Search
  • Follow NativePlanet
Share
» »நென்மேனி கிராமம் ஏன் இவ்வளவு புகழ் வாய்ந்தது தெரியுமா?

நென்மேனி கிராமம் ஏன் இவ்வளவு புகழ் வாய்ந்தது தெரியுமா?

நென்மேனி கிராமம் ஏன் இவ்வளவு புகழ் வாய்ந்தது தெரியுமா?

By Udhaya

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு 9 கிமீ தொலைவில் நென்மேனி கிராமம் அமைந்துள்ளது. வைப்பாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்திருப்பது இந்த நென்மேனி கிராமத்தின் சிறப்பாகும். இதுமட்டுமில்லாமல் இன்னும் பல விசயங்கள் இந்த ஊரைச் சுற்றி இருக்கிறது வாருங்கள் பார்க்கலாம்.

 நெல்மணி

நெல்மணி


ஒரு காலத்தில் இந்த பகுதியில் நெல் அமோகமாக விளைந்ததால் இந்த பகுதி முதலில் நெல்மணி என்று அழைக்கப்பட்டது. பின் காலப்போக்கில் மருவி இப்போது நென்மேனி என்று அழைக்கப்படுகிறது. முப்போகமும் விளைந்த மண் என்று இந்த ஊரார் இதை போற்றுகின்றனர். பொதுவாக விருதுநகரை வெய்யில் நிறைந்த ஊராகத்தான் தெரியும். இப்படி சில இடங்கள் தற்போது சுற்றுலாத் தளங்களாக மாறி வருகின்றன.

பறவைகள்

பறவைகள்

இங்கு இருக்கும் அரசு பாசன நீர் குளத்தை தேடி ஏராளமான பறவைகள் குளிர்காலத்தில் வருகின்றன. மேலும் இந்த குளம் முழுமையாக நிரம்பி இருக்கும் போது ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் இங்கு வரும். அந்த பறவைகளை பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும். எனவே பறவை பிரியர்கள் குளிர்காலத்தில் நென்மேனிக்கு வந்தால் விதவிதமான பறவைகளை கண்டு களிக்கலாம்.

Koshy Koshy

அய்யனார் நீழ்வீழ்ச்சி

அய்யனார் நீழ்வீழ்ச்சி

அய்யனார் நீழ்வீழ்ச்சி மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து விழுகிறது. சிவகாசிக்கு அருகில் இருக்கும் இராஜபாளையத்திலிருந்து 12 கிமீ தொலைவில் இந்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. இங்கு ஒரு அய்யனார் ஆலயமும் உள்ளது. இந்த அய்யனார் நீர்வீழ்ச்சி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். மலையிலிருக்கும் காடுகள் வழியாக வந்து 15 அடி உயரத்திலிருந்து இந்த அய்யனார் நீர்வீழ்ச்சி விழுகிறது. அதுபோல் இங்கிருக்கும் காடுகளின் இயற்கை காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

wiki

காசி விஸ்வநாதர் ஆலயம்

காசி விஸ்வநாதர் ஆலயம்

காசி விஸ்வநாதர் ஆலயம் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும். தென் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னரான ஹரிகேசரி பராக்கிரம பாண்டியன் தற்போதைய வாரனாசியிலிருந்து (அந்த காலத்தில் காசி என்று அழைக்கப்பட்டது) ஒரு சிவலிங்கத்தை வாங்கி வந்து அந்த லிங்கத்தை சிவகாசியில் நிறுவினார். பின் 15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிற்கால பாண்டிய மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னரான திருமலை நாயர்கர் போன்றோர் இதை ஒரு மிகப் பெரிய ஆலயமாகக் கட்டி அதற்கு காசி விஸ்வநாதர் ஆலயம் என்ற பெயரையும் சூட்டினர்.

Ssriram mt

பிளவக்கல் அணை

பிளவக்கல் அணை


சிவகாசிக்கு மிக அருகில் இருக்கும் இன்னுமொரு முக்கிய சுற்றுலாத் தலம் பிளவக்கல் அணையாகும். இந்த அணை மதுரையிலிருந்து 90 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 59 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

இந்த அணையில் ஒரு சிறுவர் பொழுதுபோக்கு பூங்கா இருப்பதால், இந்த பூங்காவில் சிறார்கள் ஆசை தீர விளையாடி மகிழலாம். இந்த பிளவக்கல் அணை கோவிலார் அணை மற்றும் பெரியார் அணை என்ற இரண்டு பிரிவுகளை கொண்டது.

More News

    Read more about: travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+