» » சுவராஸ்யமூட்டும் யானா குகைகள் நடைப்பயணம்

சுவராஸ்யமூட்டும் யானா குகைகள் நடைப்பயணம்

Written By: R. SUGANTHI Rajalingam

பெங்களூரிலிருந்து 460 கி. மீ தொலைவில் யானா குகைகள் அமைந்துள்ளது. இந்த குகைகள் கர்நாடக மாநிலத்தில் கும்தா என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமம் சிறிய கிராமமாக இருந்தாலும் இங்கே படிந்துள்ள பாறைகளுடைய குகைகளால் இது ஒரு மிகச்சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இரண்டு விதமான பாறைகள் சேர்ந்து கருஞ்சுண்ணாம்பு குகைகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆழமான குகைகளின் சிறப்பு எக்காலமும் பசுமையாகவே காட்சி அளிக்கிறது. இந்த பாறை கருப்பாக இருப்பதால் இதை சுற்றியுள்ள களிமண்ணும் கருப்பு நிறத்தில் படிந்து கிடக்கிறது. இந்த இடம் சாகச பிரியர்களுக்கு ரெம்பவே பிடித்த இடமாகவும் உள்ளது.

இந்த இரண்டு பாறைகளான பைரவரேஸ்வரா சிகாரா மற்றும் மோகினி சிகாரா சஹியாத்திரி என்ற மலைப் பகுதியில் பசுமை நிறக் காடுகள் நிறைந்து காணப்படுகிறது. கொஞ்சம் யோசித்து பாருங்க அப்படியே கருப்பு நிற ஆழமான குகைகள் அதில் பசுமை போர்வை போல் படர்ந்த காடுகள் அதில் நீல நிற வானம் தொட்டது போன்ற காட்சிகள் இந்த இயற்கை அழகை பார்க்க யாருக்கு தான் விருப்பம் இருக்காது. கண்டிப்பாக இயற்கையை விரும்புபவர்களுக்கு இந்த இடம் சரியான விருந்தாகும்.

யானா செல்ல சரியான நேரம்

யானா செல்ல சரியான நேரம்

செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்கள் யானா செல்ல சரியான சமயம். மழைக்காலத்தில் இந்த குகைகள் மிகவும் அபாயகரமானது. ஏனெனில் இதில் மலையேறுதல் மிகவும் கடினமாக இருக்கும்.

பெங்களூரிலிருந்து யானா செல்ல பயண வழி

வழி 1:ராஜலிங்கர் - தேசிய நெடுஞ்சாலை 48-சிர்சி - காவேரி ரோடு - தேசிய நெடுஞ்சாலை 48 முடிவு - யானா (456கி.மீ - 7 மணி நேரம் 30 நிமிடங்கள்)

வழி 2: CNR RAO UNDERPASS /சிவி ராமன் ரோடு - தேசிய நெடுஞ்சாலை 75-அரசிகிரி - மைசூர் ரோடு - தேசிய நெடுஞ்சாலை 69-சித்தபூர் - தலகுப்ப ரோடு - யானா (489கி.மீ - 9 மணி நேரம் 30 நிமிடங்கள்)

தும்கூர் மலைகள்

தும்கூர் மலைகள்

தும்கூர் நகரம் பெங்களுரிலிருந்து 70 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கே இரண்டு மலை சுற்றுலா தலங்கள் புகழ்பெற்று விளங்குகிறது. ஒன்று மதுகிரி மற்றும் தேவராயனதுர்கா ஆகும்.

மதுகிரி (தேன் மலை) ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ஒற்றைக் கல் மலையாக உள்ளது. இதன் உயரம் 3930 அடி இருக்கும். இங்கே மலையேறுதல் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

இந்த மலையின் அடிவாரத்தில் ஹைதர் அலியால் கட்டப்பட்ட ஒரு கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டையின் 3 வாயிலாக தமது மலைப் பயணத்தை ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு வாயிலிலும் 4 கி. மீ வரை பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். எனவே உங்களுக்கு தேவையான வாட்டர் பாட்டில் மற்றும் எனர்ஜி ட்ரிங்கை எடு கொண்டு செல்வது நல்லது.

