» »முழுகிராமத்தையும் பிங்க்காக மாற்றிய மக்கள் எங்கே தெரியுமா?

முழுகிராமத்தையும் பிங்க்காக மாற்றிய மக்கள் எங்கே தெரியுமா?

Posted By: Udhaya

ஜெய்ப்பூர் நகரத்தை பிங்க் சிட்டி என்று ஆங்கிலத்தில் அழைப்பர். இதைப் போலவே பிங்க் வில்லேஜ் வந்துவிட்டது. அதுவும் ஒன்றல்ல இரண்டாகும்.
சட்டீஸ்கரில் ஒரு கிராமம் முற்றிலும் பிங்க்காக மாறியுள்ளது.

சட்டீஸ்கர்

சட்டீஸ்கர்

சட்டீஸ்கர் அருகே நானாக்சாகர் எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திலுள்ளவர்கள் தங்கள் வீட்டை பிங்க் நிறத்தில் மாற்றி வைத்துள்ளனர். இதனால் இந்த கிராமமே பிங்க் நிறத்தில் காட்சியளிக்கிறது.

காரணம் என்ன தெரியுமா?

காரணம் என்ன தெரியுமா?

சுத்தம் சோறு போடும் எனும் பழமொழிக்கேற்ப இந்த கிராமத்தினர் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். மேலும் இங்குள்ள உள்ளூர் விதிப்படி எல்லா வீட்டிலும் குறைந்தது ஒரு கழிவறை இருக்கவேண்டுமாம். அந்த கழிவறையுடன் வீட்டையும் பிங்க் நிறத்தில் வண்ணமடித்து வைத்திருக்கிறார்கள்.

அபராதம்

அபராதம்

ஒருவேளை வீட்டில் கழிப்பறை இல்லை என்றால் அந்த குடும்பத்துக்கு 500 ரூ அபராதம் விதிக்கிறதாம் அந்த ஊர்.

சுத்தமான ஊர்

சுத்தமான ஊர்

இந்த ஊரில் மேலும் பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி மரம் வளர்த்தல், நீரை சேமித்தல் போன்றவற்றை செயல்படுத்திவருகின்றனர். இதனால் பிங்க் நிறத்தில் காட்சியளிக்கும் இந்த ஊர் இந்த பகுதியில் தனியே தெரிகிறது.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

இந்த இடம் சட்டீஸ்கர் மற்றும் ஒரிசா எல்லையில் அமைந்துள்ளது. இங்கு நிறைய சுற்றுலாத் தளங்கள் காணப்படுகின்றன. ஜாஞ்ச்கிர்-சம்பா , கபிர்தாம், கோரியா உள்ளிட்ட பல இடங்கள் இங்கு அருகில் அமைந்துள்ளன. மேலும் சற்றுத் தொலைவில் ஒரிசாவின் பிரபலமான சுற்றுலாத் தளங்களும் உள்ளன.

ஜாஞ்ச்கிர்–சம்பா

ஜாஞ்ச்கிர்–சம்பா

ஒரு நினைவகமாகவே மாற்றப்பட்டிருக்கும் ‘ஆனி ஃபங்க்' எனும் கிறித்துவ பிரச்சாரகர் வசித்த வீடு இப்பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாக உள்ளது. பல முக்கியமான ஆன்மீக யாத்ரீக ஸ்தலங்களும் இந்நகரம் மற்றும் மாவட்டத்தில் நிரம்பியிருக்கின்றன. விஷ்ணு மந்திர், லக்ஷ்மணேஷரர் கோயில், ஆத்பர், நஹாரியா பாபா கோயில், துர்க்கா தேவி கோயில், ஷிவ்நாராயண் கோயில், சந்திரஹாசினி கோயில் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இவை தவிர மதன்பூர்கர், கன்ஹரா, பிதாம்பூர், தேவார் கட்டா, தமுதாரா, கட்டாடய் போன்ற இடங்களும் பார்க்க வேண்டிய அம்சங்களாக அமைந்திருக்கின்றன. இவை யாவற்றுக்கும் மேலாக இம்மாவட்டத்தில் உள்ள விஷ்ணு கோயில் ஒரு புராதன கலாச்சார அடையாளமாக வீற்றிருக்கிறது. ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தின் ஆதி வைணவ மரபுகளையும் இது பிரதிபலிக்கிறது.

Ashwini Kesharwani

 கபிர்தாம்

கபிர்தாம்


கபிர்தாம் முந்தைய காலத்தில் கவர்தா மாவட்டம் என அழைக்கப்பட்டது. இது துர்க் , ராஜ்நந்த்காவ் , ராய்ப்பூர் மற்றும் பிலாஸ்பூர் இடையே அமைந்துள்ளது . கபிர்தாம் சுமார் 4447. 5 சதுர கி.மீ அளவிற்கு பரந்து விரிந்துள்ளது. கபிர்தாம் ஒரு அழகான மற்றும் அமைதியான இடத்தில் அமைந்துள்ளதால் இயற்கை ஆர்வலர்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியைச் சுற்றி அழகிய காடுகள், மலைகள், மற்றும் மத சிற்பங்கள் உள்ளன. கபிர்தாமின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் சத்புராவின் மைக்கல் என்கிற மலைத்தொடரால் சூழப்பட்டிருக்கிறது. அது ஸகரி ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ளது. இது இந்த இடத்தின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கிறது . இந்த இடத்தில் உள்ள மலைகள் மற்றும் காடுகள் காண்பர்களின் மனதை பெரிதும் மயக்குகின்றது. இந்த இடத்தில் உள்ள பரந்த பசுமை காண்பவர்களின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றது.


Pankaj Oudhia

கோரியா

கோரியா


இந்தியாவின் மையப்பகுதியில் சட்டிஸ்கர் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் இந்த கோரியா மாவட்டம் அமைந்திருக்கிறது. இதன் தலைநகர் பைகுந்த்பூர். கோரியா மாவட்டத்தின் வடக்கே மத்தியப்பிரதேச மாநிலத்தின் சிதி மாவட்டம், தெற்கே கோர்பா மாவட்டம், கிழக்கே சுர்குஜா மாவட்டம் மற்றும் மேற்கே மத்தியப்பிரதேச மாநிலத்தின் அனுப்பூர் மாவட்டம் போன்றவை எல்லை மாவட்டங்களாக அமைந்திருக்கின்றன. வரலாற்று ரீதியாக 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய தகவல்கள் ஏதும் இந்த மாவட்டம் குறித்து கிடைக்கப்படவில்லை. இது ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஒரு சமஸ்தான மாவட்டமாக இயங்கியிருக்கிறது. இதற்கு அருகிலேயே சங் பக்கார் எனும் சமஸ்தானமும் இருந்திருக்கிறது. 1947ல் இந்தியா சுதந்திரமடைந்தபின் கோரியா மற்றும் சங் பக்கார் சமஸ்தான மன்னர்கள் இந்திய யூனியனுடன் தங்களை இணைத்துக்கொள்ள சம்மதித்தபின்பு இந்த இரண்டு சமஸ்தானங்களும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சுர்குஜா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

Read more about: travel, chhattisgarh