் ஒன்றாக, இந்த ஓசியன் பகுதியும் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது. இங்குப் பாலைவனத்தில் காணப்படும் ஒட்டக முகாமும், ஒட்டக சவாரியும், மணல் மேடு முகாமும் நம் மனதினை மென்மை அடைய செய்து நம் நேரத்தினை இந்த முகாமில் செலவிடவும் செய்கிறது.

Michael Gunther

ஜோத்பூர்:

ஜோத்பூர்:

தூரம்: தில்லியிலிருந்து 592 கிலோமீட்டர்கள்
நெடுஞ்சாலை வழி: தேசிய நெடுஞ்சாலை 48

இவ்வளவு இனிமையான இடங்களைக் கண்ட நம் கண்களும் மனமும் உற்சாகத்துடனும் அமைதியுடனும் செல்ல, மேலும் இனிமையாக்க நான் இருக்கிறேன் என இறுதியாக ஜோத்பூர் நம் கண்களுக்கு விருந்துப் படைக்க வருகிறது. ஆம், தில்லியிலிருந்து புறப்பட்ட நாம், இதுவரை தோராயமாக 592 கிலோமீட்டர்களை கடந்து வந்துள்ளோம். ஓசியனிலிருந்து ஜோத்பூர் சரியாக 67 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆம், பயணத் தொலைவு என்பது பாகுபாடு இல்லாமல் நாம் செல்லும் வழியையும், நிறுத்தும் இடங்களை பொருத்தே வேறுபடுகிறது.

ஜோத்பூரில் அற்புதமான பல கட்டிடக் கலை, பாரம்பரியம் மற்றும் சுதந்திரம் என இதயத்தினை வண்ணங்களால் வருடுகிறது. ஜோத்பூர், அரண்மனைகளின் மையமாகவும் விளங்குகிறது. இங்குக் காணப்படும் கோட்டைகளும், அருங்காட்சியகங்களும், ஏரிகளும், கலாச்சார பாரம்பரிய இடங்களும் நம் நேரத்தினை மேலும் இதமாக்குகிறது.

இங்குக் கண்களுக்குத் தென்படும் சிறந்த இடமான உமைத் பவான் அரண்மனை மற்றும் அருங்காட்சியகம், மெஹ்ரன்கார்ஹ் கோட்டை, கைலானா ஏரி, மணிக்கூண்டு, மண்டோர் பூங்கா, பல்சமந்த் ஏரி எனப் பற்பல இடங்களை நாம் தவிர்க்காமல் பார்க்க, நம் மனம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

மேலும் இங்குக் காணப்படும் வன சாகச சவாரி செய்யும் இடங்களான பிஷ்னாயின் கிராம சவாரி, சூரிய அஸ்தமனத்தின் போது செய்யும் குதிரை சவாரி, மச்சியா சவாரிப் பூங்கா, உமெத் உயிரியல் பூங்கா எனக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்கிறது.

ஜோத்பூரில் காணப்படும் ஒட்டக சவாரி தவிர்க்கக் கூடாத ஒரு சவாரியாக அமைகிறது. இங்குக் கிடைக்கும் உள்ளூர் உணவுகள் மற்றும் சமையலின் சுவை சாப்பிடும்பொழுது நம் நாக்கினை நெருடுகிறது என்றேக் கூற வேண்டும். இந்த உணவுகளை சாப்பிடும்பொழுது ஜோத்பூர் மக்களின் கலாச்சாரத்தினை பற்றி பெருமையுடன் பேசுக்கொண்டே சாப்பிடுவோர் எண்ணிக்கையே அதிகமென்றும் நாம் கூறலாம்.

Manuel Menal

Read more about: travel