Search
  • Follow NativePlanet
Share
» »வெவ்வேறு கட்டிடக்கலையில் பல பழங்கால தேவாலயங்களைக் காண பாண்டிச்சேரிக்கு செல்லுங்கள்!

வெவ்வேறு கட்டிடக்கலையில் பல பழங்கால தேவாலயங்களைக் காண பாண்டிச்சேரிக்கு செல்லுங்கள்!

சென்னையிலிருந்து 150 கிமீ தொலைவில் அமைந்துள்ள அழகிய நகரமான புதுச்சேரி சென்னை வாசிகளுக்கு மிகவும் பிடித்த ஸ்பாட்டாகும். பிரெஞ்சு கலாச்சாரம் நிறைந்த கட்டிடங்கள், துடிப்பான கஃபேக்கள், இரவு பார்ட்டிகள், வண்ணமயமான கடற்கரைகள் என பல முகங்கள் புதுச்சேரிக்கு இருந்தாலும் ஆன்மீக தலைநகராகவும் புதுவை விளங்குகிறது. நேர்த்தி, அழகு, பாரம்பரியம் நிறைந்த போர்த்துகீசிய, பிரெஞ்சு, டச்சு, ஆங்கிலேய கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் பல தேவாலயங்கள் பாண்டிச்சேரியில் உள்ளன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் யாத்ரீகர்கள் புதுவையின் இந்த தேவாலயங்களுக்கு வருகை தருகிறார்கள். அவற்றைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?

Basilica of the Sacred Heart of Jesus

தூய இருதய ஆண்டவர் தேவாலயம் (Basilica of the Sacred Heart of Jesus)

புதுவை ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள இந்த புகழ்பெற்ற தேவாலயம் 1700களில் பிரெஞ்சு மிஷனரிகளால் கட்டப்பட்டதாகும். சுப்பையா சாலையில் உள்ள தெற்கு பவுல்வர்டில் அமைந்துள்ள இந்த தேவாலயம் அழகிய இந்தோ-கோதிக் கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது. இயேசுவின் புனித இதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கத்தோலிக்க தேவாலயம் சமீபத்தில் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. கத்தோலிக்க திருச்சபை புனிதர்கள் மற்றும் ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையின் சில முக்கிய நிகழ்வுகள் பொறிக்கப்பட்ட கண்ணாடிகள், பாரிஷ் ஹால், லூர்து மாதாவுக்கான க்ரோட்டோ, ஒரு சமுதாய கூடம் மற்றும் ஒரு தத்தெடுப்பு தேவாலயம் ஆகியவை தேவாலய வளாகத்தில் உள்ளன.

immaculateconceptioncathedral1

புனித ஜென்மராக்கினி தேவாலயம் (Immaculate Conception Cathedral)

"சம்பா கோவில்" என்றும் அழைக்கப்படும் இம்மாகுலேட் கன்செப்சன் கதீட்ரல், பாண்டிச்சேரி மிஷன் தெருவில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான தேவாலயமாகும். இது பாண்டிச்சேரி மற்றும் கடலூர் ரோமன் கத்தோலிக்க உயர் மறைமாவட்டத்தின் தாய் தேவாலயமாகும். பல முறை கட்டப்பட்டு பலமுறை இடிக்கப்பட்டு வந்த தேவாலயத்தில் நல்ல ஆரோக்கியத்தின் அன்னை, புனித ஜோசப், புனித தெரேஸ் ஆஃப் லிசியக்ஸ், புனித இதயம் மற்றும் அசிசியின் புனித பிரான்சிஸ் ஆகியோரின் பலிபீடம் உள்ளது. புதுவைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் இந்த அழகிய தேவாலயத்தை பார்வையிட விரும்புகிறார்கள்.

ourladyoflourdesshrine1

லூர்து அன்னை தேவாலயம் (Our Lady of Lourdes Shrine)

புதுச்சேரியில் உள்ள தேவாலயங்களிலேயே மிகவும் பழமையான தேவாலயம் வில்லியனூரில் அமைந்துள்ள தூய லூர்து அன்னை ஆலயமாகும். 1876 இல் கட்டப்பட்ட இந்த தேவாலயம், பிரான்சில் உள்ள லூர்து அன்னை தேவாலயத்தின் உண்மையான உணர்வைத் தருகிறது. இந்த அழகிய கட்டிடக்கலைக்கு வருகை தரும் போது, பிரஞ்சு அரசாங்கத்தால் தேவாலயத்திற்கு பரிசாக வழங்கப்பட்ட நோட்ரே டேமின் பிரமிக்கவைக்கக்கூடிய சிலையையும் நீங்கள் காணலாம். இயற்கையாகவே உருவான இந்த திருத்தலத்தின் புனித குலத்தின் நீர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதாகவும், நல்ல அதிர்ஷ்டத்தை தருவதாகவும் கருதப்படுகிறது.

ourladyofangelschurch1

புனித சமணசுகளின் அன்னை தேவாலயம் (Our Lady of Angels Church)

1855 ஆம் ஆண்டில் மூன்றாம் நெப்போலியனால் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் அசல் அமைப்பு எழுப்பப்பட்டது. கிரேக்க-ரோமன் கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்டுள்ள இந்த அழகிய தேவலாயம், சர்கூஃப் மற்றும் டுமாஸ் தெரு ஆகிய இரண்டு பிரபலமான தெருக்களின் மூலையில் பிரமாண்டமாக நிற்கிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆங்கிலம், தமிழ், பிரெஞ்ச் ஆகிய மூன்று மொழிகளில் திருமஞ்சனம் கொண்டாடப்படுவது இந்த ஆலயத்தின் தனி சிறப்பாகும். தேவாலய வளாகத்தில் ஏராளமான நினைவுச்சின்னங்களையும் நீங்கள் காண்பீர்கள், அவை ஒவ்வொன்றும் பார்க்க வேண்டியவை.

ourladyofassumptionchurch1

விண்ணேற்பு அன்னை தேவாலயம் (Our Lady of Assumption Church)

தனித்துவமான பிரஞ்சு கட்டிடக்கலை வடிவங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட அற்புதமான அழகான தேவாலயம் புதுவை நெல்லித்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது. நூற்று அறுபது ஆண்டுகள் பழமையான இந்த தேவாலயத்தில் பிரஞ்சு கட்டிடக்கலை வடிவங்களால் சூழப்பட்ட சிலைகளின் சிறந்த தொகுப்பு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மிகவும் விமர்சியாக இந்த தேவாலயத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

நீங்கள் எப்போது புதுச்சேரிக்கு வந்தாலும் சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாக நிற்கும் இந்த அழகிய தேவாலயங்களைக் காண தவறாதீர்கள்!

More News

Read more about: pondicherry
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+