Search
  • Follow NativePlanet
Share
» »இந்த குகையில் தவம் செய்த பிறகுதான் பார்வதிக்கு கணபதி கிடைத்தாராம்!

இந்த குகையில் தவம் செய்த பிறகுதான் பார்வதிக்கு கணபதி கிடைத்தாராம்!

கணபதியை பெறுவதற்கு 12 வருடங்களாக பார்வதி தவம் செய்த குகை இதுதானாம்!

By Udhaya

எந்த வினை செய்யும்முன்பும் விநாயகரை வழிபட்டு தொடங்குவது நம்மில் பலருக்கும் இருக்கும் பழக்கம். பிள்ளையார் சுழி என்று ஒன்றை இட்டுத்தான் நாம் காரியம் எதையும் ஆரம்பிக்கிறோம். அப்படி இருக்கும் பிள்ளையார் எத்தனை சக்தி வாய்ந்தவர் என்பதை கூறித்தான் தெரியவேண்டுமா என்ன? அவரை பெறுவதற்கு பார்வதி தேவி 12 ஆண்டுகள் தவம் செய்திருக்கிறார். அந்த இடம் காடுகள் அடர்ந்த குகையாகும். வாருங்கள் அந்த இடத்துக்கு சென்றுவருவோம்.

எங்குள்ளது?

எங்குள்ளது?


பிள்ளையாரைப் பெறுவதற்காக பார்வதி தேவியார் 12 ஆண்டுகள் தவம் செய்த குகை மகராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஜூனாரிலிருந்து 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த இடத்தின் பெயர் லேன்யாத்ரி குகைகள்.

இந்த குகைகளைச் சுற்றி மன்மூடி குகைகள், சிவ்நேரி குகைகள் மற்றும் துல்ஜா குகைகள் ஆகியவை அமைந்துள்ளன. எல்லா குகைகளையும் சேர்த்துக் கணக்கிட்டால் மொத்தம் 26குகைகள் ஆகும்.

Niemru

புராணத்தின்படி விநாயகர்

புராணத்தின்படி விநாயகர்


புராணக்கதைகளின் படி, சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இரண்டு குழந்தைகள். ஒருவர் விநாயகர், இன்னொருவர் முருகர். முதலில் விநாயகரை பெறுவதற்காக பார்வதி தேவி சிவ பெருமானை வேண்டி தவம் இருந்தார். அது 12 ஆண்டுகள் ஆகும். தவம் இருந்த இடம் இதே லென்யாத்ரிதான்.

பல்வேறு இன்னல்களுக்கும் உள்ளான பார்வதி தேவி இறுதியில் விநாயகப் பெருமானைப் பெற்றார் என்கிறது புராணக்கதை.

Kevin Standage

 பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

லேன்யாத்ரி என்பதற்கான தமிழ் பொருள் மலைக்குகை என்பதாகும். நாம் புராணக்கதைகளைப் பற்றி தெரிந்து வைத்திருக்கிறோமென்றால், இது நன்கு புரியும். விநாயகரை ஏன் மகராஷ்டிரமக்கள் அதிக அளவில் பூசிக்கிறார்கள் என்பதும் விளங்கும். லேனா என்றால் மராத்தி மொழியில் குகை என்று பொருள். இதுவே அத்ரி என்றால் சமக்கிருதத்தில் மலை அல்லது கல் என்று பொருள். மலைக்குகை அல்லது கல்குகை என்று எப்படியும் பொருள் கொள்ளலாம்.

சுலேமான் குகை அல்லது சுலேமான் மலை என்றும் இது அழைக்கப்படுகிறது. கணேசா மலை என்றும் காப்பிச்சா என்றும் அழைப்பவர்களும் இருக்கிறார்கள்.

Kevin Standage

எப்படி செல்வது

எப்படி செல்வது

ஜூனாரிலிருந்து 5கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு நாம் புனேவிலிருந்து பேருந்து, டாக்ஸி மூலமாக செல்லமுடியும். மேலும், இங்கு அதிக அளவில் மனித நடமாட்டம் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் மட்டும் சில தூரம் நடந்து அல்லது வாடகை காரில் பயணிக்க வேண்டி வரும். குக்காடி எனும் ஆற்றின் அருகே அமைந்துள்ள காடுகளின் ஒரு ஓரத்தில் அமைந்துள்ள இந்த குகை.

