» »இந்தியாவின் சிறந்த ரயில் பாலங்கள்!

இந்தியாவின் சிறந்த ரயில் பாலங்கள்!

Written By: Staff

ரயில்கள் தடக் தடக் தடக் தடக் என்று ஒலிஎழுப்பிச் செல்லும்போது ஏற்படும் பரவசமே தனிதான் இல்லையா. அதிலும், பாலத்தின்மீது சடாரேன ஒலி மாறி அடி வயிற்றில் ஒரு பயம் கலந்த உற்சாகம் பிறக்கும்; இந்த உணர்வு நீங்கள் எத்தனை பெரிய போயிங் விமானத்தில் சென்றாலும் கிடைக்காது. ஜன்னோலரத்தில் கம்பிகளுக்கு இடையில் நெற்றியைத் துருத்திக் கொண்டு பாலத்தின் அடியில் இருக்கும் தண்ணீரைப் பார்க்கும் அனுபவம் எல்லோருக்கும் சிறுவயதில் நடந்திருக்கும். ரயில்கள் ஒரு சந்தோஷம் என்றால், பாலங்களில் செல்லும் போது எட்டிக் கொண்டு பார்ப்பதில் இன்னொரு சந்தோஷம்.

Pamban

Picture Courtesy : Dashingprince

பாம்பன் பாலம்:
இந்தியாவின் முதல் கடல்ப் பாலம் என்ற பெருமை பாம்பன் பாலத்திற்கு உண்டு. மும்பையின் பாந்த்ரா-ஒர்லி கடல் இணைப்பு பாலம் - 2009'இல் திறக்கப்படும் வரை பாம்பன் பாலம்தான் இந்தியாவின் நீண்ட கடல் பாலம். 2 கி.மீ நீளத்தில் இருக்கும் பாம்பன் பாலத்தை மொத்தம் 143 தூண்கள் தாங்கிப் பிடிக்கின்றன‌.

ஒரு பாலம் நூறாண்டுகளை வெற்றிகரமாக கடப்பது சாதாரண விஷயமல்ல. அதிலும் கடல் அரிப்புத்தன்மை அதிகம் உள்ள ராமேஸ்வரத்தில் ஒரு பாலம் இத்தனை ஆண்டுகள் கடப்பது அதன் பின்னே இருக்கும் அபார உழைப்பையும், தொழில்நுட்பத்தையும் நமக்கு எடுத்து காட்டுகின்றன.

sharavati

ஷராவதி பாலம்

ஷராவதி பாலம் கர்நாடகத்தின் மிக நீளமான ரயில் பாலம். புகழ்பெற்ற கொங்கன் ரயில் இந்த பாலத்தின் வழியாகத்தான் ஹோனவார் தெற்கிற்குச் செல்கிறது

godavari

Picture Courtesy : Ramesh Ramaiah

கோதாவரி ஆர்ச் பாலம்
கோதாவரி ஆர்ச் பாலம் ராஜ‌முந்திரியில் இருக்கும் கோதாவரி நதிக்கரையின் மேல் இருக்கும் ஒரு புகழ்பெற்ற ரயில்வே பாலம். கோதாவரி நதிக்கென்று மூன்று பாலங்கள் இருக்கின்றன. முதல் பாலம் ஹேவ்லாக் பாலம் அதனைத் தொடர்ந்து கட்டப்பட்டது கோதாவரி பாலம். கடைசியாய் கட்டப்பட்டது கோதாவரி ஆர்ச் பாலம்

jubilee

Picture Courtesy : Piyal Gundu

புதிய ஜூப்ளி பாலம்
பழைய ஜூப்ளி பாலம், ஹூக்ளி நதிக்கரையில், 1885'இல் கட்டப்பட்டது; இன்றும் அது முக்கியமாகத் திகழ்கிறது. இப்போது புதிய பாலம் கட்டப்பட்டிருக்கிறது நய்ஹட்டி, பந்தெல் ஆகிய ஊர்களை இணைப்பதற்கு.

Vembanadu

Picture Courtesy : Dr Ajay Balachandran

வேம்பநாடு ரயில்வே பாலம்
வேம்பநாடு ரயில் பாலம் கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள எடப்பள்ளி, வல்லார்பாதம் ஆகிய இடங்களை இணைக்கிறது. கட்டப்படுகையில் இதுவே இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலமாக இருந்தது. தற்போது இந்தியாவில் நீர்நிலைகளுக்கு மேலிருக்கும் மிக நீளமான பாலங்களுள் இது நான்காவதாக உள்ளது. இப்பாலம் சரக்குப் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

Read more about: bridges trains

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்