» »கலர் மாறும் சிவலிங்கம்

கலர் மாறும் சிவலிங்கம்

Written By: Staff

கருப்பான சிவலிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லது (அமர்நாத்தில் மட்டுமே உள்ள) பனியால் செய்த சிவலிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள்; கலர் மாறும் சிவலிங்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா ? இந்த விஷயம், சிவபெருமானைப் போல புதிராய் இருக்கிறதல்லவா! ஆனால் இது தான் உண்மை. ராஜஸ்தான் மாநிலம், தோல்பூரில் இருக்கும் சிவன்(அசலேஷ்வர் மஹாதேவ்) கோவிலில் ஒரு சிவலிங்கத்தின் வண்ணம் நாளொன்றுக்கு மூன்று முறை மாறுகிறது.

shiva

Photo Courtesy : Jean-Pierre Dalbéra

அசலேஷ்வர் மஹாதேவ் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் வண்ணம் காலையில் சிவப்பாகவும், மதியம் குங்குமப்பூ கலரிலும்; மாலையில் மாநிறத்திலும் காட்சியளிக்கிறது. இது, சூரியக் கதிர்கள் லிங்கத்தின் மீது விழுவதின் காரணமாகத்தான் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பினாலும் விஞ்ஞானப் பூர்வமாக நிருபிக்கப் படவில்லை. பக்தர்கள், இந்த அதிசயத்தை காண்பதற்கு காலை முதல் மாலை வரை இருக்கின்றனர்.

இந்தக் கோவில் கட்டி முடித்து 2000 ஆண்டுகள் மேலாகிறது; இங்கிருக்கும் நந்தி சிலை 5 வித்தியாச உலோகங்களால் செய்யப்பட்டது. இங்கிருக்கும் சிவலிங்கம், சுயம்பாகத் தோன்றியது என்று நம்பப்படுகிறது. இதை உறுதிசெய்ய, சிலர், சிவன் இருக்கும் இடத்தை எத்தனை தோண்டிப் பார்த்தும் ஆழத்தை கண்டுபிடிக்கமுடியவில்லை. பெரும் ஆச்சர்யத்தில், தோண்டுவதை நிறுத்திக்கொண்டார்கள்.

shivalinga

Photo Courtesy : Nagarjun Kandukuru

இந்தக் கோவிலைப் பற்றி அதிகம் வெளியில் தெரியாததும்; இந்த இடத்தின் தொலைதூரமும் பலரால் இங்கு வரமுடிவதில்லை. ஆனால், இங்கு வந்து வேண்டிய மக்களுக்கு நினைத்த காரியம் நடக்கிறது என்று பகதர்களிடம் பலத்த நம்பிக்கையிருக்கிறது.

தோல்பூர் செல்வதெப்படி :

ஜெய்ப்பூர் நகரிலிருந்து தோல்பூர் 280 கி.மீ; ஆக்ராவிலிருந்து 55 கி.மீ.

ராஜஸ்தானின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் தோல்பூருக்குப் பேருந்துகள் இருக்கின்றன.

தோல்பூரில் ரயில் நிலையமும் இருக்கிறது.

அருகில் இருக்கும் விமான நிலையம் : ஆக்ரா

Read more about: temples shiva rajasthan dholpur

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்