Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இந்தியாவில் பிராமண்டமாக அமையவிருக்கிறது தெரியுமா!

உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இந்தியாவில் பிராமண்டமாக அமையவிருக்கிறது தெரியுமா!

உலகின் மிக உயரமான ரயில் பாலம், நீண்ட தரை பாலம், உலகின் மிக உயர்ந்த சிலை என இந்தியா பல்வேறு கட்டமைப்புகளில் அசத்தி வருகிறது. கூடுதலாக இப்போது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் யுகே யுஜீன் பாரத் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக மாறவிருக்கிறது.

1

அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் மோடி

சமீபத்தில், சுமார் 123 ஏக்கர் பரப்பளவில் ஐஎம்ஆர் 2,700 கோடி செலவில் உருவாக்கப்பட்ட சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை பிரதமர் திறந்து வைத்து, அதன் பெயரை 'பாரத் மண்டபம்' என பெருமையுடன் வெளியிட்டார். இந்த திறப்பு விழாவின் போது தான் யுகே யுஜீன் பாரத் தேசிய அருங்காட்சியகத்தை பற்றிய அறிவிப்பையும் வெளியிட்டார்.

தலைநகரில் பிராமண்டமாக அமையவிருக்கும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம்

உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக கருதப்படும் யுகே யுஜீன் பாரத் தேசிய அருங்காட்சியகம் டெல்லியில் கட்டப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகம் , 5,000 ஆண்டுகளுக்கும் மேலான இந்தியாவின் வரலாற்றை விவரிக்கும் எட்டு கருப்பொருள் பிரிவுகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. நாட்டின் தலைநகரின் மையத்தில் வடக்கு மற்றும் தெற்குத் தொகுதிகளில் அமையவிருக்கும் புதிய அருங்காட்சியகம், 1.17 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 950 அறைகளுடன் ஒரு அடித்தளம் மற்றும் மூன்று மாடிகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

பண்டைய வரலாறு முதல் நவீன இந்தியா வரை

இந்த பிரிவுகளில் பண்டைய இந்திய அறிவு, பழங்காலத்திலிருந்து இடைக்காலம், இடைக்காலத்திலிருந்து மாறுதல் கட்டம், நவீன இந்தியா, காலனித்துவ ஆட்சி, சுதந்திரப் போராட்டம் மற்றும் 1947 முதல் 100 ஆண்டுகள், முன்னோக்கிய பார்வை உட்பட அனைத்தும் இருக்கும். இது ஒரு 'முன்னோக்கி பார்க்கும் அருங்காட்சியகமாக' இருக்கும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

2

டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் கண்காட்சிகள்

அருங்காட்சியகத்தின் மெய்நிகர் ஒத்திகையானது, அருங்காட்சியகம் முடிந்தவுடன் அதில் உள்ள காட்சியகங்கள் மற்றும் தோட்டங்கள் எவ்வாறு தோன்றும் என்பதற்கான டிஜிட்டல் அனுபவத்தை வழங்குகிறது. கண்காட்சிகள் மூலம் காட்சியகங்கள் பார்வையாளர்களுக்கு பண்டைய நகர திட்டமிடல் முறைகள், வேதங்கள், உபநிடதங்கள், பண்டைய மருத்துவ அறிவு போன்றவற்றை தெரிவிக்கும் வகையில் அமைக்கப்படும்.

கூடிய விரைவில் பணிகள் துவக்கம்

ஜன்பத்தில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகத்தின் பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் பிற வளமான சேகரிப்புகள், திட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு மற்றும் தெற்கு பிளாக்குகளின் கட்டிடங்களுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள தேசிய அருங்காட்சியக கட்டிடம் அதன் இணைப்புகளுடன் கர்தவ்யா பாதையில் ஒருங்கிணைக்கப்படும் என்று மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் மீனாகாஷி லேகி அறிவித்துள்ளார்.

3

பாரத பிரதமர் நேருவால் திறந்து வைக்கப்பட்ட அருங்காட்சியகம்

தற்போதைய தேசிய அருங்காட்சியகக் கட்டமைப்பின் அடித்தளம் இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவால் மே 12, 1955 அன்று நாட்டப்பட்டது. முன்பு ராஜ்பாத் என்று அழைக்கப்பட்ட கர்தவ்யா பாதை, இந்தியா கேட் முதல் ரைசினா மலை வரை நீண்டு செல்லும் ஒரு சடங்கு அவென்யூ ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

    Read more about: travel guide delhi
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+