Search
  • Follow NativePlanet
Share
» » தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!

தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!

என்ன? தாம்பரத்தில் தாஜ்மஹாலா? ஆனால் உண்மைதான்! தாம்பரம் ரயில்வே திடலில் தாஜ்மஹால் எக்ஸ்போ நடந்துக் கொண்டிருக்கிறது. தாஜ்மஹால் போன்ற செட் அப், போட்டோ எடுக்க 3D சுவர்கள், செல்ஃபி பாயின்ட்கள், ஹாரர் ஹவுஸ், 3 D ஹவுஸ், ரோபோ, பனி உலகம், கேளிக்கை விளையாட்டுகள், ஷாப்பிங், வித விதமான ருசியான உணவு ஸ்டால்கள் என எல்லாமே இங்கு இருக்கிறது. இந்த வாரம் உங்கள் வீட்டு குட்டிஸ்களை இந்த கண்காட்சிக்கு அழைத்துச் சென்று அசத்தி விடலாமா!

தாம்பரத்தில் தாஜ்மஹால் எக்ஸ்போ

தாம்பரத்தில் தாஜ்மஹால் எக்ஸ்போ

தாம்பரம் ரயில்வே திடலில் இப்போது கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. திடலுக்கு நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தாஜ்மஹால் போன்ற அமைப்பு தான் இதன் முக்கிய அம்சமாகும். பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசல் தாஜ்மஹாலை செட் போட்டு அமைத்து இருக்கிறார்கள். ஷூட்டிங்கிற்கு அமைக்கப்படுவது போல இது அமைக்கப்பட்டு இருக்கிறது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இந்த குட்டி தாஜ்மஹாலுக்குள் நாம் உள்ளே செல்ல முடியாது. ஆனால் வெளியே நின்று இந்த அழகான அமைப்பை சுற்றிப் பார்க்கலாம், போட்டு எடுத்துக்கொள்ளலாம். இந்த தாஜ்மஹால் செட் அப் அமைப்பினால் தான் இது தாஜ்மஹால் எக்ஸ்போ என்றழைக்கப்படுகிறது.

இந்த எக்ஸ்போவில் என்னென்ன இருக்கிறது

இந்த எக்ஸ்போவில் என்னென்ன இருக்கிறது

தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்து போட்டோ எடுத்த பின்னர், நீங்கள் இங்கே மீதி இருக்கும் கேளிக்கைகளில் ஈடுபடலாம். குழந்தைகள் பெரியவர்களுக்கான தனித்தனி போட்டோ பாயிண்ட்டுகள், செல்பி பாயிண்ட்டுகள், 3 D சுவர்கள் ஆகியவை இங்கே இருக்கின்றன. அதோடு குழந்தைகளுக்கான பேய் வீடு, பனி உலகம், ரோபோ வீடு, 3 D ஹவுஸ் ஆகியவை உள்ளன. இந்த கண்காட்சியை நீங்கள் உங்கள் குழந்தைகளுடனோ, உங்கள நண்பர்களுடனோ வரலாம். மிகவும் என்ஜாய் பண்ணுவீர்கள்

சென்னை தீவு திடல் போன்ற கண்காட்சி

சென்னை தீவு திடல் போன்ற கண்காட்சி

சென்னை தீவு திடலில் வருடா வருடம் நடைபெறும் மிகப்பெரிய கண்காட்சியில் இடம்பெறும் விளையாட்டுகள் அனைத்தும் இங்கு இருக்கின்றன. டெக்னோ ஜம்ப், ராட்சத ராட்டினம், போட் ராட்டினம், கார், நீர் போட், ஆடும் நாற்காலி, குதிரை போன்ற ஏகப்பட்ட விளையாட்டுகள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் நீங்கள் ஷாப்பிங் செய்வதற்கும் கூட பேன்சி, வீட்டு உபயோகப் பொருட்கள், காட்சி பொருட்கள் என ஏராளமான விஷயங்கள் உள்ளன. இத்தனை இருந்தும் உணவு இல்லாமல் இருக்குமா? அது எப்படி டெல்லி அப்பளம், பஞ்சு மிட்டாய், ஊட்டி வருக்கி, மிளகாய் பஜ்ஜி, பாப்கார்ன் உட்பட வித விதமான வட இந்திய, தென் இந்திய, பாஸ்ட் ஃபுட் உணவு ஸ்டால்கள் உள்ளன.

நேரம், நுழைவுக்கட்டணம்

நேரம், நுழைவுக்கட்டணம்

எக்ஸ்போ திறந்திருக்கும் நேரம் : மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை

நுழைவுக்கட்டணம் : ரூ. 60 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

*இந்த ரூ. 60 நுழைவுக்கட்டணம் மட்டுமே, நீங்கள் செல்ல விரும்பும் தனி தனி விளையாட்டுகளுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்

எக்ஸ்போவிற்கு எப்படி செல்வது?

தாம்பரம் ரயில்வே கிரவுண்ட் தாம்பரம் மையத்தில் இருந்து 3.5 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. தாம்பரம் ரயில்வே கிரவுண்ட்டுக்கு அருகில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷன் தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் ஆகும். நீங்கள் இங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் ரயில்வே கிரவுண்ட்டை அடையலாம். உங்கள் வீட்டு குட்டிஸ்களை இந்த வாரம் இங்கு அழைத்து சென்று வாருங்கள். கம்மி பட்ஜெட்டில் இந்த வார இறுதியை பொழுதுபோக்குடன் களித்திட இது ஒரு பெஸ்ட் சாய்ஸ் மக்களே!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X