» »யாரும் கண்டிராத வசீகரம் நிறைந்த இந்தியாவின் மறுபக்கம்!

யாரும் கண்டிராத வசீகரம் நிறைந்த இந்தியாவின் மறுபக்கம்!

Posted By: Udhaya

இந்தியா உலகில் அனைவரும் காணவிரும்பும் பகுதி. நம் கைகளிலேயே இருப்பதனால் என்னவோ இதை நாம் ஒரு  பொருட்டாக கருதுவதே இல்லை.

உங்கள் அருகிலேயே உள்ள நீங்கள் இதுவரை கண்டிராத இடங்களின் புகைப்பட கண்ணோட்டத்தை இங்கு காணுங்கள்.

இவற்றில் உங்களுக்கு எத்தனை இடங்கள் தெரிந்துள்ளன என்று பாருங்கள். ஐந்து இடங்களுக்கு மேல் தெரிந்து இருந்தால் நீங்கள் நிச்சயமாக  பெரிய ஆள்தான்.

சீட்டிங் பண்ணக்கூடாது....

குராய்ஸ்

குராய்ஸ்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த குராய்ஸ் பகுதி பந்திப்பூரிலிருந்து 53 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

குளிர்ந்த காற்று, மென்மையான மனச்சூழல், அருவிகளின் ஆர்ப்பரிக்கும் சத்தம் இவையனைத்தும் சேர்ந்ததுதான் குராய்ஸ் பகுதி.

இது இந்தியாவின் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். எனினும் அனுமதிக்கப்பட்ட பாதுகாப்புடன் செல்ல ஏற்ற இடமாகும்.

PC: Zahid samoon

புக்தல் கோல்

புக்தல் கோல்

ஜங்சரில் உள்ள இந்த குகைப்பகுதி ஆசியாவிலேயே மிகவும் தனிமைபடுத்தப்பட்ட குகை சுற்றுலாத் தளமாகும்.

திரில் விரும்பிகள் இங்கு சென்று நன்றாக மகிழ்ந்திருக்கலாம்.

Pc: Wiki

சோப்டா, உத்தரகாண்ட்

சோப்டா, உத்தரகாண்ட்

உத்தரகாண்டில் உள்ள இந்த பகுதி இந்தியாவின் மிகச்சிறந்த மறைக்கப்பட்ட பகுதி. உரிய பாதுகாப்பின்றி இங்கு செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால் வாய்ப்புக் கிடைத்தால் இங்கு செல்வது அட்வென்ட்சர்ஸ் விரும்பிகளுக்கு நல்ல வரப்பிரசாதமாக அமையும்.

PC: Vvnataraj

கனட்டல்

கனட்டல்

டேராடூனில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ளது இந்த பகுதி. அழகாகவும், தனிமைப்படுத்தப்பட்டும் இருப்பதால் காதல் ரசம் சொட்ட சொட்ட தனிமையை அனுபவிக்க விரும்புபவர்கள் இங்கு செல்லலாம்.

தேனிலவுக்கு ஏற்ற இடம் இதுவாகும்.

PC: wiki

தாம்ப்ரோ

தாம்ப்ரோ

1000 அடி நீளமுள்ள இந்தியாவின் நீளமான தொங்கு பாலங்களில் ஒன்றான இது அருணாச்சல பிரதேசத்தில் உள்ளது.

மூங்கில் காடுகள், மூங்கில் பாலம் என சுற்றிலும் மூங்கிலால் கட்டப்பட்டுள்ள இந்த பகுதியில் வீடு கூட மூங்கில்தான் என்றால் பாருங்களேன்.

PC: Kaling Tayeng

மாவ்லாங்க்

மாவ்லாங்க்

ஆசியாவின் மிகத் தூய்மையான கிராமம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இதுதான் மாவ்லாங்க். மேகாலயா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பகுதி சுற்றும் சுத்தமாக இருக்கிறது.

மரங்கள் இருந்தால் குப்பைகள் விழும் என்று வெட்டுபவர்கள் கேளுங்கள்.. இந்த ஊரில் எங்கு பார்த்தாலும் மரம், செடி கொடிகள்தான் இருக்கிறது.

PC: Sai avinash

சந்தக்பூர்

சந்தக்பூர்

சந்தக்பூ என்றால் நச்சுச் செடிகளின் உயரம் என்று பொருளாம். மலைப்பகுதியில் வாழும் மரங்கள் இயற்கையாகவே அதிக நச்சுக் கொண்டு இருப்பது இங்கு வாடிக்கையான ஒன்று.

இது இந்தியாவின் மிக அபாயமான பகுதிகளில் ஒன்றாக குறிப்பிடப் படுகிறது.

PC: solarshakti

கீழ ராய்ப்பூர்

கீழ ராய்ப்பூர்

கிராமத்து ஒலிம்பிக் நடைபெறும் பகுதியான இது பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது.

இந்த ஒலிம்பிக் திருவிழா வெறும் விளையாட்டுக்காக மட்டுமில்லாமல் நண்பர்கள், உறவினர்கள், இளைஞர்களின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் திறனைக் காட்டுகிறது.

இலாங் பார்க்

இலாங் பார்க்

சிறுத்தை பூங்கா எனும் காடுகள் அதிகம் இருக்கும் பகுதி இந்தியாவின் அதிக குளிர்ச்சியான பகுதி இந்த இலாங். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பகுதி அட்வென்ஜர்ஸ்க்கு ஏற்ற இடமாகும்.


PC: Psihrishi

லெப்பாக்ஷி

லெப்பாக்ஷி

ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம். இங்குள்ள வீரபத்ரன் கோயில் சிவபெருமானுக்கு உரியது.

ராமாயண, மகாபாரத இதிகாசங்களின் படங்களை ஓவியங்களாக சுவர் மற்றும் விமானத்தில் வரைந்துள்ளனர்.

PC: Malli124710

Read more about: travel india

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்