Search
  • Follow NativePlanet
Share
» »இப்படி ஒரு அருவிய எங்கயும் பாத்துருக்கமுடியாது - தீபிகா சொல்ற காரணத்த பாருங்க!

இப்படி ஒரு அருவிய எங்கயும் பாத்துருக்கமுடியாது - தீபிகா சொல்ற காரணத்த பாருங்க!

ஆம். இப்படி ஒரு அருவியை எங்கும் பார்த்திருக்க முடியாது. முடியாது என்றில்லை பாத்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இப்படியான அமைப்புடன் கூடிய அருவி இந்தியாவில் ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது அதுவும் மகராஷ்டிர மாநிலத்தில்...

காலைல எழுந்து ஆபிஸுக்கு போனா நைட்டு தூங்குறதுக்குத் தான் வீட்டுக்கு வர்றோம் நம்மள்ல பலர். இருக்குற ஒருநாள வீட்டுக்கும் ஆபிஸ்க்கும் பிரிச்சிக்குடுத்துட்டு நண்பர்களுடன் அரட்டை, அப்பப்ப கிசுகிசுனு நேரத்தை போக்கி காலத்த கடந்து வாழ்ந்துட்டு இருக்கோம். அப்றம் கமிட்மன்ட்ஸ், கல்யாணம், அது இதுனு வாழ்க்கை ஜிரோல தொடங்கி நகர்ந்து போய்ட்டே இருக்கு.. நாம முட்டி மோதி கீழ உழுந்து எழுந்து நிக்குறதுக்குள்ள காதுபக்க நரை வந்துடுது. இப்படிலாம் இல்லாம ஜாலியா என்ஜாய் பண்றதுக்காகவே இந்த மாதிரி ஒரு பகுதிய நம்ம கொண்டு வந்துருக்கோம். இந்த பகுதில தீபிகா உங்களுக்கு சூப்பரான ஒரு இடத்த காமிக்கப் போறாங்க.. சுற்றுலாவுக்கு போக நினைக்குறவங்க சீக்கிரம் தயாராகுங்க..

தேவ்குந்த்

தேவ்குந்த்

ஹாய் ப்ரண்ட்ஸ் நான்தான் தீபிகா பேசுறேன்.. எழுத்து மூலமா உங்கள சந்திக்குறதுல மட்டற்ற மகிழ்ச்சியும், நா இந்த இடத்துக்கு வந்தப்ப மொத நாள் தியேட்டர்ல புல் கிரௌடு, ஹவுஸ் புல்னு போர்ட் போட்டப்றம் கடைசியா கிடச்ச டிக்கெட்ல விசில் அடிச்ச தல படம் பாத்தமாதிரி ஒரு பீலிங்க். அப்படி என்னதான் இருக்கு இந்த அருவியில அப்படித்தான கேக்குறீங்க.. என் கூட வாங்க அழகியலின் அத்தனை அழகையும் காட்டித் தர்றேன்..

Wiki GSD

எங்க நம்ம போறோம்?

எங்க நம்ம போறோம்?

தேவ் குந்த். மகராஷ்டிர மாநிலம், ராய்க்ட் மாவட்டத்துல இருக்குற ஒரு இடம்தான் பிரா. இங்க இருக்குற அழகான பச்சை பசேலென இயற்கை காட்சிகளால் பின்னப்பட்ட பின்புறங்களைக் கொண்ட அற்புதமான நீர்வீழ்ச்சிக்குதான் போகப்போறோம். வாங்க..

Abhinav Varshney

எப்படி போகலாம்?

எப்படி போகலாம்?

நான் மும்பைல இருந்து போனேன்.. என்னோட அனுபவத்தோட அடிப்படையில சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்துல இருந்து போகுறது மிகச் சிறந்த மற்றும் சுலபமான வழி.

சிஎஸ்டி லோக்கல் டிரெய்ன் மூலமா கர்ஜத் ரயில் நிலையத்துக்கு போய் சேர்ந்தோம். அங்கிருந்து பேருந்து மூலமா பாலி அங்க இருந்து பிரானு பயணப்பட்டேன்.

மும்பை - கர்ஜத் செல்ல கிட்டத்தட்ட 1.30 மணி நேரம் எடுக்கும்

கர்ஜத் - தேவ்குந்த் செல்ல 2 மணி நேரங்கள் ஆகலாம்.

அதே நேரத்துல நீங்க உங்க கார் மூலமா பயணிச்சீங்கன்னா ஒரு மணி நேரத்த மிச்சப்படுத்த முடியும்.

சாலை வழியாக பயணிப்பவர்களே

சாலை வழியாக பயணிப்பவர்களே

மும்பைல இல்ல.. நாங்க புனேல இருக்கோம்.

டிரெய்ன்லாம் வேண்டாம்மா.. நாங்க வாடகைக்கு வண்டி எடுத்துக்குறோம்னு சொல்றவங்களுக்கு,

புனேல இருந்து ஒன்றரை மணி நேரத்துக்குள்ள கார்ல தேவ்குந்த் அருவிக்கு போயிடலாம்.

புதிதாக வண்டி ஓட்டுபவர்களுக்கு எச்சரிக்கை. அனுபவசாலிகளே இந்த சாலையில் திணறுவார்கள்.

தேவ்குந்த் அருவியில் குளித்து மகிழ்வோம்

தேவ்குந்த் அருவியில் குளித்து மகிழ்வோம்

காலைல நேரமாவே கிளம்பிட்டீங்கன்னா சிறப்பு. வெயில் வரதுக்குள்ள நீர் வீழ்ச்சிய அடஞ்சிடமுடியும். அப்றம் என்ன குதூகளிக்கலாம்.

