Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் உள்ள அழகான மற்றும் சிறந்த கடற்கரைகளின் லிஸ்ட் இதோ!

இந்தியாவில் உள்ள அழகான மற்றும் சிறந்த கடற்கரைகளின் லிஸ்ட் இதோ!

"வெற்றுக் கடற்கரையில் சூரிய அஸ்தமனத்துடன் வெளியே செல்வது என்பது உங்கள் தனிமையை உண்மையிலேயே தழுவுவதற்கு சமம்" என்ற பிரபலமான கூற்றின்படி, இக்கட்டுரையில் இந்தியாவின் சில அழகிய கடற்கரைகளை பற்றி காண்போம்.

இயற்கை அன்னை நம் மண்ணை ஆசீர்வதித்திருக்கிறாள். இந்தியா 7,500 கிமீ நீளமுள்ள அதன் பரந்த கடற்கரையோரத்தில் அழகிய கடற்கரைகளை கொண்டுள்ளது. பரபரப்பான நகர கடற்கரைகள் முதல் ஒதுக்குப்புறமான தொலைதூர கடற்கரைகள் வரை, இந்தியாவின் புகழ்பெற்ற கடற்கரைகள் பேரின்பத்தின் பொக்கிஷம். நம் நாடு உலகின் சில சிறந்த கடற்கரைகளைக் கொண்டிருப்பது நம் அதிர்ஷ்டம். அன்றாட பிரச்சினையில் இருந்து சற்று ஓய்வெடுக்க, உயிருக்கு ஊட்டம் ஏற்றிக்கொள்ள, வெதுவெதுப்பான மணலில் நடக்க, உப்புக்காற்றை சுவாசிக்க, மாலை வேளை குளிர்ந்த நீரில் நனைய என அனைத்துக்கும் சரியான விடைகள் பின்வரும் கடற்கரைகளுக்குள் கிடைக்கும்.

ராதாநகர் கடற்கரை, அந்தமான் நிக்கோபார் தீவுகள்

ராதாநகர் கடற்கரை, அந்தமான் நிக்கோபார் தீவுகள்

இயற்கை எழில் கொஞ்சும் ஹேவ்லாக் தீவில் அமைந்துள்ள ராதாநகர் கடற்கரை அந்தமான் தீவுகளின் புகழ்பெற்ற கடற்கரையாகும். இது வெப்பமண்டல காடுகளால் சூழப்பட்ட ஒரு அழகிய வெள்ளை மணல் கடற்கரை. இந்த கடற்கரை நீச்சலுக்கும் வெயிலில் ஓய்வெடுக்கவும் ஏற்றது.
சாகச விரும்பிகளுக்கு ஏற்றவாறு இங்கு ட்ரெக்கிங் செய்யவும் அனுமதி உண்டு. இந்த கடற்கரையில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தை கண்டுகளிப்பது பிரசித்தி பெற்றது. இது 2004 ஆம் ஆண்டு டைம் இதழின் ஆசியாவின் சிறந்த கடற்கரை என்ற விருதை வென்றுள்ளது. டிரிப் அட்வைசர் இந்த கடற்கரைக்கு 2019 ஆம் ஆண்டுக்கான பயணிகளின் சாய்ஸ் விருதையும் வழங்கியுள்ளது. பல அங்கீகாரங்களுடன், இது உண்மையிலேயே இந்தியாவின் சிறந்த கடற்கரைகளின் பட்டியலில் இருக்கத் தகுதியானது.

பாகா கடற்கரை, கோவா

பாகா கடற்கரை, கோவா

கோவாவின் கொண்டாட்ட தலைநகரான பாகா கடற்கரை சுற்றுலா பயணிகளின் மத்தியில் நன்கு அறியப்பட்ட கடற்கரையாகும். வாட்டர்ஸ்போர்ட்ஸ் கடற்கரை குடில்களில் ஓய்வெடுத்தல், கலகலப்பான இரவு கலாசாரத்துடன் பார்ட்டி, அருகிலுள்ள உள்ளூர் சந்தைகளில் ஷாப்பிங், வித விதவிதமான உணவுகள் என பாகா கடற்கரையில் கேளிக்கைக்கு பஞ்சமில்லை.
இந்த இடத்தின் சிறப்பம்சங்களை பற்றி பட்டியலிட்டு கொண்டே போகலாம். இது கடற்கரை பிரியர்களுக்கும், பார்ட்டி பிரியர்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒரு இடம்.

ஓம் கடற்கரை, கர்நாடகா

ஓம் கடற்கரை, கர்நாடகா

தெய்வீக தொடர்புகள் கொண்டதாக அறியப்படும், கர்நாடகாவில் உள்ள ஓம் கடற்கரை, இந்தியாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய கடற்கரைகளில் ஒன்றாகும். கண்ணுக்கு இதமான பசுமையால் சூழப்பட்ட இந்த கடற்கரை அரபிக்கடலின் கண்கவர் காட்சிகளையும் பசுமையான சூழலையும் வழங்குகிறது.
ஓம் வடிவத்தை ஒரே சட்டகத்தில் காண ஓம் பீச் வியூபாயின்ட் வரை ட்ரெக்கிங் செய்யலாம்.

