Search
  • Follow NativePlanet
Share

உதயகிரி – புத்த மத யாத்திரை பூமி!

20

உதயகிரி, இந்தியாவின் தலைசிறந்த கட்டுமான அற்புதத்துக்கு மிகப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டாகும். மிகச் சரியாக சொல்வதானால், இது ‘இயற்கையான பேருவகை மற்றும் மனிதக் கட்டிடக்கலை ஆகியவற்றின் அரிய கலவையாக’ விளங்குகிறது. புத்த விகாரங்கள், ஸ்தூபிகள் மற்றும் அகழ்வாராய்ந்து எடுக்கப்பட்ட ஜெயின் கட்டுமான சிதிலங்கள் போன்றவற்றை உள்ளிடக்கிய இந்த இடம் கட்டுமானம் மற்றும் சரித்திர ரீதியில் அபரிமிதமான முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

புபனேஷ்வரிலிருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்து, ‘சூரியோதய மலைகள்’ என்று பொதுவாக அழைக்கப்படும் உதயகிரி, இங்குள்ள 18 குகைகளுள் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் மற்றும் குறிப்புகளினால் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை தன்னகத்தே ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது.

காரவேலா ஆட்சிக்காலத்தின் போது ஜெயின் மத பிக்ஷுக்கள் தங்குவதற்காக மலைகளிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட பாறைகளைக் கொண்டு இந்த குகைகள் உருவாக்கப்பட்டதாக இங்குள்ள பல்வேறு குறிப்புகளும் உரைக்கின்றன.

உதயகிரி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

உதயகிரியில் காணப்படும் 18 குகைகளும் மொத்தமாக உதயகிரி குகைகள் என்று அழைக்கப்படுகின்றன. உதயகிரிக்கு அடுத்தாற் போல் இருக்கும் மலையான கந்தகிரி, சுமார் 15 குகைகளைக் கொண்டுள்ளது.

உதயகிரி மற்றும் கந்தகிரி ஆகிய இரண்டுமே உதயகிரி சுற்றுலாத்துறையின் பெருமைமிகு பீடங்களாக விளங்குகின்றன. இவ்விரு மலைகளோடு, லாங்குடி மலை, லலித்கிரி மற்றும் ரத்னகிரி ஆகியவையும் பிரசித்தி பெற்ற புத்த மத ஸ்தலங்களாகத் திகழ்கின்றன.

இவற்றுள் லலித்கிரி, கௌதம புத்தரின் நினைவுச் சின்னங்களைக் கொண்டிருக்கும் பெருமை வாய்ந்ததாகும். இந்த வசீகரமான ஸ்தலங்கள் உதயகிரி சுற்றுலாத்துறையின் பணவரவு மற்றும் உயர்ந்த அந்தஸ்த்துக்கு கட்டியம் கூறுவனவாக உள்ளன.

உதயகிரி வானிலை

உதயகிரியின் வானிலை கோடைகாலம், மழைக்காலம் மற்றும் குளிர்காலம் என்று மூன்று பருவங்களாகப் பிரிக்கப்படுகிறது. கோடைகாலம் வழக்கமாக வெப்பமாகவும், புழுக்கத்துடனும் காணப்படும்; ஆனால் குளிர்காலமோ உறைய வைக்கும் குளிருடன் இருக்கும்.

உதயகிரியை எவ்வாறு அடையலாம்?

உதயகிரி, ஒடிஷாவுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு பாரம்பரிய ஸ்தலமாகும். அதனால் இந்த இடத்தை தொடர்பு கொள்வது ஒரு பிரச்சினையே அல்ல.

உதயகிரி, புவனேஷ்வருக்கு வெகு அருகில் அமைந்துள்ளதனால் சுற்றுலாப் பயணிகள் வான், இரயில் அல்லது சாலை வழி போக்குவரத்து சேவைகள் மூலம் பயணம் செய்து எளிதாக இங்கு வந்தடையலாம்.

கட்டாக் இரயில் நிலையமே இதற்கு அருகாமையில் அமைந்துள்ளது. உதய்கிரியின் வானிலை குளுமையாகவும், ரசிக்கத்தக்கதாகவும் இருக்கக்கூடிய அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தின் போது உதயகிரி சுற்றுலாத்துறை, அதிகமான பயணிகளின் வருகையைக் காண்கிறது.

உதயகிரி சிறப்பு

உதயகிரி வானிலை

சிறந்த காலநிலை உதயகிரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது உதயகிரி

  • சாலை வழியாக
    சுற்றுலாப் பயணிகள் ஒடிஷாவின் எந்த இடத்திலிருந்தும் பேருந்து மூலம், உதயகிரி மற்றும் ரத்னகிரி ஆகியவற்றுக்கான பேருந்து நிறுத்தமாக செயல்படும் கிருஷ்ணதாஸ்பூரை சென்று அடையலாம். இங்கு காணப்படும் பெரும்பாலான பேருந்துகள் டீலக்ஸ் மற்றும் செமி-டீலக்ஸ் வகை பேருந்துகளே. எனவே சுற்றுலாப் பயணிகள் அவர்கள் வசதிக்கேற்ப பொருத்தமான பேருந்தை தேர்வு செய்து பயணிக்கலாம். இங்கிருந்து, பார்க்க விரும்பும் சுற்றுலாத் தலங்களுக்கு டாக்ஸிக்கள், ஆட்டோ ரிக்க்ஷாக்கள் அல்லது சைக்கிள் ரிக்க்ஷாக்கள் மூலம் பயணிக்கலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    உதயகிரிக்கு அருகாமையில் உள்ள இரயில் நிலையம், சுமார் 258 கி.மீ. சுற்றளவில் காணப்படும் கட்டாக் இரயில் நிலையமே ஆகும். மாநிலத்தின் பிரதான இரயில் சந்திப்புகளுள் ஒன்றான இந்நிலையம், ஒடிஷாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. உதயகிரிக்கு வருகை தரக்கூடிய எண்ணிலடங்கா பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, இவ்வூர் சிறப்பான பேருந்து மற்றும் டாக்ஸி சேவைகளால் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    உதயகிரிக்கு அருகாமையில் உள்ள விமான நிலையம் சுமார் 100 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள புவனேஷ்வரின் பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையமே ஆகும். நாட்டின் அனைத்து உள்நாட்டு விமான நிலையங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், அயல்தேசங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வரிலிருந்து பேருந்து அல்லது வாடகை டாக்ஸி மூலம் உதயகிரியை எளிதாக அடையலாம்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Fri
Check Out
20 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat