» »"கிரானைட் பெரு நகரம்" எங்கிருக்கு? அப்படி என்ன ஸ்பெஷல் அங்கே?

"கிரானைட் பெரு நகரம்" எங்கிருக்கு? அப்படி என்ன ஸ்பெஷல் அங்கே?

By: Bala Karthik

'கிரானைட் பெருநகரம்' என புகழப்படும் ஜாலோர் நகரமானது துடிப்பான மாநிலமான ராஜஸ்தானில் காணப்படுகிறது. இங்கே ஒரு சிறிய தொழிற்சாலை நகரம் காண, கல் குவாரிகளும், உலகிலேயே சிறந்த கிரானைட்களின் உற்பத்தியிலும் பிரசித்திபெற்று விளங்குவதாகவும் நமக்கு தெரிய வருகிறது. ஜாலோரை, 'ஜாலர்' என்றும் அழைக்கப்பட, முதன்முதலில் இதனை ஜபாலிபுரா என்றழைத்ததும் தெரியவருகிறது. அதன்பின்னர் புகழ்மிக்க மஹாரிஷி ஜபாலி துறவியினால் இந்த பகுதி பாரட்டப்பட, இந்த நகரத்தினை 'ஸ்வர்னகிரி' என்றழைக்க அதற்கு அர்த்தம் 'தங்க மலை எனவும் தர, இங்கே பிரசித்திபெற்ற ஜாலோர் கோட்டையும் கம்பீரத்துடன் நின்றது.

ஜாலோரின் முக்கிய ஈர்ப்பாக ஜாலோர் கோட்டை இருக்கிறது. அதோடு, இக்கோட்டை நாட்டிலேயே அசைவு கொடுக்காத, வென்றடக்க முடியாத ஒரு கோட்டை எனவும் நமக்கு தெரியவருவதோடு, செங்குத்தான மலையின் மேலே இந்த ஜாலோர் கோட்டை அமைந்து வருபவர்களின் மனதினை பெரிதும் கவர்கிறது. இந்த மாபெரும் கோட்ட கட்டப்பட்டது எப்பொழுது என்று நமக்கு தெரியவில்லையென்றபோதிலும், தோராயமாக இது கட்டப்பட்டது 8ஆம் நூற்றாண்டு முதல் 10 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் என்றும் நம்பப்படுகிறது.

http://tourism.rajasthan.gov.in/jalore

ஜாலோர் கோட்டையின் வரலாறு மற்றும் கட்டிடக்கலை:

இந்த கோட்டை பாரம்பரியமிக்க இந்து கட்டிடக்கலை பாணியில் திறம்பட கட்டப்பட்டிருக்க, 1100 அடி உயரத்தில் இந்த ஜாலோர் கோட்டை அமைந்திருப்பதோடு, ஒட்டுமொத்த நகரத்தின் காட்சியையும் இங்கிருந்து நாம் பார்த்து ரசிக்கவும் இக்கோட்டை உதவுகிறது. ஒரு நீண்ட நெளிந்திருக்கும் பாதையின் வழியாக நான்கு முக்கிய கதவுகளுள் ஒன்றினை நாம் அடைய, அந்த கதவின் வழியாக மட்டுமே நம்மால் உள்ளே செல்லவும் முடிகிறது.

இந்த கோட்டையை பல்வேறு காலத்தில் வாழ்ந்த பல்வேறு ஆட்சியாளர்களான பரமரக்கள், சௌகன்கள், ராஜ்புட்கள் என பல பாதுகாவலின் கீழ் பராமரிக்கப்பட, மாருவின் (மணல் அல்லது பாலைவனம்) ஒன்பது அரண்மனைகளுள் ஒன்றாகவும் பத்தாம் நூற்றாண்டில் பரமரா வம்சத்திற்கு கீழ் விளங்கியது. இருப்பினும், 1311ஆம் ஆண்டு, ஜாலோர் கோட்டையை தில்லி சுல்தானான அலாவுதின் கில்ஜி முற்றுகையிட்டு, தகர்த்தார். இருப்பினும், இந்த கோட்டை அந்த அழகிய தாக்குதலின் பின்னும் இடிபட்ட நிலையில் கதைகள் பேசி சுற்றுலா பயணிகளின் கண்களை வெகுவாக கவர்கிறது.

