» »சிரிக்கும் குயிலைப் பார்த்திருக்கிறீர்களா? இங்க போங்க

சிரிக்கும் குயிலைப் பார்த்திருக்கிறீர்களா? இங்க போங்க

Written By: Udhaya

உத்ரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயங்கள் நாம் இந்தியாவில் கட்டாயம் காணவேண்டி தளங்களில் ஒன்றாகும். இந்த மாநிலத்தில் இருக்கும் முக்கியமான பத்து பறவைகள் சரணாலயங்களிலும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் இருக்கின்றன. ஒரு சரணாலயத்தில் சிரிக்கும் குயிலை காணலாம். இது உங்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தரும். அந்த குயில் பாடுவது உங்களுக்கு சிரிப்பது போலவே இருக்குமாம். மேலும் உலகிலேயே எங்குமே காணப்படாத இனமான பஹரி பேடர் எனும் பறவையும் இந்த மாநிலத்தில் காணப்படுகிறது. மேலும் இந்தியாவிலேயே இமாலய கறுப்பு கரடி இங்குதான் காணப்படுகிறது. என்டமிக் எனும் பறவையும் இந்த மாநிலத்தின் ஒரு சரணாலயத்தில் காணப்படுகிறது. இன்னும் நிறைய விசயங்கள் இருக்கிறது வாருங்கள் காணலாம்.

வினோக் மவுண்டைன் குவாய்ல் சரணாலயம்

வினோக் மவுண்டைன் குவாய்ல் சரணாலயம்


லைப்ரரி பாயிண்டில் இருந்து தெற்கு நோக்கி 11கிமீ தொலைவில் அமைந்திருக்கும் வினோக் மவுண்டைன் குவாய்ல் சரணாலயம் 1993ல் உருவாக்கப்பட்டது. 339ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த சரணாலயம் அழிந்த இனமாக கருதப்படும் இமாலய குவாய்ல் என்றழைக்கப்படும் பஹரி பேடர் பறவைக்கு சரணாலயமாக திக்ழந்ததாக சொல்லப்படுகிறது. கடைசியாக இப்பறவை 1876ல் தென்பட்டது.
Yoc2007

 கில்பரி

கில்பரி

கில்பரி எனும் இந்த அழகிய பிக்னிக் சுற்றுலாத்தலம் நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. ஓய்வாக விடுமுறையை கழிப்பதற்கு மிகவும் பொருத்தமான இந்த இடம் வளமான ஓக், பைன் மரங்கள் மற்றும் ரோடோடென்ரோன் காடுகளால் சூழப்பட்டிருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 2194 மீ உயரத்தில் இந்த இடம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. கில்பரி ஸ்தலத்தில் 580 வகையான பறவை இனங்கள் வசிக்கின்றன என்பதால் இவற்றையும் பயணிகள் ரசித்து மகிழலாம். பிரவுன் வுட் ஆந்தை, காலர்ட் க்ராஸ்பீக் பறவை மற்றும் சிரிக்கும் குயில் போன்ற அபூர்வ பறவைகளை இப்பகுதியில் பயணிகள் காணலாம். மேலும் இங்குள்ள ஒரு காட்டு பங்களாவில் ஓய்வெடுக்கவும் வசதி உள்ளது.

Vikashegde

நந்தா தேவி தேசியப் பூங்கா

நந்தா தேவி தேசியப் பூங்கா

பூங்கா மேற்குப்புற இமாலய என்டமிக் பறவைப் பகுதியின் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளது. நந்தா தேவி தேசியப் பூங்காவில், பனிச்சிறுத்தை, இமாலயன் கறுப்புக்கரடி, செரோவ் வகை ஆடுகள், பழுப்பு நிற கரடி, ரூபி த்ரோட், பாரல் வகை ஆடுகள், கரடிக் குரங்குகள், க்ரோஸ்பீக் வகை பறவைகள், இமாலயன் கஸ்தூரி மான் மற்றும் இமாலயன் வரையாடுகள் போன்ற விலங்குகளைக் காணும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்த தேசியப் பூங்கா சுமார் 100 வகை பறவையினங்களின் வாழ்விடமாகவும் விளங்குகிறது. இங்கு அதிகமாகக் காணப்படும் பறவைகள், ஆரஞ்சு ஃப்ளாங்க்ட் புஷ் ராபின், நீல ஃப்ரன்டட் ரெட்ஸ்டார்ட், மஞ்சள் வயிறுடைய ஃபான்டெயில் ஃப்ளைகாட்சர், இந்திய மரவாழ் வானம்பாடிகள், மற்றும் செந்நிற நெஞ்சுப் பகுதி கொண்ட வானம்பாடிகள் ஆகியனவாகும். இப்பூங்கா சுமார் 312 வகை மலர்கள் மற்றும் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

