Search
  • Follow NativePlanet
Share
» »வேண்டியவுடன் வரம் தரும் நவ கைலாச கோயில்கள் எங்கே இருக்கு தெரியுமா?

வேண்டியவுடன் வரம் தரும் நவ கைலாச கோயில்கள் எங்கே இருக்கு தெரியுமா?

வேண்டியவுடன் வரம் தரும் நவ கைலாச கோயில்கள் எங்கே இருக்கு தெரியுமா?

தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவவாலயங்கள் உள்ள ஊரைக் குறிக்கிறது. இவை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அமைந்துள்ளது.

இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்கள் நீங்கி, பேரின்ப வாழ்வை அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

இந்தத் தலங்களை தரிசனம் செய்ய மார்கழி மாதங்களில் தமிழக அரசே சிறப்பு பேருந்தினை ஏற்பாடு செய்கிறது. இந்த நவ கைலாயங்களில் எவையெல்லாம் உள்ளன என்று பார்ப்போம்.

பாபநாசநாதர் திருக்கோயில்

பாபநாசநாதர் திருக்கோயில்


நவ கைலாச கோயில்களில் முதலில் இருப்பது சூரியனாக கருதப்படும் பாபநாசநாதர் திருக்கோயில் ஆகும்.

Bastintonyroy

பாபநாசநாதர் திருக்கோயில்

பாபநாசநாதர் திருக்கோயில்


திராவிட கட்டடக்கலை முறையில் கட்டப்பட்டுள்ள இந்த கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

Muthuraman99

பாபநாசநாதர் திருக்கோயில்

பாபநாசநாதர் திருக்கோயில்

கோயிலின் அனைத்துக் கருவறைகளயும் உள்ளடக்கியவாறு கோயிலைச் சுற்றிக் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

James Welsh

பாபநாசநாதர் திருக்கோயில்

பாபநாசநாதர் திருக்கோயில்


சாளுக்கிய பாண்டியர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் 16ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களாலும் நாயக்கர் அரசர்களாலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

நாயக்கர் காலக் கலைப்பாணியிலான சிற்பங்களும் இக்கோயிலில் காணப்படுகின்றன.

W.A. Cross

 சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில்

சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில்

சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயம். இச்சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது.

Booradleyp1

 மூலவர்

மூலவர்


இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர், அம்மைநாதர் என்றும், அம்மன் ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகின்றார்.

Booradleyp1

 மூலவர்

மூலவர்


இச்சிவாலயத்தின் மூலவர் கைலாசநாதர், அம்மன் சிவகாமி அம்பாள். இருவருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன.

Booradleyp1

 மூலவர்

மூலவர்


குன்னத்தூர் கோத பரமேசுவரர் கோயில் என்பது திருநெல்வேலி நகர் ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கிமீ தொலைவில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், ராகு தலமாகவும் கருதப்படுகிறது.

Booradleyp1

 மூலவர்

மூலவர்


இச்சிவாலயத்தின் மூலவர் கோத பரமேசுவரர், அம்மன் சிவகாமி இருவருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இறைவன் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்மன் சன்னிதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.

Booradleyp1

 முறப்பநாடு கைலாசநாதர் கோயில்

முறப்பநாடு கைலாசநாதர் கோயில்

இது நவ கைலாச கோயில்களில் ஐந்தாவது தலமாகும். இது வியாழன் தலமாக நம்பப்படுகிறது.

குதிரை முகத்தில் நந்தி

குதிரை முகத்தில் நந்தி


இந்த கோயிலின் எதிரே உள்ள நந்தி குதிரை முகத்துடன் உள்ளது
பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

 தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில்

தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில்

இது திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழகத்தின் நவ கைலாயங்களுள் ஏழாவது தலமாகும் சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர் என்றும், அம்மன் அழகிய பொன்னம்மை என்றும் அழைக்கப்படுகின்றார்

 இராஜபதி கைலாசநாதர் கோயில்

இராஜபதி கைலாசநாதர் கோயில்


இராஜபதி கைலாசநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் இராஜபதி ஊரில் அமைந்துள்ள கேது தலமாகும்.

Booradleyp1

 இராஜபதி கைலாசநாதர் கோயில்

இராஜபதி கைலாசநாதர் கோயில்

இக்கோயிலில் விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானையுடன் முருகன் ஆகிய சன்னதிகள் உள்ளன.

Booradleyp1

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில்

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில்

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தமங்கலத்தில் அமைந்துள்ள சுக்ரனுக்கு உரிய தலமாகும்.

இக்கோயில் 1000 வருடங்கள் தொன்மையானது. இதனை குலசேகரப் பாண்டியன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்

More News

    Read more about: travel temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+