இந்த கோட்டை கல் சுவர் கொண்டு, மற்ற இடங்களைக்காட்டிலும் இன்றும் துனிவுடன் நிற்பதனால், வரும் சுற்றுலா பயணிகள், இதன் வலிமையை கண்டு பிரமித்துபோய் தான் கோட்டை சுவரோடு சேர்ந்து நிற்கின்றனர். ஒரு பாழாக்கப்பட்ட அரண்மனை, சில தண்ணீர் தொட்டிகள், மசூதிகள், கல்லறைகள் மற்றும் சிவன், மற்ற டவுள்கள், தேவிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழைய ஆலயமும் கோட்டையின் உள்ளே காணப்படுகிறது. சில அழகிய ஜெய்ன் ஆலயங்களும் கோட்டையின் வளாகத்தில் காணப்படுகிறது. ஆதி நாத்தின் பழமையான கோவிலும் காணப்பட, வெள்ளை பளிங்கு கற்களை கொண்டு அது செதுக்கப்பட்டிருப்பதோடு, தவிர்க்க கூடாத அழகிய காட்சிகளையும் நம் கண்களுக்கு அவை தருகிறது.

இந்த கோட்டையின் உச்சியை நா் அடைய தோராயமாக ஒரு மணி நேரம் ஆவதோடு, மற்ற ஒரு மணி நேரத்தில் இடிபட்ட நிலைகளை நாம் பார்க்கவும் சரியாக தேவைப்படுகிறது. வரலாற்றின் சுவாரஸ்யத்தை தாங்கிக்கொண்டு நிற்கும் இதன் கட்டிடக்கலை பாணி, கைகளில் புகைப்பட கேமராவை எடுக்கவைப்பதோடு, ஜாலோர் கோட்டையை போட்டோக்கள் மூலம் பதிவு செய்ய நேரத்தையும் நம் மனதினை தேட வைக்கிறது.

hardik bhansali

ஜாலோர் கோட்டையை நாம் காண சறந்த நேரங்கள்:

ராஜஸ்தானின் வறண்ட நிலப்பரப்பில், கடுமையான கோடைக்காலமானது ஜாலோரின் புதுவித அனுபவத்தை தருகிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் சில சுற்றுலா பயணிகள் வந்துசெல்ல, ஓய்விற்காக வரும் பட்ஜெட் பயணிகளுக்கு ஏற்றதாகவும் அமைகிறது. இருப்பினும், குளிர்காலத்தின் போது நிறைய சுற்றுலா ஆர்வலர்கள் இங்கே வருகின்றனர். வெப்ப நிலை கொஞ்ம் குறைய, சூரியனும் தன் கதிர்களை சுறுக்கிக்கொள்ள அந்த நேரமானது... சில சமயங்களில் பூஜ்ஜிய வெப்ப நிலையிலும் காணப்படுகிறது. அதனால், தேவையான அளவிற்கு சூடான ஆடையை நம் பயணத்தில் சேர்த்துக்கொள்வது சிறந்ததாக அமைய, குளிர்காலத்தில் ராஜஸ்தானின் எந்த பகுதியையும் நம்மால் பார்க்கவும் முடிகிறது.

ஜாலோர் கோட்டையை நாம் அடைவது எப்படி:

Mathanki Kodavasal

சாலை மார்ககமாக செல்வது எப்படி:

ஜாலோரின் சாலைகள், ராஜஸ்தானின் பல முக்கிய பெரு நகரங்களோடு இணைக்கப்பட்டுள்ளது. 180 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஜோத்பூர் தான் அருகில் இருக்கும் ஒரு பெரு நகரமாக அமைய, ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூரிலிருந்து ராஜஸ்தான் மாநில போக்குவரத்து பேருந்துகளும் இயக்கப்பட, மும்பை, சூரத், மற்றும் அஹமதாபாத்திலிருந்து தனியார் பேருந்துகளம் இயக்கப்படுகிறது. நம்முடைய நேரத்தை பொறுத்து சொந்தமாகவும் ஓட்டி செல்ல, அதுவும் நமக்கு சவுகரியமாகவே அமைகிறது.

தண்டவாள மார்க்கமாக செல்வது எப்படி:

ஜாலோர் கோட்டையிலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு இரயில் நிலையமாக ஜாலோர் இரயில் நிலையமானது அமைந்திருக்கிறது. மும்பை மற்றும் குஜராத்திலிருந்து வரும் சில இரயில்கள் இங்கேயு் நிறுத்தப்படுகிறது. அதற்கு மாறாக, தங்களுடைய சொந்த நகரத்திலிருந்து ஜோத்பூருக்கு பயணம் செய்பவர்கள், ஜாலோரை பேருந்து அல்லது காரின் மூலமாக அடைகின்றனர்.

ஆகாய மார்க்கமாக செல்வது எப்படி:

அருகில் காணும் விமான நிலையமாக ஜோத்பூர் விமான நிலையம் அமைந்திருக்க, ஜாலோரை அடையவும் இது உதவுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து பேருந்து அல்லது ாடகை காரின் மூலமாக நாம் ஜாலோர் கோட்டையை அடையலாம்.

Read more about: travel