KARTY JazZ

நீல் தாரா பறவைகள் சரணாலயம்

நீல் தாரா பறவைகள் சரணாலயம்

ஹரித்வாரில் இருந்து 4கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நீல் தாரா பக்‌ஷி விஹார் (நீல் தாரா பறவைகள் சரணாலயம்) பறவைகளைக் காண விரும்புவோரின் சொர்கபுரியாக திகழ்கிறது. பீம்கோடா பாராஜில் அமைந்திருக்கும் இச்சரணலாயத்திற்கு சைபீரிய கொக்குகள் உள்ளிட்ட ஏராளமான இடம்பெயர் பறவைகள் குளிர்காலத்தில் வருகை தருகின்றன.

J.M.Garg

ஆசன் பரேஜ்

ஆசன் பரேஜ்

ஆசன் மற்றும் யமுனா நதிகள் சந்திக்கும் இடத்தில் ஆசன் பரேஜ் உள்ளது. ஆசன் நதியின் மூலம் உருவாக்கப்பட்ட நான்கு சதுர பரப்பளவிலான செயற்கை ஈர நிலத்தை இங்கு காணலாம். நீரின் அளவு குறையும் போது பல மண் தீவுகளையும் இங்கு பார்க்க முடியும். சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் இங்கு வரும் பறவைகளை அரிய வகை பறவைகள் என்று சான்றளித்துள்ளது. மல்லார்ட் என்ற காட்டு வாத்து, சிவப்பு முகம் கொண்ட ஆண் வாத்து, சிவப்பு நிற வாத்துவகை, தண்ணீர்க் கோழி, பெரிய நீர்க் காகம், உண்ணிக்கொக்கு, வாலாட்டுக்குறுவி, குளநாரை, மீன்பிடிக் கழுகுகள், சேற்றுப் பூனைப் பருந்து, பெரிய புள்ளிகளுடைய கழுகு, கடற் பறவை, மற்றும் வன்பாலை போன்ற அரிய வகை பறவைகளை பறவை விரும்பிகள் கண்டு ரசிக்கலாம்.

Subhajit Saha

சீதாபனி

சீதாபனி

இந்த இடம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல், இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. உண்மையில் இவ்விடம், புலிகள், யானைகள், மான்கள், சம்பார், குரைக்கும் மான்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் ராஜநாகங்கள் இயற்கையாகவே வசித்து வரும் இடமாகும். சீதாபனி வனத்துறையினர் இங்கே யானை சவாரி செய்வதற்கு ஏற்ற வசதிகளை செய்து தருகிறார்கள்.
Ankitv2512

 சில்லா வனவிலங்கு சரணாலயம்

சில்லா வனவிலங்கு சரணாலயம்

சில்லா வனவிலங்கு சரணாலயம் 249 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. ஹரித்வாரில் இருந்து 10கிமீ தூரத்தில் கங்கை கரையில் உள்ளது இந்த சரணாலயம். 1983ல் இந்த சரணாலயம், மோடிசூர் மற்றும் ராஜாஜி சரணாலயங்களுடன் இனைக்கப்பட்டு ராஜாஜி தேசியப் பூங்காவாக உருவாக்கப்பட்டது. புலிகள், யானைகள், கரடிகள், சிறிய பூனைகள் ஆகிய பல விலங்குகளின் சரணாலயமாக சில்லா வனவிலங்கு சரணாலயம் திகழ்கிறது. அதுமட்டுமல்லாது பலவிதமான பறவைகளையும் பயணிகள் இங்கு கண்டுகளிக்கலாம். நவம்பர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் இங்கு வர ஏற்ற மாதங்களாக கருதப்படுகிறது.
Subhajit Saha

குவானோ ஹில்ஸ்

குவானோ ஹில்ஸ்

குவானோ ஹில்ஸ் என்பது நைனித்தால் நகரத்திற்கு அருகில் பாங்கோட் கிராமப்பகுதியில் அமைந்திருக்கும் மலைத்தொடர்களை குறிக்கிறது. இம்மலைகளில் அமைந்துள்ள மலையேற்றப்பாதைகள் செழிப்பான ஓக், தேவதாரு மற்றும் மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிகள் வழியே நீள்கின்றன. பல அரிய மூலிகைத்தாவரங்கள், அரிய வகை பறவையினங்கள் ஆகியவற்றை இம்மலைப்பகுதியில் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இயற்கை ரசிகர்களுக்கும், புகைப்பட ஆர்வலர்களுக்கும் மிகவும் பொருத்தமான இடம் இந்த குவானோ ஹில்ஸ் ஆகும்.
Spattadar

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்