» »கண்கவரும் நிலமும், முடிவில்லாத மலைகளும்! ஜெயின்டியா மலைகள்

கண்கவரும் நிலமும், முடிவில்லாத மலைகளும்! ஜெயின்டியா மலைகள்

Written By: Udhaya

அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும் நதிகளுக்கும் குறைவில்லை. ஜெயின்டியா மலைகளுக்கான சுற்றுலாப் பயணம் இயற்கையழகை மட்டும் கவர்ச்சியாக கொண்டிருக்காமல், இன்றைய பங்களாதேஷ் நாட்டுன் தொடர்புடைய வளமான வரலாற்றையும் கொண்டுள்ளது.

தற்போதைய பங்களாதேஷ் நாட்டில் உள்ள ஜெயின்டியாபூர் என்ற நகரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த ஜெயின்டியா அரசர், நார்டியாங் என்ற சிறிய கிராமத்தை தன்னுடைய கோடைக்கால தலைநகரமாக பயன்படுத்தினார். இதன் காரணமாக இந்த பகுதிக்குள் எளிதில் சென்று வருவதும், கலாச்சார பரிமாற்றங்களும் அதிகமாகி விட்டன.

கண்கவரும் நிலமும், முடிவில்லாத மலைகளும்! ஜெயின்டியா மலைகள்

Chatterjee

ஜெயின்டியா மலைகள் என்பது மேற்கு ஜெயின்டியா மலைகள் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் ஆகிய இரு மாவட்டங்களையும் குறிக்கும். மேற்கு ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் தலைநகரமாக ஜோவாய் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் தலைநகரமாக க்லீஹ்ரியாட் ஆகியவை உள்ளன

ஜெயின்டியா மலைகளில் உள்ள நார்டியாங் பகுதியில் மிகப்பெரிய ஒற்றைகற் சிற்பங்களின் சேகரிப்புகள் உள்ளன. இங்கிருக்கும் துர்கா தேவி கோவிலும் மிகவும் முக்கியமான பார்வையிடமாகும்.

கண்கவரும் நிலமும், முடிவில்லாத மலைகளும்! ஜெயின்டியா மலைகள்

Agniv Chatterjee

ஜெயின்டியா மலைகளை அடையும் வழிகள்

மேகாலயா மாநிலத்தின் தலைநகரம் ஷில்லாங்கில் இருந்து 65 கிமீ தொலைவில் ஜோவாய் உள்ளது. இந்த இரு நகரங்களுக்கும் இடையில் சுமார் 2 மணி நேர பயண தூரம் மட்டுமே!
ஜெயின்டியா மலைகளுக்கு செல்ல சாலை போக்குவரத்து தான் முதன்மையான வசதியாக உள்ளது. ஜெயின்டியா மலைகளின் சுற்றுலாத் தலங்களை காண விரும்பும் சுற்றுலாப் பயணிகள் ஜோவாயில் தங்கலாம்.

கண்கவரும் நிலமும், முடிவில்லாத மலைகளும்! ஜெயின்டியா மலைகள்

Psihrishi

ஜெயின்டியா மலைகளின் பருவநிலை

ஜெயின்டியா மலைகளில் மழைக்காலங்களில் கனமான மழைப்பொழிவு இருக்கும். கோடைக்காலத்தில் மகிழ்ச்சியான சீதோஷ்ணமும் மற்றும் குளிர்காலத்தில் குளிராகவும் இவ்விடம் இருக்கும். மழைப்பொழிவு குறைவாக இருக்கும் கோடைக்காலங்களில் இங்கே சுற்றுலாப் பயணிகள் வரலாம்.

ஜெயின்டியா மலைகளை அடையும் வழிகள்:

ஜெயின்டியா மலைகள் சாலைப் போக்குவரத்தால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

Read more about: travel, hills