Search
  • Follow NativePlanet
Share
» »உதயகிரியில் அப்படி என்ன உலகச் சிறப்பு தெரியுமா?

உதயகிரியில் அப்படி என்ன உலகச் சிறப்பு தெரியுமா?

உதயகிரியில் அப்படி என்ன உலகச் சிறப்பு தெரியுமா?

உதயகிரி, இந்தியாவின் தலைசிறந்த கட்டுமான அற்புதத்துக்கு மிகப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டாகும். மிகச் சரியாக சொல்வதானால், இது 'இயற்கையான பேருவகை மற்றும் மனிதக் கட்டிடக்கலை ஆகியவற்றின் அரிய கலவையாக' விளங்குகிறது. புத்த விகாரங்கள், ஸ்தூபிகள் மற்றும் அகழ்வாராய்ந்து எடுக்கப்பட்ட ஜெயின் கட்டுமான சிதிலங்கள் போன்றவற்றை உள்ளிடக்கிய இந்த இடம் கட்டுமானம் மற்றும் சரித்திர ரீதியில் அபரிமிதமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

 எங்குள்ளது?

எங்குள்ளது?

புபனேஷ்வரிலிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது , ‘சூரியோதய மலைகள்' என்று பொதுவாக அழைக்கப்படும் உதயகிரி.

Tessarman

 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்

இங்கு 18 குகைகள் உள்ளன. அவற்றில் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் மற்றும் குறிப்புகள் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தன்னகத்தே ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.


Jujhia Uttam

 புத்தம்

புத்தம்

காரவேலா ஆட்சிக்காலத்தின் போது ஜெயின் மத பிக்ஷுக்கள் தங்குவதற்காக மலைகளிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட பாறைகளைக் கொண்டு இந்த குகைகள் உருவாக்கப்பட்டதாக இங்குள்ள பல்வேறு குறிப்புகளிலிருந்து நமக்கு தெரியவருகிறது.

Jujhia Uttam

 உதயகிரி குகைகள்

உதயகிரி குகைகள்

உதயகிரியில் காணப்படும் 18 குகைகளும் மொத்தமாக உதயகிரி குகைகள் என்று அழைக்கப்படுகின்றன. உதயகிரிக்கு அடுத்தாற் போல் இருக்கும் மலையான கந்தகிரி, சுமார் 15 குகைகளைக் கொண்டுள்ளது.

Amartyabag .

 புத்த மத வளாகம்

புத்த மத வளாகம்


ஒடிஷாவிலுள்ள புத்த மத வளாகம் லலித்கிரி, ரத்னகிரி, உதயகிரி மற்றும் தௌலிகிரி ஆகிய மலைகளில் அமைந்துள்ளது. இவற்றுள், உதயகிரியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள தௌலிகிரியில் அமைந்துள்ள ஒரு வளாகம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Amartyabag

 கந்தகிரி குகைகள்

கந்தகிரி குகைகள்

கந்தகிரி குகைகள், உதயகிரி குகைகளுக்கு பக்கவாட்டில் சுமார் 15 முதல் 20 மீட்டர் வரையிலான சுற்றளவில் காணப்படுகின்றன. இக்குகைகளை அடைய படிக்கட்டுகள் வழியாகச் செல்ல வேண்டும்.

Balajijagadesh

 லலித்கிரி

லலித்கிரி


உதயகிரியிலிருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தின் முக்கிய ஈர்ப்பாகத் திகழ்வது, புத்தரின் எலும்புகள் அடங்கிய நினைவுப் பெட்டகம் மற்றும் 1 ஆம் நூற்றாண்டு ஏடியைச் சேர்ந்த பழங்கால தொல்பொருளியல் அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் முதலிய அரிய பொக்கிஷங்களைக் கொண்டிருக்கும் அருங்காட்சியகமே ஆகும்.

Bernard Gagnon

 ரத்னகிரி

ரத்னகிரி

ரத்னகிரி, உதயகிரியிலிருந்து சுமார் 73 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. நகரின் பரபரப்புகளிலிருந்து ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இந்த தனிமையான, நிச்சலனமான இடமாகிய இது, அநேகமாக எவ்விதத் தொந்தரவுமின்றி தியானம் செய்வதற்காக புத்த பிக்ஷுக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது..

Devopam

 லாங்குடி மலை

லாங்குடி மலை


லாங்குடி மலை, மஹாநதி டெல்டாவிலிருந்து சுமார் 90 கி.மீ. தொலைவில், ஜெய்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய மலையாகும். அழகிய நதியான கெலுவா, இம்மலைகளின் ஊடாகப் பாய்ந்து செல்கிறது.

Ashishkumarnayak

Read more about: travel hills
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X