Search
  • Follow NativePlanet
Share
» »தரம்கர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள் மற்றும் எப்படி செல்வது

தரம்கர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள் மற்றும் எப்படி செல்வது

தரம்கர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள் மற்றும் எப்படி செல்வது

தரம்கர் என்பது ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள காலாஹண்டி மாவட்டத்தின் உட்கோட்ட தலைமையகமாகும். இதனை காலாஹண்டியின் களஞ்சியம் என்று கூட அழைப்பார்கள். ஒடிசாவில் அரிசி உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இடங்களில் ஒன்றாக விளங்குகிறது தரம்கர். தரம்கர் மற்றும் அதனை சுற்றி தனித்துவம் வாய்ந்த பழங்காலத்து கோவில்கள் பல இருப்பதால் இந்த இடம் சுற்றுலாப் பயணிகளிடம் புகழ் பெற்று விளங்குகிறது.

தரம்கர் சுற்றுலா வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள் மற்றும் எப்படி செல்வது

Digpatra

உயர்ந்த மலைகள், கொட்டும் நீர்வீழ்ச்சிகள், கிசுகிசுக்கும் காடுகள் மற்றும் ஆங்காங்கே காணப்படும் சம புல் தரைகள் என இங்கு கொட்டி கிடப்பதால் சுற்றுலாப் பயணிகளை தரம்கர் கண்டிப்பாக ஈர்க்கும். தரம்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈர்ப்புகள் ஸ்ரீ ஆரோபிந்தோ மற்றும் ஸ்ரீமா அவர்கள் உடம்பின் ஒரு பகுதி தரம்கர்ரில் பாதுகாக்கப்படுகிறது. இந்த புனித மையத்தை கண்டு களிக்க இங்கே பல சுற்றுலாப் பயணிகள் வருவதுண்டு. அம்பாணி மற்றும் டோக்ஹாரி சன்ச்ராவில் உள்ள கம்பீரமான நீர்வீழ்ச்சிகள் தரம்கர்ரின் அழகை மேம்படுத்தும் வண்ணம் உள்ளது. இங்குள்ள ஜுனாகர்ரில் லங்கேஷ்வரி, கனக துர்கா என பல பழமையான கோவில்கள் உள்ளது.

குடஹண்டி என்ற இடத்தில் அளவுக்கு மிஞ்சிய இயற்கை அழகும் எஞ்சியிருக்கும் பழமை வாய்ந்த இடங்களையும் காணலாம். அடர்ந்த காடுகள் மற்றும் மலைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் முக்ஹிகுடா என்ற இடத்தில் உள்ள இந்திராவதி அணை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. கைர்படர் மற்றும் கோலாமுண்டா போன்ற சிறிய கிராமங்களில் அழகிய இயற்கை நில தோற்றங்களை காணலாம். தரம்கர்ரில் கோக்சரா என்று இன்னொரு சிறிய கிராமம் ஒன்று உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த வல்லுனர்கள் கற்களால் பல கலைகளை செய்துள்ளனர். இதற்காகவே இக்கிராமம் புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு சிவன் கோவில், டண்டேஸ்வரி கோவில், புத்தராஜா கோவில் மற்றும் ஸ்ரீ ஜகன்னாத் கோவில் என சில பழமையான கோவில்கள் உள்ளன.

தரம்கர்ருக்கு சுற்றுலா வருவதற்கான சிறந்த நேரம்

தரம்கர்ருக்கு சுற்றுலா வர வேண்டுமானால் செப்டம்பர் முதல் மார்ச் மாதம் வரை எந்நேரம் வேண்டுமானாலும் வரலாம்.

தரம்கர்ரை அடைவது எப்படி?

தெற்கு ஒடிசாவில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது தரம்கர். அதனால் இங்கு சாலை மற்றும் இரயில் வசதிகள் நன்றாக உள்ளன. தரம்கர் சுற்றுலாவை மேம்படுத்த அரசாங்க பேருந்துகள் மற்றும் தனியார் சொகுசு பேருந்துகள் பல இயங்குகின்றன. இங்குள்ள சுற்றுலா நிறுவனங்கள் பல சுற்றுலா வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கின்றன. அவர்களே தரம்கர்ரில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்வார்கள்.

Read more about: odisha
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X