Search
  • Follow NativePlanet
Share
» »பாண்டிச்சேரிக்கு பீர் பஸ் சுற்றுலா – ஒரு நாள் முழுக்க புதுவை சுற்றுலா, சலிக்கிற வரைக்கும் பீர்

பாண்டிச்சேரிக்கு பீர் பஸ் சுற்றுலா – ஒரு நாள் முழுக்க புதுவை சுற்றுலா, சலிக்கிற வரைக்கும் பீர்

வண்ணமயமான கடற்கரைகள், பிரெஞ்சு காலனித்துவ கட்டிடங்கள், வித விதமான இத்தாலி, பிரெஞ்சு, சைனீஸ், பர்மிஸ் கஃபேக்கள், துடிப்பான எண்ணற்ற பப்கள், இரவு கலாச்சாரம் என புதுச்சேரி ஒரு மினி கோவா போல பிரதிபலிக்கிறது. பெங்களூர், சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் இருந்து பெரும்பாலான இளைஞர்கள் வார இறுதிகளிலும், நீண்ட விடுமுறை நாட்களிலும் புதுச்சேரிக்கு கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றனர். இப்போது புது சுற்றுலா அம்சமாக பீர் பஸ் சுற்றுலா என்ற ஒன்று புதுச்சேரியில் அறிமுகமாகி இருக்கிறது. 'பிரே அவுஸ் டூர்' என்ற பெயரில் கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி என்ற தனியார் நிறுவனம் இந்தப் பேருந்தை இயக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

beerbuscover

மினி கோவா போல காட்சியளிக்கும் புதுச்சேரி

எங்கு திரும்பினாலும் பார்கள் பப்கள் என புதுச்சேரி இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரி அம்சத்துடன் இருக்கிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை புதுவை கடற்கரைகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. சென்னையில் இருந்து அதிகளவில் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக மது பிரியர்கள் விதவிதமான பீர்களை வாங்கி குடித்து பொழுதை கழிக்கின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

எங்கு பார்த்தாலும் ரெஸ்ட்டோ பப்கள்

புதுச்சேரியில் எங்கு பார்த்தாலும் பல மதுபானக் கடைகள் காணக் கிடைக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக ரெஸ்ட்டாரண்டுகள் மற்றும் பாரம்பரிய வீடுகளிலும் சுற்றுலாவைக் காரணம் காட்டி ரெஸ்டோ பார்கள் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி அளிக்கிறது. மொட்டை மாடி இருந்தால் போதும், உங்களுக்கு பப் வைக்கு அனுமதி கிடைத்துவிடும் என்ற நிலையில் இருக்கிறது இப்போதைய புதுச்சேரி. இந்நிலையில், இப்போது, மதுபோதை ஆசாமிகளுக்கு மகிழ்ச்சி கொடுக்க சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு தனி பீர் பஸ் இயக்கப்பட உள்ளது.

Beer bus in Pondicherry

பீர் பஸ் சுற்றுலா

வரும் 22ஆம் தேதி முதல் 'பீர் பஸ்' என்ற பெயரில் சென்னை - புதுச்சேரி இடையே பேருந்து இயக்கப்படுகிறது. 'பிரே அவுஸ் டூர்' என்ற பெயரில் கட்டமரான் பிரேவிங் கோ-பாண்டி என்ற தனியார் நிறுவனம் இந்தப் பேருந்தை இயக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தப் பேருந்தில் ரூ.3,000 வீதம் கட்டணம் செலுத்தி புதுச்சேரியை சுற்றிப் பார்த்துவிட்டு அன்றே சென்னை திரும்பலாம்.

Beer bus in Pondicherry

அதிவேகமாக நடைபெறும் முன்பதிவு

பீர் பஸ் என்று பெயர் வைத்து இருப்பதால்,பஸ்சில் குடிப்பது என்று யாரும் நினைக்க வேண்டாம். பஸ்சில் பீர் குடிக்க அரசு அனுமதிக்கவில்லை என்று இந்தப் பீர் பஸ் பயணத்தை ஏற்பாடு செய்யும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால், பேருந்தில் வருபவர்களுக்கு 3 கோர்ஸ் உணவு, அன்லிமிடெட் பிரை, சைடிஷ் ஆகியவை கொடுக்கப்படுமாம். இதற்கான முன்பதிவு தற்போது தொடங்கி படுவேகமாக நடைபெற்று வருகிறது. நீங்களும் முந்திக் கொள்ளுங்கள்.

Beer bus in Pondicherry

ஒரே நாளில் சுற்றுலா

புதுச்சேரியில் அரசு அனுமதித்த இடத்தில் மட்டும் மது அருந்த அனுமதிக்கப்படும். 40 பயணிகள் சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றுவிட்டு அதே நாள் மீண்டும் சென்னை திரும்பலாம். வாரம் முழுவதும் பரபரப்பான பணிகளில் இருப்பவர்கள் வார இறுதி விடுமுறையில் ஜாலியாக புதுச்சேரிக்குச் சென்று புத்துணர்ச்சி அடையலாம்.

என்னால் அதிக நாட்கள் எல்லாம் சுற்றுலாவிற்கு என செலவு செய்ய முடியாது. என்னிடம் இருப்பதே ஒரே ஒரு நாள் தான், அதில் எனக்கு என்னுடைய ஸ்ட்ரெஸ் நீங்கி புத்துணர்ச்சி கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் இது உங்களுக்கு பெஸ்ட் ஆப்ஷன் மக்களே.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+