» » பாட்டல்பானி பற்றி நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா?

பாட்டல்பானி பற்றி நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா?

Written By: Udhaya

ஒரு நீர்வீழ்ச்சியிலிருந்து தண்ணீர் கொட்டும் இடத்தின் முடிவு பகுதியை இதுவரை கண்டுபிடிக்கவில்லையாம். அப்படி ஒரு இடம் எங்கே இருக்கிறது தெரியுமா?

இந்தியாவில்தான்... அப்போ அந்த நீர்வீழ்ச்சி எவ்வளவு உயரமா இருக்கும் பாருங்க!

இந்தூர் நகரத்திலிருந்து 36 கிமீ தொலைவில் அற்புதமான நீர்வீழ்ச்சி ஒன்று அமைந்துள்ளது. இதன் பெயர்தான் பாட்டல் பானி. இதுகுறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

 உயரம்

உயரம்

இந்த அற்புதமான நீர்வீழ்ச்சி 300 அடி உயரமுள்ளது.

Amit Tiwari

பள்ளத்தின் ஆழம் தெரியுமா?

பள்ளத்தின் ஆழம் தெரியுமா?

இந்நீர்வீழ்ச்சியின் உயரம் 300 அடியாக இருந்தாலும், இந்த தண்ணீர் விழுந்து கீழே உருவாகியுள்ள பள்ளத்தின் அளவு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

jimanish

பாதாள் பாணி

பாதாள் பாணி

புராணக்கதைகளில் இந்நீர்வீழ்ச்சி பூமியின் அடிப்பகுதி வரையிலும் நீண்டு செல்கிறது என்று பொருள் படும் வகையில் 'பாதாள்' என்று சமக்கிருதத்தில் அழைக்கப்பட்டது.

cool_spark

தற்போதைய பெயர்

தற்போதைய பெயர்


இப்பொழுது ஆங்கிலத்தில், இதை பாட்டல் பாணி என்று அழைக்கின்றனர்.

cool_spark

வறண்டுவிடும் நதி

வறண்டுவிடும் நதி

வெப்பமான கோடைக்காலங்களில் இந்நீர்வீழ்ச்சி முழுமையாக வறண்டு விடும். அந்த சமயத்தில் இந்நீர்வீழ்ச்சியை உருவாக்கும் ஓடையானது, சிறு சிறு துளியாக வடிந்து கொண்டிருக்கும்.

cool_spark

மழைக்குப் பின்

மழைக்குப் பின்

ஆனால், மழைக்காலத்தின் முடிவில் இந்நீர்வீழ்ச்சி அதன் முழுமையான பரிணாமத்தை எடுத்து விடும்.

cool_spark

மலையேற்றம்

மலையேற்றம்

ஜுலை மாதத்தில் இந்நீர்வீழ்ச்சியின் தண்ணீர் முழுமையான வேகத்தில் விழத் தொடங்கும் போது இந்நீர்வீழ்ச்சி புகழ் பெற்ற இன்ப சுற்றுலா தலமாகவும் மற்றும் மலையேற்றம் செய்ய மிகவும் ஏற்ற இடமாகவும் இருக்கும்.

cool_spark

அபாயம்

அபாயம்

மழைக்காலம் உச்சத்திலிருக்கும் போது அபரிமிதமான வெள்ளம் விழுவதால் இந்த நீர்வீழ்ச்சியை அந்த பருவத்தில் நெருங்கிச் செல்வது மிகவும் அபாயகரமானதாக இருக்கும்.

cool_spark

பேருந்து அல்லது சாலைப் போக்குவரத்து

பேருந்து அல்லது சாலைப் போக்குவரத்து

மிகவும் உறுதியான சாலைப் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுள்ள இந்தூர் மாநிலம் முழுவதும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் சிறப்பான பேருந்து சேவைகள் மற்றும் சாலை வசதிகளை கொண்டுள்ளது. NH-3, NH-69, NH-86, மற்றும் பல தேசிய நெடுஞ்சாலைகள் இந்தூர் வழியாக செல்கின்றன. இந்த சாலை வழிகள் மற்றும் பேருந்து வசதிகள் இந்தூரை மிகவும் எளிதாக அடைய உதவுகின்றன.

விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து

விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து

தேவி அஹில்யா பாய் ஹோல்கார் விமான நிலையம் வழியாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளுடன் இந்தூர் இணைக்கப் பட்டுள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து முக்கியமான பல விமான நிறுவனங்கள் தங்களுடைய விமான சேவைகளை அளித்து வருகின்றன.

ராஜேந்திரா நகர், லோக்மான்யா நகர், சாய்ஃபீ நகர் மற்றும் லட்சுமிபாய் நகர் ஆகிய நான்கு இரயில் நிலையங்களும், பிற சிறிய நகரங்கள் மற்றும் இடங்களுடன் சிறந்த இரயில் சேவைகளை அளிக்க வல்லதாக உள்ளன.

இதைச் சுற்றியுள்ள இடங்களைப் பற்றி பார்க்கலாம்.

இதைச் சுற்றியுள்ள இடங்களைப் பற்றி பார்க்கலாம்.

ராஜ்வாடா மாளிகை, அம்பாஜ்ஹர் மந்திர், பாம்னியா குந்த் நீர்வீழ்ச்சி, மெஹந்திகுந்த் நீர்வீழ்ச்சி, லால்பாக் மாளிகை, கஜ்லிஹர் கோட்டை உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க மற்றும் இயற்கை எழில்கொஞ்சும் இடங்கள் பட்டல்பானியைச் சுற்றியுள்ளன.

Read more about: travel, tour
Please Wait while comments are loading...