மெரீனா கடற்கரை, சென்னை

மெரீனா கடற்கரை, சென்னை

உலகின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்று புகழ் பெற்று, வங்காள விரிகுடாவில் கோரமண்டல் கடற்கரையில் அமைந்துள்ள சென்னை மெரினா கடற்கரை இந்தியாவின் மிகப்பெரிய கடற்கரையாகும்.
சூரிய அஸ்தமனத்தின் போது அற்புதமாக அமைதியாக காட்சியளிக்கும் இந்த கடற்கரை நமக்கு ஒரு அலாதியான உணர்வை கொடுக்கிறது. இந்த நகர்ப்புற மணல் நிறைந்த கடற்கரை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை நீண்டுள்ளது. இங்கு வருகை தரும்போது இங்கு இருக்கும் அக்வேரியத்தையும், வரலாற்று நினைவுச்சின்னங்களையும் தவிர்க்காமல் பார்க்க வேண்டும்.

பூரி கடற்கரை, ஒரிசா

பூரி கடற்கரை, ஒரிசா

இந்தியாவின் சிறந்த கடற்கரைகளில் ஒன்றான பூரி கடற்கரை, பனை மரங்களால் சூழப்பட்ட கூடிய அழகிய கடற்கரை மட்டுமல்ல. அழகான சூரிய உதயம், கண்கவர் சூரிய அஸ்தமனம் ஒரிசாவில் உள்ள பூரி கடற்கரையின் சொத்துக்களில் சில. கடற்கரையின் வெள்ளை மணலும் தெளிவான நீர் காட்சிகளும் அழகை மேலும் கூட்டுகிறது. இந்தியாவின் மிக அழகிய கடற்கரைகளில் ஒன்றாக அறியப்படும் இந்த கடற்கரை விடுமுறைக்கு ஏற்றதாக உள்ளது. மாலை நேரத்தில், இந்த கடற்கரையில் ஒட்டக சவாரி மற்றும் குதிரை சவாரி கூட வழங்கப்படுகிறது. உள்ளூர் கலைப்பொருட்கள் மற்றும் கைத்தறி பொருட்களை வாங்குவது இங்கு விசேஷமாக கருதப்படுகிறது.

தர்கர்லி கடற்கரை, மகாராஷ்டிரா

தர்கர்லி கடற்கரை, மகாராஷ்டிரா

இந்தியாவின் சிறந்த கடற்கரை இடங்களில் ஒன்றான தர்கர்லி கடற்கரை கர்லி ஆறு மற்றும் அரபிக் கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த கடற்கரையில் உள்ள தண்ணீரின் தெளிவு மற்றும் வசீகரிக்கும் வெள்ளை மணல் ஆகியவை தர்கர்லி கடற்கரையின் மிகவும் தனித்துவமான அம்சமாகும்.
இங்கு பாராசெய்லிங், ஸ்நோர்கெல்லிங் மற்றும் ஸ்கூபா டைவிங் போன்ற சாகச நீர் விளையாட்டு நடவடிக்கைகளையும் அனுபவிக்க முடியும். டைவிங் செய்யும் போது, அழகான பவளப்பாறைகள், கண்கவர் மீன்களின் கூட்டங்கள் மற்றும் பல்வேறு கடல் தாவரங்களையும் கண்டுகளிக்கலாம்.

கோவளம் கடற்கரை, கேரளா

கோவளம் கடற்கரை, கேரளா

கேரளாவின் மலபார் கடற்கரையில் அமைந்துள்ள கோவளம் கடற்கரை கண்கவர் வெள்ளை மணல் பரப்பின் சொர்க்கம் போல் காட்சியளிக்கிறது. இந்த கடற்கரையின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கலங்கரை விளக்கம், ஹவா கடற்கரை மற்றும் சமுத்ரா கடற்கரை ஆகிய மூன்று கடற்கரைகளின் சங்கமம் ஆகும். கேரளாவின் இரவு வாழ்க்கையை ரசிக்க மற்றும் மாலை நேர கலாட்டாவைக் கழிக்க, கண்டிப்பாக இந்த கடற்கரைக்குச் செல்லலாம். கேடமரன் படகு சவாரி, சர்ஃபிங், பாராசெயிலிங் போன்ற சாகச நீர் விளையாட்டுகளும் இங்கு பிரபலம்.

ராக் கடற்கரை, பாண்டிச்சேரி

ராக் கடற்கரை, பாண்டிச்சேரி

பெயருக்கு ஏற்றது போல இந்த ராக் கடற்கரை முழுவதும் பாறைகளால் நிரம்பப்பட்டுள்ளது. பொழுதை கழிக்கவும், பாறைகளின் மீது அலைகள் மோதுவதை பார்ப்பதற்கும், அழகிய புகைப்படங்கள் எடுப்பதற்கும் இது ஏற்ற இடம்.
பிரஞ்சு கட்டிடக்கலையை ரசிப்பது, ருசியான பிரெஞ்ச்-இந்திய இணைவு உணவை உண்பது, நீர்முனையில் உலா வருவது என இந்த கடற்கரை அறிப்படுகிறது. மேலும் சுற்றுலாபயணிகள் இதை "மினி கோவா" என்றும் அழைப்பார்கள்.
பிரகாசமான சூரியன், தென்றல் காற்று, தெளிவான வானம், மற்றும் ஆர்ப்பரிக்கும் அலைகள் அனைத்தும் மிகவும் ஆனந்தமானவை. இதுவே இந்தியாவின் பல்வேறு அழகிய கடற்கரைகளின் மேஜிக் ஆகும்

Read more about: beaches india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X