Search
  • Follow NativePlanet
Share
» »மகாபாரத போரையே 30 நொடிகளில் முடிக்கும் வல்லமை கொண்ட வீரனின் தலை எங்கே இருக்கு தெரியுமா? #NPH 5

மகாபாரத போரையே 30 நொடிகளில் முடிக்கும் வல்லமை கொண்ட வீரனின் தலை எங்கே இருக்கு தெரியுமா? #NPH 5

மகாபாரத போரையே 30 நொடிகளில் முடிக்கும் வல்லமை கொண்ட வீரனின் தலை எங்கே இருக்கு தெரியுமா?

மகாபாரத போர் பற்றி இங்கு தெரியாதவர்கள் குறைவு. அது எங்கு நடந்தது எப்படி நடந்தது என்றெல்லாம் நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அந்த போர் நடந்த இடங்களாக இப்போது குறிப்பிடப்படுவன எவை என்பதும் நாம் முன்னரே பல கட்டுரைகளில் பார்த்துவிட்டோம்.

அப்படிப்பட்ட மகாபாரத போரை வெறும் 30 நொடிகளில் முடித்துவிடும் அளவுக்கு வல்லமை கொண்ட காட்டுஷ்யாம்ஜியின் தலை எங்கே இருக்கிறது என்பதைத் தேடி இந்த பயணத்தைத் தொடர்வோம். இது நேட்டிவ் பிளானட் ஹிஸ்டரி Native Planet History

வரலாற்று பயணம்

வரலாற்று பயணம்


நம் பயண தளத்தில், கேளிக்கைக்கான சுற்றுலாத்தளங்களையும், நம் வரலாற்றைப் பேணி பாதுகாக்கும் சுற்றுலாத்தளங்களையும் பார்த்துவருகிறோம். இந்தியாவின் நீண்ட நெடிய வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஆன்மீகத்தையும் நம் தளத்தில் பார்க்கிறோம். அந்த வகையில் மகாபாரதத்தில் பெரிதும் அறியப்படாத ஒருவரின் வீர தீர செயல்கள் பற்றியும், அவருக்கு கட்டப்பட்டுள்ள கோயிலுக்கு எப்படி செல்வது, அதன் சுற்றுலா அம்சங்கள் என்னென்ன என்றெல்லாம் பார்க்கவிருக்கிறோம்.

Shyam

காட்டுஷ்யாம்ஜி

காட்டுஷ்யாம்ஜி


கிருஷ்ணபரமாத்மா வேண்டுதலுக்கிணங்க தன்னைத் தானே கொன்ற மாவீரன் காட்டுஷ்யாம்ஜி எனப்படும் பர்பாரிக்கா ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் கடவுளாக வணங்கப்படுகிறார்.

Shyam

பர்பாரிக்

பர்பாரிக்


பர்பாரிக் எனும் வீரன், பாண்டவர்கள் பக்கம் இருந்தும் கிருஷ்ணர் அவரை இறக்கச் சொன்னார் என்று ஒரு அதிர்ச்சி செய்தி மகாபாரதத்தில் உள்ளது. இத்தனைக்கும் பார்பாரிகா யார் பக்கம் இருக்கிறாரோ அவரே வெற்றி பெறுவார் என்ற சூழலில் பார்பாரிகாவை கிருஷ்ணர் சாகச் சொல்லியிருக்கிறார் என்கிறது வரலாற்று நம்பிக்கை.

Manover

30 விநாடிகளில்

30 விநாடிகளில்

மகாபாரத போரை நடத்த திட்டமிட்டபோது, கிருஷ்ணர் பாண்டவர்களிடம் இந்த போரை எத்தனை நாட்களில் முடிக்கமுடியும் என்று கேட்டதாகவும், அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் கணக்கு சொல்ல, பார்பாரிகா மட்டும் 30விநாடிகள் கொடுங்கள் போதும் என்றாராம். அதற்கு காரணம் அவரிடமிருந்த மூன்று அம்புகள்

Shyam

மூன்று அம்புகளும் சிவனின் வரமும்

மூன்று அம்புகளும் சிவனின் வரமும்


சிவனிடம் பெற்ற வரத்தினால் அந்த அம்புகள் மூன்றும் இந்த உலகத்தை தவிடுபொடியாக்க வல்லது என்கின்றனர் மகாபாரதகதை அறிந்தவர்கள். சரி இதெல்லாம் கதை கலந்த நம்பிக்கைகள். இப்படிபட்ட மாவீரனை தொழுவதற்காகவே ராஜஸ்தானில் மிகப்பெரிய கோயில் ஒன்று கட்டியுள்ளனர் அப்பகுதி மக்கள்.

Shyam

எங்குள்ளது?

எங்குள்ளது?

ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியே காட்டு அல்லது காட்டுஷ்யாம்ஜி எனப்படும் ஊர். இது சிறிய கிராமம் ஆகும்.

Shyam

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

ஜெய்ப்பூரிலிருந்து 80 கிமீ தூரத்திலும், புதுதில்லியிலிருந்து 266கிமீ தூரத்திலும் அமைந்துள்ள இந்த ஊரின் அருகில் 17கிமீ தொலைவில் ரிங்காஸ் எனும் பகுதி அமைந்துள்ளது.

ஜெய்ப்பூர்தான் அருகிலுள்ள விமான நிலையம் ஆகும்.

அற்புத மார்பிள் கற்கள்

அற்புத மார்பிள் கற்கள்

காட்டுஷியாம்ஜி கோயில் மக்ரானா மார்பிள் எனப்படும் ஒருவகை அற்புத கற்களால் ஆனது. கலியுகத்தின் கடவுளாக பார்பாரிகா வணங்கப்படுகிறார்.

Shyam

ஷியாம் குளம்

ஷியாம் குளம்

இது ஒரு புனித குளம் ஆகும். இந்த கோயிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் இந்த குளத்தில் நீராடிவிட்டுத்தான் செல்வார்கள். அப்படி செய்வதால் பழி பாவங்கள் நீங்கி வாழ்வில் வளம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

Shyam

ஷியாம் பூங்கா

ஷியாம் பூங்கா


இந்த பூங்காவிலிருந்து கொண்டு வந்த மலர்களால்தான் கடவுளுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. இங்கு ஆலு சிங் ஜி எனப்படும் ஒருவரின் சமாதி அமைந்துள்ளது.

கௌரிசங்கர் கோயில்

கௌரிசங்கர் கோயில்


இந்த ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு கௌரிசங்கர் என்று பெயர். ஔரங்கசீப் இந்த கோயிலை அழிக்க படையெடுத்து வந்ததாகவும், அப்போது இந்த இடமுழுவதும் ரத்தவெள்ளமாக பீறிட்டு இறைந்ததாகவும் நம்பப்படுகிறது. இதனால் அவரின் போர் வீரர்கள் அலறியடித்து ஓடியதாகவும் கூறப்படுகிறது.

Shyam

ஆரத்திகள்

ஆரத்திகள்

மங்களஆரத்தி, ஸ்ரீங்கார்ஆரத்தி, போக் ஆரத்தி, சந்தியா ஆரத்தி என நால்வகையான ஆரத்திகள் முறையே அதிகாலை, பாபா ஆராதனை, மதியம், மாலை என அவ்வப்போது நிகழ்த்தப்படுகிறது.

 யார் இந்த பார்பாரிகா

யார் இந்த பார்பாரிகா

பார்பாரிகா என்பவர் பாண்டவரான பீமரின் பேரன். கடோகஜனின் மகன் என்று பரவலாக நம்பப்பட்டுவருகிறது.

Read more about: travel history temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X