» »அஜ்மீர் போயிருக்கீங்களா? அங்க என்னெல்லாம் நம்ம மனசை கவரும்னு தெரிஞ்சுக்கலாமா?

அஜ்மீர் போயிருக்கீங்களா? அங்க என்னெல்லாம் நம்ம மனசை கவரும்னு தெரிஞ்சுக்கலாமா?

Written By: BalaKarthik

அழகிய சுற்றுலா இலக்கான அஜ்மீர், அதீத கலாச்சார பாரம்பரியம் கொண்டு ராஜஸ்தான் மாநிலத்தின் நினைவிடமாக விளங்குகிறது. இந்த நகரமானது கோட்டைகளையும், இஸ்லாமிய ஆலயங்களையும் சின்னமாக கொண்டிருக்கிறது. அஜ்மீர், ஆரவள்ளி தொடர்ச்சியின் மத்தியில் அரச குடும்பத்து நகரமான ஜோத்பூரிலிருந்து 205 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது.

அத்துடன் பழங்காலத்து நகரமாக அஜ்மீர் விளங்க, இவ்விடமானது அழகையும், நேர்த்தியையும் தாங்கிக்கொண்டு, தனித்துவமிக்க கலாச்சாரத்தையும், பல்வேறு பாரம்பரியத்தையும் கொண்டிருக்கிறது. இங்கே வரும் நம்மால், பழமையான முகலாய கட்டிடக்கலையையும் காண முடிய, பழங்காலத்தை கடந்தும் வலிமையுடன் நிற்கிறது. இவ்விடத்திற்கான பயண நேரமாக 4.5 மணி நேரங்கள் ஆக, ஜோத்பூரிலிருந்து புறப்பட்ட நம் பயணம் அஜ்மீரில் முழுமையடைகிறது.

அஜ்மீரை நாம் காண ஏதுவான நேரங்கள்:

அஜ்மீரை நாம் காண ஏதுவான நேரங்கள்:

பருவமழைக்காலமான ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் இந்த புனித நகரமான அஜ்மீரை நாம் காண ஏதுவாக அமைகிறது. இந்த நகரமானது பசுமையான சூழலை கொண்டு மிளிர, இதனால் புத்துணர்ச்சியானது நமக்கு புதுவித அனுபவத்தை சேர்த்தே தருகிறது. இதன் நிலப்பரப்பானது மாயத்தை நம் மனதில் விதைத்து ஆராய தூண்டுகிறது.

குளிர்க்காலமானது அக்டோபர் முதல் மார்ச் வரையில் காணப்பட, அஜ்மீரை நாம் காண அற்புதமான நேரமாக இது அமைவதோடு சிறப்பான கால நிலையாகவும் அமைகிறது. இதன் அழகிய பின்புலமும், இளஞ்சிவப்பு குளிர்க்காலமும் என நம் கையில் வைத்து பார்த்திட, நினைவூட்டும் அனுபவத்தை அது நமக்கு பரிசாய் தருகிறது.

கோடைக்காலத்தில் இங்கே அஜ்மீரை காண வருவது தவிர்க்கப்பட வேண்டியதாக அமைய, வெப்பமானது 48 டிகிரி செல்சியஸ் வரை மிகுந்து காணப்பட, சுற்றுலா ஆர்வலர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கையாள்வதற்கான கடினம் காணப்படுகிறது.

PC: Billyakhtar

அஜ்மீரை நாம் அடைவது எப்படி?

அஜ்மீரை நாம் அடைவது எப்படி?

ஜோத்பூர் மற்றும் அஜ்மீருக்கு எந்த வித விமானங்களும் காணப்படவில்லையென்றாலும், தூரம் என்பது குறைவாகவே இருக்கிறது. சாலை வழியானது போக்குவரத்துக்கு மிகவும் விருப்பமான முறையாக அமைய, மகிழ்விக்கக்கூடிய காட்சிகளையும் இயற்கையானது சேர்த்து நமக்கு தருகிறது.

தண்டவாள மார்க்கமாக அடைவது எப்படி?

தினசரி பயணிகள் மற்றும் விரைவு இரயில் என ஜோத்பூரிலிருந்து அஜ்மீருக்கு காணப்படுகிறது.

பேருந்து மூலமாக அடைவது எப்படி?

ராஜஸ்தான் மாநில சாலை போக்குவரத்து மற்றும் தனியார் பேருந்து இயக்கமென சவுகரியமான நிலையுடன் காணப்பட, ஆடம்பரமான பேருந்துகளும் இரு இலக்குகளுக்கு நடுவில் காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் அஜ்மீர் முதல் ஜோத்பூர் வரை இணைக்கப்பட்டு காணப்படுகிறது. இந்த சாலைகள் நல்ல முறையில் சேவையுடன் காணப்பட, பராமரிக்கப்பட்டும் வர, மிகவும் விருப்பமான போக்குவரத்தாக இரு நகரங்களுக்கு இடையேயான சாலை வசதியானது காணப்படுகிறது.

