Search
  • Follow NativePlanet
Share
» »புகழ்பெற்ற வெளிநாட்டு சுற்றுலாத் தலங்களை பிரதிபலிக்கும் இந்திய சுற்றுலாத் தலங்கள் – சீனப்பெருஞ்சுவர், நயாகரா..

புகழ்பெற்ற வெளிநாட்டு சுற்றுலாத் தலங்களை பிரதிபலிக்கும் இந்திய சுற்றுலாத் தலங்கள் – சீனப்பெருஞ்சுவர், நயாகரா..

இந்தியாவின் பல இடங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு இந்தியாவின் பெருஞ்சுவர், இந்தியாவின் நயாகரா, இந்தியாவின் நெதர்லாந்து, இந்தியாவின் சுவிட்சர்லாந்து, இந்தியாவின் ஸ்காட்லாந்து என புனைப்பெயர்கள் உள்ளன. அதற்கு காரணம், அந்த இடங்கள் யாவும் பார்ப்பதற்கு அச்சு அசலில் வெளிநாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை பிரதிபலிப்பது தான். சுவிட்சர்லாந்தின் பனி மழை தொடங்கி, மிதக்கும் வெனிஸ் நகரம், நெதர்லாந்தின் பூந்தோட்டம், கனடாவின் நயாகரா வரை பல பிரபல சர்வதேச சுற்றுலாத் தலங்கள் போலவே, அச்சு அசலாக வெளிநாட்டு சுற்றுலாத் தலங்கள் போலவே இந்தியாவில் உள்ள சில இடங்கள் உள்ளன. அந்த அழகிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலை தான் இங்கே பார்க்கப் போகிறோம்!

இந்தியாவின் நெதர்லாந்து - துலிப் கார்டன், காஷ்மீர்

நெதர்லாந்தின் துலிப் கார்டன் உலக அளவில் மிகவும் பிரபலமானது. இங்கு பல்வேறு படங்களும் பாடல்களும் படமாக்கப்பட்டுள்ளன. ஏன் தமிழ் படமான அந்நியனில் 'குமாரி' பாடல் இங்கு தான் எடுக்கப்பட்டது. ஆனால் இந்த துலிப் கார்டன் இந்தியாவிலேயே இருக்கிறது. ஆம் ஸ்ரீநகரில் உள்ள இந்திரா காந்தி துலிப் கார்டன், துலிப் மலர்களால் பூத்துக் குலுங்கி நம்மை வரவேற்கிறது.

India s Switzerland - Gajjiar Himachal Pradesh

இந்தியாவின் சுவிட்சர்லாந்து - கஜ்ஜியார், இமாச்சலப் பிரதேசம்

சுற்றுலா செல்வதில் அதிக விருப்பம் உள்ள எவரும் நிச்சயம் சுவிட்சர்லாந்துக்கு சென்று வர வேண்டும் என்பதை தங்களின் பக்கெட் லிஸ்டில் வைத்திருப்பார்கள். ஆனால் நீங்கள் அதிக செலவு செலவு செய்யாமல் இந்தியாவின் சுவிட்சர்லாந்துக்கு சென்று வரலாம். இமாச்சலப் பிரதேசத்தின் சம்பாவில் உள்ள கஜ்ஜியாரின் நிலப்பரப்பும், சூழலும், மரங்களும், வானிலையும் பார்ப்பதற்கு அப்படியே சுவிட்சர்லாந்து போலவே இருக்கிறது. பனி மூடிய இமயமலைச் சிகரங்கள், அழகிய ஏரிகள் மற்றும் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் அரிய விலங்கினங்கள் நம் கண் முன் சுவிட்சர்லாந்தை நிறுத்துகின்றன.

இந்தியாவின் ஐஸ்லாந்து - குருடோங்மர் ஏரி, சிக்கிம்

ஒரு குளிர்கால அதிசயத்தில் அழகிய நிலப்பரப்புகளைப் பார்க்க விரும்புகிறீர்களா? ஐஸ்லாந்துக்கான பயணம் நீண்ட மற்றும் விலை உயர்ந்தது. அதற்குப் பதிலாக, இதேபோன்ற அனுபவத்திற்காக நீங்கள் இந்தியாவின் மிகச் சிறிய மாநிலமான சிக்கிமுக்குச் செல்லலாம். சிக்கிமில் உள்ள குருடோங்மார் ஏரி ஐஸ்லாந்தில் உள்ள அழகிய ஏரிகளை உங்களுக்கு நினைவூட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

India s Maldives - Lakshadweep

இந்தியாவின் மாலத்தீவு - லட்சத்தீவு

மாலத்தீவு என்பது அழகிய சிறு சிறு தீவுகளால் சூழப்பட்ட ஒரு தீவுக்கூட்டம் ஆகும். ஹனிமூன் செல்ல, ஓய்வெடுக்க, நண்பர்களுடன் குதுகலிக்க என பற்பல காரணங்களுக்காக பெரும்பாலான மக்கள் கூட்டம் இங்கு படையெடுத்து வருவது வழக்கம். நீங்கள் எப்போதாவது மாலத்தீவுக்கு செல்ல வேண்டும் என்று கனவுக் கண்டிருந்தால், அதிக செலவு இல்லாமல் மாலத்தீவுக்கு செல்லும் வாய்ப்பு இங்கே உள்ளது. ஆம், நீங்கள் சிறு பட்ஜெட்டில் இந்தியாவில் உள்ள மாலத்தீவுக்கு சென்று வரலாம்.