PC: Sangrambiswas

ஹிரியூர்

ஹிரியூர்

தும்கூரிலிருந்து 90 கி. மீ தொலைவில் ஹிரியூர் அமைந்துள்ளது. இங்கே விஜய நகர பேரரசால் கட்டப்பட்ட மல்லீஸ்வர கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் கடவுள் சிவனுக்காகவும் மேலும் ராமாயணத்தின் வெவ்வேறு நிகழ்வுகளையும் புராணக் கதைகளையும் பறைசாற்றும் விதமாக இக்கோயில் அமைந்துள்ளது.

வானி விலாச சஹாகார அல்லது மாரி கனிவி என்ற அணைக்கட்டம வேதவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு அழகுடன் இருக்கிறது. இந்த அணை சுதந்திரம் வாங்குவதற்கு முன்னரே கட்டப்பட்டு அந்த காலத்து கட்டடக்கலையுடன் சிறப்புடன் விளங்குகிறது. இந்த அணைக்கட்டுடன் இங்கே இயற்கை எழில் பொங்கும் பூங்காவும் இருப்பதால் உங்களுக்கு சரியான சுற்றுலா இடமாக இது அமைகிறது.

PC: Dineshkannambadi

சித்ரதுர்கா

சித்ரதுர்கா


இந்த நகரம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வம்சாவளி நகரமாக விளங்குகிறது. இங்கே நிறைய வம்சாவளியை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கே உள்ள சித்ரதுர்கா கோட்டை, சந்திர வல்லி குகைகள் பேர் பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது.

சந்திரவல்லி குகைகள் சில அடி பூமிக்கடியில் புதைந்து காணப்படுவது இதன் தனிச் சிறப்பாக இருக்கிறது. இதை சுற்றி நிறைய மலைகள் சூழ்ந்தும் காணப்படுகின்றன. இங்கே ஒரு அனகாலி முத் என்ற கோயிலும் இரண்டு ஒற்றைக்கல் பாறைகளுக்கிடையே அமைந்துள்ளது. சந்திரவல்லி ஏரியும் பக்கத்தில் பாய்ந்து இந்த இடத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.

PC: Bhat.veeresh

தாவன் கரே

தாவன் கரே

தாவன் கரே என்றாலே எல்லாருக்கும் நினைவுக்கு வருவது தவன்கிரி பென்னே தோசை ஆகும். அப்படியே பட்டர் ஊற்றி செய்யப்படும் இந்த தோசை கண்டிப்பாக இதன் சுவை உங்களை மெய் மறக்க வைத்து விடும். கர்நாடகவின் நிறைய இடங்களில் இந்த தோசை கிடைத்தாலும் தாவன் கரே க்கு சென்று சாப்பிடுவதே தனிச் சுவை தான். எனவே கண்டிப்பாக மிஸ் பண்ணாம சாப்பிடுங்க.

PC: Irrigator

ராணிபென்னூர் கலைமான் சரணாலயம்

ராணிபென்னூர் கலைமான் சரணாலயம்

கலைமான் கிருஷ்ணா முருகா என்று அழைக்கப்படுகிறது. இது அதிக அளவில் ராணிபென்னூரில் காணப்படுகிறது. எனவே இந்த இடம் 1974 லிருந்து கலைமானை காக்க கலைமான் சரணாலயமாக மாற்றப்பட்டது. மேலும் மற்ற விலங்குகளான லங்கூர் குரங்கு, குள்ள நரி மற்றும் கீரிப் பிள்ளை போன்றவற்றையும் இச் சரணாலயத்தில் காத்து வருகின்றனர்.

மேலும் பாடும் பறவைகளான குயில், தோகை விரித்தாடும் மயில் மற்றும் அழகான ரெட்டை வால் குருவி போன்றவற்றையும் நீங்கள் இங்கே காணலாம். எல்லா பறவை இனங்களையும் பாதுகாப்புடன் பார்த்து மகிழலாம்.

PC: Tejas054

கோவில் நகரம் காவேரி

கோவில் நகரம் காவேரி

ராணிபென்னூரிலிருந்து 33 கி. மீ தொலைவில் காவேரி அமைந்துள்ளது. இந்த நகரம் முழுவதும் ஏராளமான கோயில்கள் இருப்பதால் உங்கள் மத யாத்திரை பயணத்திற்கு இது சிறந்த இடமாகும். மற்ற கோயில்களை விட இங்குள்ள காலகேஸ்வரா கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இந்த கோயில் சாளுக்கியர் கட்டடக்கலைக்கு சிறந்த ஒன்றாகும். துங்கா பத்திரா ஆற்றின் கரையில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இங்கே செதுக்கப்பட்ட சிற்பங்கள் மிகுந்த கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளது.

