» »இராமர் அரசாட்சி செய்த அயோத்தியாவைப் பற்றி தெரியுமா?

இராமர் அரசாட்சி செய்த அயோத்தியாவைப் பற்றி தெரியுமா?

Posted By: Udhaya

திராவிட நாடு உருவானால் அப்போ இதுதானுங்களே மெயின்!

இந்த நூற்றாண்டில் பிறந்த பலருக்கு பாபர் மசூதி பற்றி ஏதும் தெரியுமா என்பது சந்தேகத்துக்குரிய விசயமாகும். மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விசயமாக கருதப்படும் இந்த பாபர் மசூதி இருந்த இடம், ராமர் பிறந்து வளர்ந்த இடம் என்று பலரால் நம்பப்படுகிறது.

சர்யு நதிக்கரையில் அமைந்துள்ள அயோத்யா,ஹிந்துக்களின் புகழ் பெற்ற புனித ஸ்தலமாகும். விஷ்ணு பெருமானின் ஏழாவது அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ ராமருக்கும் இந்த இடத்திற்கும் நெருங்கிய பந்தம் இருப்பதாக நம்பப்படுகிறது. சூர்ய வம்சத்தின் தலைநகரமான அயோத்யாவில் தான் ராமபிரான் பிறந்தார் என்று ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இராமாயண இதிகாசத்தில் இளவரசர் ராமரை பற்றியும், அவரது 14 வருட வனவாசத்தைப் பற்றியும், ராவணனை வீழ்த்தி திரும்பவம் நாட்டிற்கு திரும்பியதைப் பற்றியும் விரிவாக உள்ளது.

இங்கு மாட்டுக்கறிக்குத் தடை.... ஆனா காசியில் என்ன நடக்குது தெரியுமா?

இதுகுறித்து முழுவதுமாக காணலாம் வாருங்கள்.

சமயஞ்சார்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் அயோத்யா

சமயஞ்சார்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் அயோத்யா

ஹிந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் அயோத்யாவில், புத்த மதம், ஜெயின் மதம் மற்றும் இஸ்லாமியமும் எஞ்சியிருக்கிறது.

Ramnath Bhat

தீர்த்தன்கரா

தீர்த்தன்கரா

ஜெயின் மதத்தில் தீர்த்தன்கரா என்றழைக்கப்படும் சாதுக்களில் ஐவர் அயோத்யாவில் பிறந்துள்ளனர் என்று நம்பப்படுகிறது. அதில் ஒருவர் தான் ரிஷப்தேவ் என்ற முதல் தீர்த்தன்கரா.

hi.wikipedia

சுற்றுலா

சுற்றுலா

அயோத்யா சுற்றுலா மிகவும் சுவைமிக்கதாக இல்லாமல் போக சில காரணங்கள் உள்ளன.

Vishwaroop2006

பாபர்

பாபர்

1527-ஆம் வருடம் முகலாய பேரரசர் பாபர், ராம ஜன்ம பூமி பகுதியில் பாப்ரி மஸ்ஜித் என்ற மசூதியை எழுப்பினார்.

வழக்கு

வழக்கு

1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் உள்ளது.

அயோத்யா மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள்

அயோத்யா மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்கள்

அயோத்யா நகரம் ஹிந்துக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலமாகும். ஆன்மீகவாதிகளுக்கு அயோத்யா பல சுற்றுலா ஈர்ப்புகளை அளிக்கின்றன.Mukulfaiz

நாகேஷ்வர்நாத் கோவில்

நாகேஷ்வர்நாத் கோவில்

நாகேஷ்வர்நாத் கோவில் (ராமபிரானின் மகனான குசாவால் கட்டப்பட்டது என்று நம்பப்படுகிறது) மற்றும் சக்ர ஹர்ஜி விஷ்ணு கோவில் இங்குள்ள கோவில்களில் மிக முக்கியமானதாகும்.

துளசிதாஸ்

துளசிதாஸ்

ராமயணத்தை மீண்டும் எழுதிய துளசிதாஸ் என்பவரின் நினைவாக இந்திய அரசாங்கம் துளசி ஸ்மாரக் பவன் என்ற நினைவகத்தை எழுப்பியுள்ளது. 1992-ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தில் தான் ராம் ஜன்ம பூமி உள்ளது.

Nmisra

ஹனுமான் கர்ஹி

ஹனுமான் கர்ஹி

கனக பவன் என்ற இடத்தில் ராம பிரான் மற்றும் சீதா பிராட்டி தங்க கிரீடம் அணிவித்த ஓவியங்களை காணலாம். ஹனுமான் கர்ஹி என்ற கோவில் பெரிய கோட்டை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராமரின் தந்தை

ராமரின் தந்தை

இதன் நாலாப் பக்கமும் வட்ட வடிவத்தில் கோட்டையின் முன் தள்ளிக் கொண்டிருக்கும் முகப்புகளை காணலாம். தசரத் பவன் என்ற இடம் ராமரின் தந்தையான தசரத சக்ரவர்த்தியின் நினைவாக எழுப்பப்பட்டதாகும்.

ட்ரேடா-கே-தகூர்

ட்ரேடா-கே-தகூர்

ட்ரேடா-கே-தகூர் என்ற இடத்தில் தான் ராமபிரான் அஸ்வமேத யாகத்தை மேற்கொண்டார் என்று நம்பப்படுகிறது.

சீதா கி ரசோய்

சீதா கி ரசோய்

சீதா கி ரசோய் என்ற இடம் ராம் ஜன்ம பூமி கோவிலுக்கு அருகில் உள்ளது. இந்த இடத்தில் தான் சீதா தேவி திருமணத்திற்கு பிறகு ராம பிரானுக்கு முதன் முதலில் சமைத்தார் என்று நம்பப்படுகிறது.
மேலும் சர்யு நதிக்கு அருகில் இருக்கும் நீராடு துறையான ராம் கி பைடியையும் பார்க்க தவறாதீர்கள்.

Nmisra

https://en.wikipedia.org/wiki/Tulsi_Peeth#/media/File:JagadguruRamabhadracharya002.jpg

மணி பர்பாத்

மணி பர்பாத்

முன்னாட்களில் புத்த விஹாரமாக இருந்த மணி பர்பாத் என்ற இடம் இப்போது இந்துக் கோவிலாக உள்ளது. இங்கிருந்து நகரத்தின் எழில் மிகு காட்சியை கண்டு களிக்கலாம்.

அயோத்யாவின் வானிலை

அயோத்யாவின் வானிலை

அயோத்யா செல்ல நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையே சிறந்த பருவமாகும். மற்ற நேரங்களில் வெப்பம் மிகவும் அதிகமாக நிலவும். இருப்பினும் இது புகழ் பெற்ற புனித ஸ்தலமாக விளங்குவதால் இங்கு வருடம் முழுவதம் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

அயோத்யாவை அடைவது எப்படி?

அயோத்யாவை அடைவது எப்படி?


அயோத்யாவிற்கு விமானம், இரயில் மற்றும் தரை வழியாகவும் சுலபமாக சென்று வரலாம்.

Read more about: travel, temple, ayodhya