» »குற்றாலத்தில் குதூகலிக்க இத்தனை விசயம் இருக்கா?

குற்றாலத்தில் குதூகலிக்க இத்தனை விசயம் இருக்கா?

Posted By: Udhaya

கோடைக்காலம் தொடங்கியாச்சி... இந்த வெயிலிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நீரையும் காற்றையும் தேடி அலைகிறோம். விடுமுறை நாள் என்றால் குடும்பத்துடன் எங்கேயாவது சுற்றுலா செல்வது என முடிவு செய்வோருக்கு ஒரு யோசனை. நீங்கள் சுற்றுலா செல்வதற்கான பட்டியலில் அனைத்தையும் நீக்கி விட்டு அல்லது தள்ளி வைத்து விட்டு முன்னுரிமை கொடுங்கள் குற்றாலத்துக்கு.

குற்றாலத்தில் எத்தனை அருவிகள் உள்ளன என்பது தெரியுமா?

குற்றாலம் சென்று குளித்துவிட்டு வருவது சிலரது வாடிக்கை. ஆனால் குற்றாலத்தில் அது மட்டுமல்ல எண்ணற்ற அருவிகள் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா? 

தென் இந்தியாவின் ஸ்பா என்று அழைக்கப்படும் குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் இடையே அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும்.

வருடத்திற்கு சில மாதங்கள் தான் குற்றால அருவிகளில் தண்ணீர் விழும். எனவே குற்றாலம் வர திட்டமிட்டுருந்தால் அருவிகளில் தண்ணீர் விழுகிறதா என்று தெரிந்தபின் வருவது சரியாக இருக்கும்.

ஜூன் முதல் செப்டம்பர் வரை, தென் மேற்கு பருவமழையால் அருவிகளில் தண்ணீர், மிதமான வெப்பநிலை, குளிர் காற்று என குற்றாலம் அருவி களைகட்ட தொடங்கிவிடும். அக்டோபர் முதல் டிசம்பர் வரை வட கிழக்கு பருவமழையால் கடும் பனி மற்றும் சில நேரங்களில் கன மழை என சுற்றுசூழல் மாறிவிடும். அந்நேரம் நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அதிகரிப்பதால் மக்கள் குளிக்க சில நேரங்களில் அனுமதிக்கபடுவதில்லை.

குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் உள்ளன.  

அதிகம் படிக்கப்பட்ட கட்டுரைகள் கீழே.....

பேரருவி

பேரருவி

இது 60 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் அருவி, இடையில் பொங்குமாகடலால் அழுத்தம் தடைப்பட்டு, மக்கள் குளிக்க பாதுகாப்பான வகையில் குறைந்த தாக்கத்தை தருகிறது.

Pc: Aronrusewelt

https://commons.wikimedia.org/wiki/File:Courtallam_Main_Falls.JPG

சிற்றருவி

சிற்றருவி


இங்கு நீரின் அழுத்தம் குறைந்தே காணப்படும், இதன் வழியே தா ன் செண்பகாதேவி மற்றும் தேனருவிக்கு செல்ல முடியும்.

Pc: Jabbarcommons

 செண்பகாதேவி அருவி

செண்பகாதேவி அருவி

செண்பக மரங்கள் வழியாக பாய்கிறது. அங்கு செண்பகாதேவி அம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் உள்ளது.

Pc:Jabbarcommons -

தேனருவி

தேனருவி

அங்கிருந்து 3 கீ.மீ தூரத்தில் தேனருவிஉள்ளது. இரண்டு பெரிய கற்கள் இடையே 40 மீட்டர் உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சி தொடங்குகிறது.

PC: Jabbarcommons

ஐந்தருவி

ஐந்தருவி

இவ்வனைத்திலும் மாறுபட்ட அருவியாகும். இங்கு ஐந்து தனித் தனி அருவிகள் உள்ளன.

PC: Aronrusewelt

https://commons.wikimedia.org/wiki/File:Courtallam_Five_Falls_Tirunelveli_District.JPG

பழத்தோட்டம் அருவி

பழத்தோட்டம் அருவி

இந்த அருவிக்கு மேலே பழத்தோட்டம் அருவி, அல்லது விஐபி அருவி இருக்கிறது.

Pc: Jabbarcommons

பழைய குற்றாலம் அருவி

பழைய குற்றாலம் அருவி

இரண்டு பாறைகள் இடையே உள்ள பள்ளத்தாக்கில் இருந்து விழுகிறது. இடையில் இது மூடப்பட்டு பின் நீரின் போக்கை மாற்றி குளிப்பதற்கு ஏதுவாக பாறைகள் செதுக்கபட்டபின் மீண்டும் திறக்கப்பட்டது.

Pc: VasuVR

புலி அருவி

புலி அருவி

செயற்கையாக உருவாக்கப்பட்டது. இவ்வருவியின் நீர் பாசனத்திற்காக திருப்பிவிடபடுகிறது

Pc: Aronrusewelt

சிறிய அருவி

சிறிய அருவி

ஐந்து அருவி மேலே அரசு தோட்டக்கலை பூங்காவில் ஒரு சிறிய அருவி உள்ளது, ஆனால் அது பொது வரம்புக்குள் இல்லை.

Pc: wiki

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

மகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் இப்ப எப்டி இருக்கு தெரியுமா?

பேயை நேரில் பார்க்கணுமா அப்போ இங்கெல்லாம் நைட் டிராவல் பண்ணுங்க

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

2020ல் என்னவாகும் உலகம் அதிர்ச்சியூட்டிய சித்தர் பெருமகன்

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

உலக கட்டிடக்கலைக்கே சவால் விடும் 10 கோடி கிலோ கோயில் மர்மங்கள்

ஆராய்ச்சியாளர்களையே வாயை பிளக்க வைத்த தமிழகத்தின் மர்மங்களைப் பற்றி தெரியுமா?

விடை தெரியாத 'சிதம்பர ரகசியங்கள்' வெளியானதா ?

Read more about: travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்