PC: Manjunath Doddamani Gajendragad

சிர்சி

சிர்சி


காவேரியிலிருந்து 73 கி. மீ தொலைவில் சிர்சி என்ற கல்யாணபட்டணம் அமைந்துள்ளது. சிர்சியில் கொஞ்சம் கோயில் களையும் நீர்வீழ்ச்சிகளையும் நாம் காணலாம்.

மாரிகாம்பா கோவில், மதுகேஸ்வரா கோயில், உஞ்சலி நீர் வீழ்ச்சி, பென்னி ஹோல் நீர் வீழ்ச்சி மற்றும் சத்தோடி நீர் வீழ்ச்சி போன்ற சுற்றுலா இடங்கள் சிர்சியில் உள்ளன.

PC: Sachin Bv

யானா குகைகள்

யானா குகைகள்

யானா குகைகள் கருஞ்சுண்ணாம்பு படிந்த பாறைகளால் ஆனது. இதன் இரண்டு பாறைகளான பைரவரேஸ்வரா சிகாரா உயரம் 390 அடியாகவும் மற்றும் மோகினி சிகாரா 300 அடியாகவும் உள்ளது.

முந்தைய காலத்தில் வாழ்ந்த பஷ்மாஸ்சுரா சிவனிடம் தான் எதை தொட்டாலும் சாம்பலாக மாற வேண்டும் என்ற வரத்தை வாங்கினார். ஆனால் இந்த வரத்தை அவர் சிவனிடமே பயன்படுத்த முயன்ற போது ஆத்திரமடைந்த சிவ பெருமான் தன்னுடைய சக்தியால் அவன் அவனது தலையையே தொடும் படி செய்து பஷ்பமாக்கி விட்டார். அந்த அசுரனின் பஷ்பம் தான் யானா பாறையாக மாறியுள்ளது என்று நம்பப்படுகிறது.

PC: Srinivas G

யானா குகையில் நடை பயணம்

யானா குகையில் நடை பயணம்

கொஞ்சம் தூரம் இந்த குகைகளில் நடந்து சென்றால் 260 படிக்கட்டுகள் வரும். இந்த படிக்கட்டுகள் மீது ஏறிச் சென்றால் கருப்பு யானா பாறைகளை காணலாம்.

இதோடு இந்த பயணம் முடியவில்லை. நீங்கள் குகைக்குள் செல்ல வேண்டும் என்றால் 900 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இந்த திகிலான பயணத்தை முடிப்பதற்கு குறைந்தது 3 மணி நேரமாவது ஆகும். பிறகு இங்கே கருப்பு பாறைகளையும் கருப்பு களிமண்களையும் காணலாம். கண்டிப்பாக இது உங்களுக்கு ஒரு சிறப்பான பயணமாக அமையும்.

PC: Ramya suresh

விபூதி நீர்வீழ்ச்சி

விபூதி நீர்வீழ்ச்சி

யானா குகையில் வழியும் அழகிய நீர்வீழ்ச்சி தான் இந்த விபூதி நீர்வீழ்ச்சி. அடர்ந்த பசுமை காடுகள் மத்தியில் இந்த நீர்வீழ்ச்சியை காணும் போது கடவுளின் இயற்கை படைப்பை வியக்காமல் இருக்க முடியாது. இந்த நீர்வீழ்ச்சி மேற்கு மலைத்தொடரிலிருந்து 30 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. இது விபூதி என்று பெயர் வரக் காரணம் இங்கே உள்ள கருஞ்சுண்ணாம்பு பாறைகளால் உருவானதால் ஆகும்.

யானா குகைகளிலிருந்து 61 கி. மீ தொலைவில் விபூதி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இது மக்பி நீர் வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அருகில் மக்பி என்ற கிராமம் உள்ளதால் இந்த நீர்வீழ்ச்சி இப்படி அழைக்கப்படுகிறது. இந்த அருவி யை சுற்றி காற்றில் இசை பாடும் மூங்கில் காடுகள் மற்றும் காற்றில் பூத்து குலுங்கும் வண்ண மலர்கள் என்று அழகாக தோற்றமளிக்கும். இந்த நீர்வீழ்ச்சியை காண மழைக்காலம் அல்லது குளிர் கால மாதங்கள் சரியாக இருக்கும். அப்பொழுது நீரின் அளவு அதிகரித்து பார்ப்பதற்கு அழகாக இருக்கும்

PC: SachinRM