PC: Shahrukh Alam

விரிவான வழி வரைப்படம்:

விரிவான வழி வரைப்படம்:


வழி 1: ஜோத்பூர் - ஜெய்த்தரன் - பேவர் - அஜ்மீர்

நாம் செல்ல வேண்டிய தூரமாக 205 கிலோமீட்டர் இருக்க, இந்த பயணத்துக்கான நேரமாக தோராயமாக 4 மணி நேரம் ஆகிறது.

வழி 2: ஜோத்பூர் - ஜெய்த்தரன் - பாப்ரா - பேவர் - அஜ்மீர்

இந்த வழியாக தோராயமாக 218 கிலோமீட்டர் காணப்பட, இந்த வழி பயணமாக 4 மணி நேரம் 30 நிமிடங்கள் நாம் இலக்கை எட்ட தேவைப்படுகிறது.

வழி 3: ஜோத்பூர் - பாலி - பேவர் - அஜ்மீர்


இந்த பரந்து விரிந்த 251 கிலோமீட்டரை நாம் கடக்க, 4 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆக, ராஜஸ்தானின் இரு ஈர்ப்புகள் காணப்படுகிறது. குறுகிய வழியாக முதலாம் வழியானது காணப்பட, ஜோத்பூரிலிருந்து அஜ்மீருக்கான நேரடி வழியாக இது அமைகிறது.

ஜோத்பூர் முதல் ஜெய்த்தரன் வரை:

ஜோத்பூர் முதல் ஜெய்த்தரன் வரை:

ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தின் நகரமாக ஜெய்த்தரன் காணப்படுகிறது. இவ்விடமானது பூரிப்பை தரும் சுற்றுலா இலக்காக அமைய, எண்ணற்ற விதவிதமான ஈர்ப்பையும் கொண்டு கலாச்சார ஈர்ப்பிலிருந்து வரலாற்று தளம் வரை என காணப்பட, இவ்விடமானது சாகசம் மற்றும் பொழுதுப்போக்கு செயல்களையும் கொண்டு அனைத்து தரப்பினரையும் கவர்கிறது.

ஜெய்த்தரன் ஆனது பல்வேறு இதிகாச போர்களுக்கு ஆதாரமாக விளங்க, ஒன்று ஷெர் ஷா சூரி மற்றும் ராவோ மால்டியோ ரத்தோருக்கு இடையே என தெரியவருகிறது. இங்கே காணப்படும் ஒரு சில ஈர்ப்புகளாக பாவல் ஆலயம் காணப்பட - பாவல் தேவிக்கும், காயத்ரி ஆலயத்துக்கும் மற்றும் குட்கிக்கும் என மீராபாய் பிறந்த இடத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்பட, குட்கியியை ஆட்சி செய்தவரின் மகள் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

PC: Piyush Tripathi

பேவர்:

பேவர்:


ராஜஸ்தான் மாநிலத்தின் வளரும் நகரமாக பேவர் காணப்பட, ஆரவள்ளி மலையை தழுவியும் இது காணப்படுகிறது. இவ்விடமானது பூரிப்பை தரும் வனிக மையமாக விளங்க, கம்பளியும், ஜமுக்காளம் தர நூலும் என புகழ்மிக்க இடமாக விளங்குகிறது.

சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் பேவர், மணலையும் அதீத தாதுக்கள் நிறைந்ததாய் கொண்டிருக்கிறது. பேவரின் முக்கியமான ஈர்ப்புகளுள் ஒன்றாக சாங்க் கேட் காணப்பட, இப்பகுதியில் காணப்படும் பரப்பரப்பான சந்தை மையம் மற்றும் போக்குவரத்து மையம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதி இலக்கு – அஜ்மீர்:

இறுதி இலக்கு – அஜ்மீர்:


நம்ப முடியாத இயற்கை அழகை கொண்டிருக்கும் அஜ்மீர், ராஜஸ்தானில் சிறப்பான மக்களையும் கொண்டிருக்கிறது. இங்கே புகழ்மிக்க உர்ஸ் திருவிழா கொண்டாடப்பட, இதனால் மொய்னுதீன் சிஸ்டி எனும் நீங்காத துறவியின் இறப்பு வருட விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. அஜ்மீரில் மதத்துவம் மூழ்கி காணப்பட, அவை இந்து மற்றும் ஜெய்ன் மதங்கள் எனவும், அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நகரத்தில் நினைவிடமாக பல ஆலயங்களையும் நம்மால் பார்க்க முடிகிறது.