Niemru

 100அடி உயரம்

100அடி உயரம்


கிட்டத்தட்ட 100 அடி உயர, மலையானது 100 வருடங்களுக்கு முன்னதாகவே பல அழகிய வேலைப்பாடுகளுடன் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது இங்கு சென்றாலே நமக்கு புரிய வருகிறது. அஸ்டவிநாயக கோயில்களில் மலை மீது அமைந்துள்ள ஒரே கோயில் இது மட்டும்தான். மேலும் இங்கு புத்த விகாரங்களும் உடன் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Kevin Standage

மலையேறலாமா

மலையேறலாமா

கணேசா அல்லது பிள்ளையார் கோயில் இந்த 26குகைகள் தொகுப்பில் 7வதாக அமைந்துள்ளது. மற்ற குகைகளுக்கு செல்வது சற்று ஆபத்தானதும் கூட. எனவே குழந்தைகள் பெரியவர்கள் உடன் வருபவர்கள் மிக அதிக கவனத்துடன் இருப்பது நல்லது. அல்லது அவர்களை அழைத்து வருவதை தவிர்த்துவிடலாம். சரி வாருங்கள் கோயிலுக்குள் செல்வோம்

Kevin Standage

 பிள்ளையார் கோயில்

பிள்ளையார் கோயில்

இந்த குகைகளில் ஏழாவது குகையில் இருக்கும் இந்த கோயில், புத்த விகாரங்களாக ஒரு காலத்தில் இருந்திருக்கவேண்டும். மன்னர்கள் சுற்றுப்பயணத்தின்போது இது பிள்ளையார் கோயிலாக மாறியிருக்கலாம். தூண்களே இல்லாத ஒரு முன் அறை பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நிறைய சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் வருகைத் தருகின்றனர்.

Niemru

அமைப்பு

அமைப்பு


தூண்களே இல்லாத முறையில் 20 அறைகள் கொண்ட ஹால், அதுவும் அட்டகாசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹால் மிகவும் பெரியது. இங்கு செல்ல தூண்கள் கொண்ட வராண்டா நடைபகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. 57அடி நீள ஹால், 51 அடி அகலமாகும். நுழைவு வாயிலுக்கும் இருபுறமும் சன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் கட்டிடக்கலையே நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது.

Kevin Standage

 இங்குள்ள பிள்ளையாரின் பெயர்

இங்குள்ள பிள்ளையாரின் பெயர்

இங்கு வீற்றிருக்கும் பிள்ளையாரின் பெயர் என்ன தெரியுமா? கிரிஜட்மஜா. அப்படி என்றால் என்ன என்று கேட்கிறீர்களா? அட்மஜா ஆப் கிரிஜா அதாவது பார்வதியின் மகனே என்று பொருள்.

இமயமலையின் மகள் என்று பார்வதிக்கு ஒரு பெயர் இருக்கிறது. இந்த மலையில் வந்து பார்வதி தவம் புரிந்ததால், இந்த மலை யில் வைத்து கணேசனை அதாவது பிள்ளையாரைப் பெறுகிறார். அதனால் இது கணேச மலை என்று அழைக்கப்படுகிறது.

Kevin Standage

 வழிபாடு

வழிபாடு

அஸ்டவிநாயகர் கோயில்களுள் ஒன்று இந்த லேன்யாத்ரி ஆகும். எட்டு கோயில்களில் இந்த கோயிலுக்கு ஆறாவதாக வரவேண்டும். சிலர் அதில் நம்பிக்கை கொள்வதில்லை. நேரடியாகவே இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

எட்டு விநாயகர் கோயில்களும் அருகருகே புனேவிலேயே அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு. ஒரே நாளில் எட்டு கோயில்களுக்கும் சென்றுவிட்டு திரும்பிவிடலாம்.

Magiceye

ஆறாவது குகை

ஆறாவது குகை


இந்த 26 குகைகளிலும் ஆறாவது குகை மிகவும் சிறப்பானதாகும். இது சைத்யா கிரகா என்று அழைக்கப்படுகிறது. இது அஜந்தா குகைகளில் காணப்படும் சைத்யா கிரகா போன்றதாகும். இருந்தாலும் அதை ஒப்பிடும்போது மிகவும் சிறியதாகும். இது வராண்டாவுடன், தூண்களையும், 5 படிகளையும் கொண்டுள்ளது.

Kevin Standage

 14வது குகை

14வது குகை

இதுவும் ஒரு சைத்யா கிரகா ஆகும். இது கூரையுடன் கூடியது. இங்கு தூண்கள் இல்லை. 6.75மீ நீளமும், 3.93மீ அகமும், 4.16மீ உயரமும் கொண்டது இது.

வராண்டாவில் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. எண்முகி வடிவத்தில் அந்த தூண்கல் உள்ளன. ஸ்தூபி ஒன்று 8 அரை அடி உயரத்துடன் காணப்படுகிறது.

Niemru

Read more about: travel temple hills
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X