இந்தியாவின் ஸ்காட்லாந்து - குடகு, கர்நாடகா

கர்நாடகாவின் தெற்கு விளிம்புகளில் அமைந்துள்ள குடகு மலை இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கமாகும். குடகு மலையின் அருவிகள், உயரமான சிகரங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் ஸ்காட்லாந்தின் நிலப்பரப்புகளை பிரதிபலிக்கின்றன. குடகு மலையின் மிருதுவான காற்று, பசுமையான புல்வெளிகள் மற்றும் மலைகள் மற்றும் ஏரி - அனைத்தும் ஸ்காட்லாந்தின் நிலப்பரப்புகளுக்கு இணையானவை.

Floating Market of Thailand - Dal Lake Kashmir

தாய்லாந்தின் மிதக்கும் சந்தை - டால் ஏரி, காஷ்மீர்

எப்பொழுதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கும் ஒரு இடம் தான் பாங்காக். துடிப்பான நகர கலாச்சாரம், வண்ணமயமான ஹோட்டல்கள், பார்க்குகள், மிதவை மார்கெட் என பாங்காக்கில் பல அழகிய சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அதிலும் இந்த மிதவை மார்கெட்டிற்கு செல்லாமல் பாங்காக் பயணம் முழுமையடையாது. நீங்கள் அங்கு செல்ல திட்டமிட்டால் நம் காஷ்மீருக்கு சென்று வாருங்கள், தண்ணீரில் ஷிகாரா சவாரி, மிதக்கும் சந்தையைச் சுற்றி பார்ப்பது என பாங்காங் நினைவுகளை நீங்கள் இங்கேயே உருவாக்கலாம்.

இந்தியாவின் சீன பெருஞ்சுவர் - கும்பல்கர் கோட்டை, ராஜஸ்தான்

சீனப் பெருஞ்சுவர் உலகின் மிக நீளமான சுவராகப் புகழ் பெற்றது, ஆனால் இந்தியாவும் மிக நீளமான சுவர்களில் ஒன்று உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ராஜஸ்தானின் பாலைவனத்தில் பதின்மூன்று மலைச் சிகரங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும், உதய்பூரிலிருந்து வெறும் 80 கிமீ தொலைவில் உள்ள கும்பல்கர் கோட்டையைச் சுற்றியுள்ள சுவர், இந்தியாவின் கட்டிடக்கலைத் திறமைக்கு பார்ப்பதற்கு அப்படியே சீன பெருஞ்சுவர் போலவே நிற்கிறது. 3600 அடி உயரமும் 38 கிமீ நீளமும் கொண்ட இந்த கோட்டை உதய்பூர் பகுதியைச் சுற்றி உள்ளது.

Niagara of India - Chitrakoot Chhattisgarh

இந்தியாவின் நயாகரா - சித்ரகூட், சத்தீஸ்கர்

சத்தீஸ்கரில் அமைந்துள்ள சித்ரகூட் அருவியை பார்த்த எவரும் இந்த அருவி இந்தியாவின் நயாகரா என்று கூறாமல் இருக்க மாட்டார்கள். 'இந்தியாவின் நயாகரா நீர்வீழ்ச்சி' என்று அடிக்கடி அழைக்கப்படும் சித்ரகூட் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் இயற்கைச் சிறப்பிற்குச் சான்றாகும். சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி இந்திராவதி ஆற்றின் குதிரைக் காலணி போன்ற பள்ளத்தாக்கில் விழுவதால் உருவாகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் ஆறு பெருக்கெடுத்து, அருவி ஆர்பரித்து கொட்டும் போது பார்ப்பதற்கு அப்படியே கனடாவின் நயாகராவை பிரதிபலிக்கிறது.

India s Alaska - auli

இந்தியாவின் அலாஸ்கா - ஆலி

அலாஸ்கா, அதன் பிரமிக்க வைக்கும் பனி மூடிய சிகரங்கள் மற்றும் சிலிர்ப்பூட்டும் குளிர்கால விளையாட்டுகள், பலருக்கு ஒரு கனவு இடமாகும். அலாஸ்காவின் அதே குளிர்கால அதிசயங்களை வழங்கும் கர்வால் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய மலைவாசஸ்தலமான ஆலியில் நுழையுங்கள். 2,500 முதல் 3,050 மீட்டர்கள் உயரத்தில் அமைந்திருக்கும் அவுலி, பனி மூடிய நிலப்பரப்புகளால் சூழப்பட்ட, அலாஸ்காவில் உள்ள மலைகளை விடவும் உயரமான மலை சிகரங்களை ஆலி கொண்டுள்ளது!

Grand Canyon of India - Gandhikota Andhra Pradesh

இந்தியாவின் கிராண்ட் கேன்யன் - காந்திகொட்டா, ஆந்திரப்பிரதேசம்

இந்தியாவில் உள்ள வெளிநாட்டு இடங்களை ஒத்திருக்கும் இடங்களுள் காந்திகோட்டா ஏன் பட்டியலிடப்பட்டுள்ளது என்பதை பெயரிலிருந்தே நீங்கள் மிக எளிதாக யூகிக்க முடியும். பென்னே நதி பள்ளத்தாக்கு கொண்ட ஒரு இடம், ஆழமான மற்றும் செங்குத்தான இயற்கையான பள்ளத்தாக்கு, பல ஆண்டுகளாக உருவானது. இந்த பள்ளத்தாக்குகளின் நிறமும் நிலப்பரப்பும் அமெரிக்காவில் உள்ள கிராண்ட் கேன்யனை உங்களுக்கு நினைவூட்டும்

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+