தர்ஹா ஷரிப்:

தர்ஹா ஷரிப்:


அஜ்மீர் நகரத்தின் யாத்ரீக புள்ளிகளுள் ஒன்றாக காணப்படுகிறது தர்ஹா ஷரிப். இவ்விடமானது நினைவிடமாக பூலாந்த் டர்வாஷாவை கொண்டிருக்கிறது. பல்வேறு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு வருடமும் இங்கே வருகின்றனர். ஜஹால்ரா நீரானது பிரதான நீராக முன்பு காணப்பட, தற்போது இதன் நீரானது ஆலயத்தின் சடங்குகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.

PC: Shahnoor Habib Munmun

தரகார்ஹ் கோட்டை:

தரகார்ஹ் கோட்டை:


பழங்காலத்து கோட்டையாக இதனை சொல்லப்பட, ஆசியாவில் கட்டப்பட்ட முதல் மலைக்கோட்டை இதுவென தெரியவர இதனை கட்டியது சாணக்கிய வம்சமெனவும் சொல்லப்பட, தரகார்ஹ் கோட்டை என அழைக்கப்படுகிறது. ஆரவள்ளி மலையை தழுவி இவ்விடம் காணப்பட, அஜ்மீரின் நெகிழவைக்கும் அழகையும் நம்மால் பார்த்திட முடிகிறது.

இதனை நட்சத்திர கோட்டை என அழைக்க, இந்த அற்புதமான கோட்டையின் நுழைவாயிலாக மூன்று நுழைவாயில் காணப்பட, அதனை தொடர்ந்து எண்ணற்ற சுரங்கங்களும், போர்ப்பாதையுமென மதிற்சுவர்களும் காணப்படுகிறது. மாபெரும் பள்ளத்தாக்குகள் காணப்பட, அவை தரகார்ஹ் கோட்டையின் புகழ்மிக்க ஈர்ப்பாக அமைவதோடு, பல சுற்றுலா மற்றும் பயண ஆர்வலர்களையும் காட்சிகளால் ஈர்க்கிறது.

PC: Daniel Villafruela

இதழ் அருங்காட்சியகம்:

இதழ் அருங்காட்சியகம்:


சலீம் அரசரின் ராஜ வம்சத்து வீடாக விளங்கிட, தற்போது அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டிருக்க அதீத வரலாற்றையும், ராஜஸ்தானின் கலாச்சாரத்தையும் கொண்டிருக்கிறது. எண்ணற்ற பழங்காலத்து சிற்பங்கள் மற்றும் கவசம் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்க, முகலாய மற்றும் ராஜ்புட் வம்சத்தின் வரலாற்றையும் இவ்விடமானது நினைவுப்படுத்துகிறது.

PC: Suryansh Singh

அன சாகர் ஏரி:

அன சாகர் ஏரி:

இந்த ஏரியானது பழங்காலத்து செயற்கை ஏரியாக அமைய, பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அனஜி சௌஹன் என்பவரால் அமைக்கட்டதாக சொல்லப்பட, இவர் தான் பிரித்வி ராஜ்ஜின் பாட்டன் என்பதும் தெரியவருகிறது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட பெரிய ஏரிகளுள் ஒன்றாக விளங்கும் அன சாகர் ஏரி, புகழ்மிக்க கொப்ரா பெஹ்ரூன் ஆலயத்தையும், தௌலத் பாஹ் தோட்டத்தையும் கொண்டிருக்கிறது.

PC: Logawi

 அஜ்மீரில் காணப்படும் சாகச செயல்கள்:

அஜ்மீரில் காணப்படும் சாகச செயல்கள்:

அற்புதமான சூழலை கொண்டு காணப்படும் அஜ்மீர், ஆராயவும், கண்டுபிடித்திடவும், வாழவும், உண்ணவும், ஷாப்பிங்க் செய்யவும் ஏற்ற இடமாக அமைகிறது. இங்கே காணப்படும் உள்ளூர் தெரு சந்தைகளாக தர்ஹா கடைத்தெரு, நல்லா கடைத்தெரு, மற்றும் மஹிலா கடைத்தெரு காணப்பட, பல்வேறு தேர்வுகளுடன் காணப்படும் இவ்விடம், பாரம்பரிய நினைவு பொருட்களையும் பிரதிபலித்த வண்ணம் காணப்பட, ராஜஸ்தானின் அழகிய கலாச்சாரம் இதுவெனவும் தெரியவருகிறது. நீங்கள் இங்கே காணப்படும் உள்ளூர் சந்தையில் சுவையான உணவையும் சாப்பிட்டு மனமகிழலாம்.

PC: A Vahanvati