Search
  • Follow NativePlanet
Share
» »வந்தே பாரத் ரயில் ரயில்வேக்கு சொந்தமானது கிடையாதா?...ஒரிஜினல் ஓவர் இவங்க தானா?

வந்தே பாரத் ரயில் ரயில்வேக்கு சொந்தமானது கிடையாதா?...ஒரிஜினல் ஓவர் இவங்க தானா?

நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் இணைக்கும் மிகப் பெரிய வலைப்பின்னல் அமைப்பாக இருப்பது இந்திய ரயில்வே. இது உலகின் நான்காவது மிகப்பெரிய ரயில்வே அமைப்பாக திகழ்கிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ராஜதானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற உயர் ரக, அதிநவீன வசதிகள் கொண்ட ரயில்களாகவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தும் விரைவு ரயில்களாகவும் இருப்பதால் இவற்றை அதிகமானவர்கள் தேர்வு செய்ய துவங்கி உள்ளனர். சிறந்த ரயில் பயணங்களாக மக்கள் மனதில் தனி இடம் பிடித்திருக்கின்றன. சொகுசு பயணத்தை விரும்புபவர்களின் சிறந்த தேர்வாக இந்த ரயில்கள் உள்ளன.

Vande Bharat

இந்த சொகுசு ரயில்கள் அனைத்தும் இந்திய ரயில்வே நிர்வாகத்தால் இயக்கப்படுகிறதே தவிர இவற்றின் ஒரிஜினல் இந்திய ரயில்வே கிடையாது என்பது உங்களுக்கு தெரியுமா? வாங்க, இந்தியாவின் சொகுசு ரயில்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

உண்மையான உரிமையாளர்

இந்திய ரயில்வே நிதி கழகம் (Indian Railway Finance Corporation - IRFC) என்ற நிறுவனமே இந்த ரயில்களின் உண்மையான உரிமையாளர். IRFC என்பது ஒரு அரசுக்கு சொந்தமான நிதி நிறுவனமாகும்.1986-ஆம் ஆண்டு இந்திய அரசு இதை நிறுவியது. இதன் பிரதான பணி, இந்திய ரயில்வேக்கான நிதி தேவைகளை பூர்த்தி செய்வது.

Vande Bharat

வந்தே பாரத் சிறப்பு தகவல்

வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் ரூ.1055-1890 ஆகும். ஒரு வந்தே பாரத் ரயிலின் விலை ரூ.104.35 கோடியாகும். இந்த ரயிலின் ஒரு பெட்டிக்கான செலவு மட்டும் ரூ.6.52 கோடி ஆகும். 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை 408 வந்தே பாரத் ரயில் பெட்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான செலவு ரூ.2732.72 கோடியாகும். 21 முதல் 22 பெட்டிகள் கொண்ட சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலை தயாரிக்க ரூ.47.45 கோடி ஆகிறது. வந்தே பாரத், சதாப்தி ஆகிய இரண்டு ரயில்களும் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் பயணிக்கக் கூடியவையாகும்.

IRFC என்ன செய்கிறது?

இந்திய ரயில்வே கட்டுமானத் திட்டங்களுக்கு நிதி வசதிகளை ஏற்படுத்துகிறது. மேம்பட்ட ரயில்கள், எலக்ட்ரிக் லொகோமோட்டிவ்கள், கோச்சு ரயில்கள் (coaches), சாமான்கள் கையாளும் வாகனங்கள் போன்றவற்றை வாங்கி, இவை அனைத்தையும் இந்திய ரயில்வேக்கு வாடகைக்கு அளிக்கிறது. இந்த சொத்துக்களுக்காக இந்திய ரயில்வே IRFC-க்கு முறையான வாடகை கட்டணங்களை செலுத்துகிறது.

வாடகைக்கு இயங்கும் ரயில்கள்:

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ராஜதானி எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற உயர் தர ரயில்கள் அனைத்தும் IRFC மூலமே வாங்கப்பட்டவை. எனவே, இவை உரிமை கூறுவதற்கான சட்டபூர்வ உரிமம் IRFC-க்கே சொந்தமானது.

ஏன் இவ்வாறு செய்யப்படுகிறது?

இந்திய ரயில்வேக்கு ஒரு பெரும் பணி, நாடு முழுவதும் ரயில்வே வசதிகளை விரிவுபடுத்தும் பணியில் அதிக முதலீடு தேவைப்படுகிறது. ஆனால் நேரடியாக இத்தனை சொத்துகளை வாங்குவதற்கு நிதி சவால்கள் உள்ளன. எனவே IRFC வழியாக சொத்துகளை வாங்கி, பின்னர் வாடகைக்கு இயங்கும் முறை மிகவும் நுண்ணியமாகவும், செலவுச் சிக்கனமானதுமான முறையாக உள்ளது.

More News

    Read more about: vande bharat indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+