» »நவீன காலத்திலும் குள்ளமனிதர்கள் அதுவும் தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?

நவீன காலத்திலும் குள்ளமனிதர்கள் அதுவும் தமிழ்நாட்டில் எங்கு தெரியுமா?

Written By: Udhaya

உலகின் மிக குள்ளமான மனிதர்கள் ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பதாக நம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அதே நேரத்தில் நாம் பல்வேறு குள்ள மனிதர்களின் கதைகளை கேட்டிருப்போம்.

அளவில் சிறியதாகவும், குறைந்த உயரத்துடனும் இருப்பதால் அவர்கள் அநேகமாக வேடிக்கைப் பொருளாகப் பார்க்கப்படுவதுதான் வாடிக்கை.

ஆனால், அவர்களுக்கு அதீதமான அற்புத ஆற்றல்கள் இருந்தது என்பது தெரியுமா அவர்கள் தற்போதுள்ள சராசரி மனிதனைக் காட்டிலும் 4 மடங்கு உடல் வலிமை கொண்டவர்களாம். அப்படிபட்ட குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடம் தமிழகத்தில் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

வடகவுஞ்சி

வடகவுஞ்சி

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு மலைக் கிராமம்(ஊர்) வடகவுஞ்சி.

விவசாயம்

விவசாயம்

இங்கு மலைத் தோட்டப் பயிர்களான மலைவாழை, பூண்டு, முள்ளங்கி, கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, காபி, பழங்கள் அதிகமாக விளைகின்றன.

குள்ளர்களின் வீடுகள்

குள்ளர்களின் வீடுகள்


இக்கிராமத்தின் வட கிழக்குப் பகுதியில் செம்பரான்குளம் பகுதியில் குள்ள மனிதர்களின் மூன்று அடி உயரமுள்ள குகைவீடுகள் உள்ளது.

கருங்கல் வீடு

கருங்கல் வீடு

வீடுகள் முழுவதும் கருங்கற்களால் ஒரு ஒழுங்கமைவோடு கட்டப்பட்டுள்ளது.

மிகவும் சிறியது

மிகவும் சிறியது

வீட்டினுள் இருவர் மட்டுமே தங்கும் இடவசதியுடன் அமைக்கப்பட்டும், மேற்கூரைகள் ஒர் அடி கனமுள்ள கருங்கற் பலகைகளால் மூடப்பட்டும் உள்ளது.

இன்னொரு இடத்திலும் குள்ள மனிதர்கள்

இன்னொரு இடத்திலும் குள்ள மனிதர்கள்

பழனி செல்லும் மலைச்சாலையில் 2 கி.மீ. தொலைவில், கொஞ்ச தூரத்தில் அமைந்துள்ளது பேத்துப்பாறை எனும் சிற்றூர். இதன் அருகில் அமைந்துள்ளது அஞ்சுவீடு என்னும் மற்றொரு இடம்.

இந்த பகுதியில் அமைந்திருக்கிறது ஒரு குள்ளர் குகைப் பகுதி.

உணவு முறை

உணவு முறை


இவர்கள் நவதானியங்களை உட்கொண்டு வாழ்ந்ததால், உடல் ஆரோக்யத்துடன் இருந்தனர். மிகவும் வலிமையானவர்களாக இருந்துள்ளனர்.

வீடு

வீடு

மிகவும் வலிமையானவர்களாதலால் அவர்கள் தங்கள் வீட்டை கருங்கற் பாறைகளைக் கொண்டு கட்டினர்.

பாண்டியர்களின் வாரிசுகள்

பாண்டியர்களின் வாரிசுகள்

பெரும்நிலப்பரப்பை ஆண்டு வந்த பாண்டியர்கள் கடைசியில் நாடிழந்து பெயரிழந்து இந்த மலையிலேயே கூனிக்குருகி வாழ்ந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அறிவியல் அதிசயங்கள்

அறிவியல் அதிசயங்கள்இத்தனை பெரிய கற்களை தூக்கிக் கொண்டு வந்து, மலை விளிம்புகளில் மிக நேர்த்தியாக அமைத்த குள்ள மனிதர்களின் வாழ்வை தேடினால் இன்னும் பல அதிசய உண்மைகள் நமக்கு கிடைக்கும்.

Read more about: travel