பிரா கிராமத்துக்கு மிக அருகிலேயே இந்த அருவி இருக்கு. ஒருவேள நீங்க நடந்தே போகுறோம். டிரெக்கிங்க்தான் ஜாலியா இருக்கும்னு யோசிச்சா அதுக்கும் எங்க கிட்ட திட்டம் இருக்கு. வாங்க நா கூட்டிட்டு போறேன்.

டாட்டா மின் உற்பத்தி நிலையம் இருக்குது பாருங்க.. அங்க இருந்து நடக்க தொடங்கலாம்.

கொஞ்ச நேர நடை பயணத்துக்குள்ள ஒரு சில கடைகள பாக்கமுடியும். நொறுக்கு தீனி, உணவுனு எல்லாமே அங்க கிடைக்கும். வாங்கி வச்சிக்கோங்க.

நிறைய பேரு போய்ட்டிருப்பாங்க.. உங்க நேரம் நல்லா இருந்தா.. ஒருவேள யாரும் கிடைக்கலனா பக்கத்துலயே நல்ல கைடு கிடைப்பாங்க.. 100ரூபாய் வரைக்கும் ஒரு நபருக்கு கேப்பாங்க.

அவங்க சில சுவாரசியமான தகவல்கள உங்களுக்கு சொல்லிட்டே வருவாங்க..

Devopam

என்னென்ன பண்ணலாம் அருவியில

என்னென்ன பண்ணலாம் அருவியில

மூனு விசயங்கள் எனக்கு ரொம்ப புடிச்சிது. நா ஒரு கேமரா பைத்தியம்... அங்க இருக்குற இயற்கை அழகுகள படம்புடிக்குறதுல ரொம்ப ஆர்வம்.. அதனாலயே என்கூட கேமரா பர்சன் யாரையும் கூட்டிட்டு போகமாட்டேன்.

அருவியில குளிக்குறதும் சூப்பரா இருந்துச்சி. அடுத்து கொஞ்சம் தொலைவுல போட்டிங்க்.

ஆறு பேருக்கு ஒரு படகு. பாதுகாப்பு வசதிகள்லாம் செஞ்சி தந்துருப்பாங்க.. ஆனா கொஞ்சம் ரிஸ்க். எனக்கு பயம் வந்துடிச்சி அதான் நா போகல..

Abhishekkshinde

அட்டகாசமான புகைப்படங்கள்

அட்டகாசமான புகைப்படங்கள்

இங்க எனக்கு நிறைய புகைப்படங்கள் எடுக்க வாய்ப்பு கிடச்சிது. யாரும் கூட வரலனாலும், அங்க இருந்த மக்கள் நல்ல அன்போட பழகுனாங்க.. அதுவும் இல்லாம இங்க என்னதான் ரிஸ்க் இருந்தாலும், அங்க இருக்குற லோக்கல் பீப்பிள் எல்லாம் உடனே உதவிக்கு வராங்க..

நீங்களும் எக்கச்சக்க புகைப்படங்கள எடுத்துதள்ளுங்க..

Abhishekkshinde

படகு பயணம்

படகு பயணம்

ராப்டிங்க் அப்படிங்குற ஒரு சாகசப் பயணம் பக்கத்துல ஒரு அருவியில நடந்துட்டு இருக்கு.. அழகாவும் சாகச உணர்வோடும் சிறப்பா இருக்கு.. உங்களுக்கும் அந்த ஆச இருந்துச்சினா படகுல பயணம் பண்ணுங்க..

இன்ன பிற தகவல்கள்

இங்க தங்குறதுக்கு பெரிய அளவுல இடம் இல்லைனாலும், குடுக்குற காசுக்கு ஆவ்ரேஜான வசதிகளோட இடங்கள் நிறைய இருக்கு. பட்ஜெட்ல பிக்னிக் போறவங்களுக்கு ஏற்றது.

கேம்பிங்க் பண்ணி தங்குற அளவுக்கான சிறிய ரக டென்ட் வீடுகளும் இருக்கு.

என்னெல்லாம் எடுத்துட்டு போகணும்

கொசு கொஞ்சம் ஜாஸ்திதான். பாதுகாப்புக்கு கொசு விரட்டி, மருந்துகள் கொண்டு போனா சிறப்பு.

டார்ச் லைட் எடுத்துட்டு போங்க. மறக்காம

மலையேற்றத்துக்கு தேவையான ஷீஸ் மறக்காம எடுத்துட்டு போங்க.

தண்ணீரும் உணவும்

குளிர் நேரத்துக்கு தேவையான உடையும்

கட்டுப்பாடுகள்

நீச்சல் அடிக்கக் கூடாது.. மீறினால் அபராதம். இல்லையென்றால் விபரீதம்

கூட்டாக சென்றால் நண்பர்களுடனேயே இருக்கவேண்டும். தொலைந்தால் தேடுவது சிரமம்.

காட்டுக்குள் செல்லக் கூடாது. உங்களால் விலங்குகளுக்கு ஆபத்து நேரிடும்.

வெடிக்கும், தீப்பற்றும் பொருள்களை கட்டாயம் எடுத்துச் செல்லக்கூடாது

அப்றம் டிரெக்கிங் பத்தி இன்னொரு கட்டுரையில விரிவா சொல்றேன்..

சைனிங்க் ஆஃப்... உங்கள் தீபிகா...

Kautuk1

Read more about: maharastra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more