இன்ஸ்டாகிராம், பேஃஸ்புக், வாட்ஸ்அப் என எந்த சமூக வலைத்தளத்தை திறந்தாலும் 'கண்மணி அன்போடு காதலன்' என்கிற பாடலோடு குணா குகையின் புகைப்படங்களும், வீடியோக்களும் தான் வலம் வருகின்றன. இதற்கு எல்லாம் காரணம் சமீபத்தில் வெளிவந்து பலரின் மனதையும் கவர்ந்த 'மஞ்சுமேல் பாய்ஸ்' திரைப்படம் தான். இந்த திரப்படம் முற்றிலும் கொடைக்கானலில் உள்ள குணா குகைகளை மையாமாக வைத்து எடுக்கப்பட்டது என்பதால் கேரளா, தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் குணா குகையில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். உண்மையில் குணா குகை அவ்வளவு ஆபத்தானதா?
'மஞ்சுமேல் பாய்ஸ்' எதிரொலி' - குணா குகையில் அலை மோதும் கூட்டம்
சமீபத்தில் இயக்குனர் சிதம்பரம் இயக்கி வெளிவந்த 'மஞ்சுமேல் பாய்ஸ்' கேரளா மற்றும் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெறுகிறது. சர்வைவல் த்ரில்லர் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை வருகிறது, மேலும் அதன் கடுமையான தருணங்கள் மற்றும் தனித்துவமான திரைப்படத் தயாரிப்பின் காரணமாக பார்வையாளர்களை கவர்ந்துள்ளதோடு மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகளை குணா குகைகள் நோக்கி படையெடுக்க வைத்துள்ளது.

குணா குகைகளை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
சுற்றுலாப் பயணிகள் அனைவரும் குணா குகைகளை நோக்கி படையெடுக்க காரணம் இது ஒரு உண்மை சம்பவம் என்பதால் தான். இப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது என்பது அதன் கவர்ச்சியைக் கூட்டி பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் வைத்திருக்கிறது. இருப்பினும், உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2006ல் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்பதால் சுற்றுலாப் பயணிகளின் மோகம் குணா குகை நோக்கி படையெடுக்க வைத்துள்ளது.
டெவில்ஸ் கிச்சனாக இருந்து குணா குகையாக மாறிய குகைகள்
குணா குகைகள் கொடைக்கானலில் உள்ள ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும், இது 3 தூண் வகை பாறைகளுக்குப் பெயர் பெற்றது. குகைக்குள் நுழைய விரும்பும் எவரும் இரண்டு பாறைகளைப் பிடித்து மூன்றாவது பாறையால் அமைக்கப்பட்ட செங்குத்து பாதையில் தங்களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். இதன் ஆபத்தான செங்குத்து பாதைகளும், தவறி விழுந்தால் மரணம் நிச்சயம் என்பதாலும் இந்த இடம் 'டெவில்ஸ் கிச்சன்' அதாவது பேய்களின் இடம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் 1991 ஆம் ஆண்டு முதல், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிப்படமான 'குணா' இந்த குகைகளுக்குள் தான் எடுக்கப்பட்டது என்பதால் இது அன்று முதல் 'குணா குகை' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

50 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனரா?
குகைகளின் ஆழமான குறுகிய பள்ளத்தாக்குகள் பல உயிர்களை காவு வாங்கியதாக கூறப்படுகிறது. குகைக்குள் நுழைய முயன்ற 13 பெரியவர்கள் இறந்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன, ஆனால் உண்மையில் 50 க்கும் மேற்பட்டோர் குகைக்குள் தவறி விழுந்து இறந்துள்ளனர் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அதனால் குணா குகைகள் முழுக்க வேலிகளும் தடுப்புகளும் போடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
2006 இல் நடந்தது என்ன?
1. 2006 இல் நடந்த இந்த சம்பவத்தில் முதன்மையான பாதிக்கப்பட்டவர்கள், சிறிய கொச்சி நகரமான மஞ்சும்மேலைச் சேர்ந்த 11 இளைஞர்கள்.
2. சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருக்கும் இவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முற்பட்டனர்.
3. செப்டம்பர் 4 ஆம் தேதி அதிகாலை, அப்பகுதியின் நன்கு அறியப்பட்ட சுற்றுலாத் தலங்களில் சிலவற்றைச் சுற்றிப் பார்க்க தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். மதியம் 2 மணியளவில், அவர்கள் புகழ்பெற்ற குணா குகைகளுக்குச் சென்றனர்.
4. ஒரு அட்ரினலின் அவசரம் இந்த இடத்தின் தடைசெய்யப்பட்ட பகுதியைக் கடக்க முயற்சிக்கிறது.
5. மற்றவர்கள் முற்றிலும் திகைக்க, அவர்கள் குகையை ஆராயும் போது சுபாஷ் ஒரு ஆழமான குழிக்குள் விழுந்தார்.

6. மணிக்கணக்கில், அவர் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையில் உடன் சென்ற நண்பர்கள் கத்தி கூக்குரலிட்டனர். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
7. அவர்கள் ஒன்றாக ஒரு அதிசயத்திற்காக கடவுளிடம் ஜெபிக்கத் தொடங்கினர், பல மணிநேரங்களுக்குப் பிறகு, மேலே இருந்தவர்களுக்கு சுபாஷ் அலறுவது கேட்க தொடங்கியது.
8. போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் அப்பகுதியினர் வரும்போது, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பள்ளத்தில் இறங்க பயந்தனர்.
9. அந்த நேரத்தில், குட்டன் என்று அழைக்கப்படும் சிஜு டேவிட், 85 அடிக்கு மேல் கீழே சென்று சுபாஷைக் காப்பாற்றுவதற்காக எல்லாவற்றையும் பணயம் வைக்க முன் வந்து தன் நண்பனை காப்பாற்றியுள்ளார்.
10. குணா குகைகளில் இருந்து காப்பாற்றப்பட்ட ஒரே ஆள் சுபாஷ் மட்டும் தான்.
குணா குகைக்கு செல்ல விரும்பும் சுற்றுலாப் பயணிகள்
இந்த உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் தான் சுற்றுலாப் பயணிகள் குணா குகைகளுக்கு சென்று, 'கண்மணி அன்போடு காதலன்' பாடலை போட்டு பல போட்டோக்களும் வீடியோக்கும் சமூகவலைத்தளங்களில் அப்லோட் செய்து மகிழ்ச்சியடைந்து வருகின்றனர். நாளுக்கு நாள் குணா குகையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.



Click it and Unblock the Notifications





