Search
  • Follow NativePlanet
Share
» »என்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா? அப்ப VRV ல?

என்னங்க சொல்றீங்க சிம்பு படங்கள்ல இந்த மாதிரி காட்சிகள்லாம் வருதா? அப்ப VRV ல?

சிம்புனு சொன்னா போதும் சின்ன பசங்கள்ல இருந்து எல்லாருக்குமே தெரியும். சர்ச்சைகளுக்கும் இவருக்கும் அவ்வளவு பொருத்தம். அவரோட வாழ்க்கையில சர்ச்சைகள் மாதிரியே , காதலும் அடிக்கடி வந்து எட்டிப் பாத்துட்டு போயிருக்கும். அது நிலையில்லாம போக, வாழ்க்கையும் தலைகீழா மாறிடிச்சி. ஆனாலும் அவர் மேல ரசிகர்கள் வச்சிருக்குற நம்பிக்கை ஒரு நல்ல படம்... தங்கள் தலைவன திரையில ரசிச்சி கொண்டாடி, அண்டா அண்டாவா பால கொட்டி ரசிகர்களையும் மக்களையும் வரவேற்க காத்திருக்காங்க.

இப்ப வந்தா ராஜாவாத்தான் வருவேன்னு சொல்லிட்டு, வந்துருக்காரு சிம்பு.. படம் எப்படி இருக்குதுனு நீங்களே பாத்து தெரிஞ்சிக்கோங்க. அதுக்கு முன்னாடி சிம்புவோட திரைப்படங்கள்ல வந்த சில அழகிய சுற்றுலாத் தளங்களையும் பார்த்து ரசிக்கலாம். இந்த படங்கள்தான் சிம்பு வோட வாழ்க்கைய தலைகீழா மாத்தியமைச்சிச்சினு சொன்னா மறுக்கப்போறீங்களா என்ன?

ஒஸ்தி வேலன்

ஒஸ்தி வேலன்

சிம்பு ஒஸ்தி வேலனா, திருநெல்வேலி பாஷ பேசி அவரது ரசிகர்கள் மகிழ்விச்ச ஒரு படம் ஒஸ்தி. இந்த படம் தென்காசி பகுதியில எடுத்தாங்கனு சொல்றாங்க. ஆனா படத்தோட பெரும்பாலான காட்சிகள் இன்டோர்ல எடுக்கப்பட்டதுதான். சில காட்சிகளும் பாடல்களும் ஹைதரபாத் ராமோஜி பிலிம் சிட்டில எடுத்துருக்காங்க. ஆனா முக்கியமா ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகள் எல்லாமே எடுக்கப்பட்ட இடம் பத்தி தெரிஞ்சிக்கணும்.

மைசூர்

மைசூர்

அது படம்பிடிக்கப்பட்ட இடம் மைசூர். சரி மைசூர்ல அப்படி என்னதான் இருக்குனு தெரிஞ்சிக்கணும்ல..

கர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரமான மைசூர் அதன் தூய்மையான மற்றும் ராஜ கம்பீர தோற்றத்துக்காகவே தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்ற நகரமாகும். மைசூரின் புராதான அழகும் நன்கு பராமரிக்கப்பட்டிருக்கும் தோட்டங்களும் தொன்மை வாய்ந்த மாளிகைகளும், குளுமையான நிழற் சாலைகளும் இங்கு வருகை தரும் ஒவ்வொரு பயணியின் மனதிலும் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன

மைசூரைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சொடுக்குங்கள்

Rohini

மைசூரில் காணவேண்டிய இடங்கள்

மைசூரில் காணவேண்டிய இடங்கள்

மைசூர் அரண்மனை

மைசூர் அரண்மனை என்று இந்த பிரதான அரண்மனை தான் குறிப்பிடப்படுகிறது. அந்த அளவுக்கு பிரமாண்டமும் வரலாற்று பின்னணியும் கொண்டது இந்த அரண்மனை. இந்தோ சராசனிக், திராவிடம், ரோமன் மற்றும் ஓரியண்டல் போன்ற எல்லா கட்டிடக்கலை அம்சங்களும் கலந்து இந்த அரண்மனை உருவாக்கப்பட்டுள்ளது.

சாமுண்டி மலைகள்

சாமுண்டி மலைகள் கடல் மட்ட்த்திலிருந்து சுமார் 1065 அடிகள் உயரத்தில் உள்ளன. மைசூர் நகருக்கு வருகை தரும் பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் இது. இந்த சாமுண்டி மலையின் உச்சியில் பார்வதி தேவியின் அவதாரமான சாமூண்டீஸ்வரி அம்மனின் கோயில் அமைந்துள்ளது.

பிருந்தாவன தோட்டம்

மைசூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பிருந்தாவன் கார்டன் என்ற பிரம்மாண்டமான பூங்கா தோட்டம் மைசூர் வருகை தரும் பயணிகள் அனைவரும் தவறாமல் பார்க்க வேண்டிய அற்புதமாகும்.

ஜகன்மோகன் அரண்மனை

மைசூர் வரும் சுற்றுலா பயணிகள் இந்த நகரின் பழமை வாய்ந்த கட்டிடங்களின் ஒன்றான ஜகன்மோகன் அரண்மனையை பார்க்காமல் திரும்புவதில்லை. மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் ராஜ குடும்பத்தினர் 1897ல் வசித்த தாக சொல்லப்படுகிறது.

ரயில் மியூசியம்

சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான இடம் 1979 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த ரயில் மியூசியம் ஆகும். இங்குள்ள சாமுண்டி கேலரியில் சுற்றுலா பயணிகள் ரயில்வே துறையின் துவக்கத்தையும், வளர்ச்சியையும், திட்டங்களின் வரலாற்றையும் காணலாம்.

Venkygrams

 செக்கச் சிவந்த வானம்

செக்கச் சிவந்த வானம்

ரொம்ப நாளைக்கு அப்றமா சிம்புவுக்கு சூப்பரான கேரக்ட்டரும் குடுத்து, நாலு ஹீரோக்கள்ல ஒருத்தர நடிக்க வச்சிருந்தாரு மணிரத்னம். அதுலயும் அந்த படத்துல கடைசியா நடக்குற கிளைமேக்ஸ் காட்சிகள்லாம் செம்மயா இருக்கும்.

அந்த ஜீப் ஓட்டிட்டு போகுற பகுதி எதோ வெளிநாடுனு நினச்சிடவேண்டாம். நம்ம ஊருதான்.

கடப்பா

கடப்பா

கவின் கொஞ்சும் பெண்ணை நதிக்கு வெகு அருகில் நல்லமலா மற்றும் பாலகொண்ட மலைகளுக்கு நடுவே எழில் ஓவியமாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது கடப்பா நகரம். ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதியில் அமைந்திருக்கும் கடப்பா நகரம் திருமலை திருப்பதியின் நுழைவாயிலாக கருதப்படுகிறது.

கடப்பா நகரம் இன்று ஆந்திர மாநிலத்தின் முக்கியமான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களாக அமீன் பீர் தர்கா, பகவான் மஹாவீர் அருங்காட்சியகம், சாந்த் பீரா கும்பாத், தேவுனிகடப்பா, மஸ்ஜித்-இ-ஆஸாம் ஆகியவை அறியப்படுகின்றன.3

solarisgirl

 கடப்பாவில் காணவேண்டிய இடங்கள்

கடப்பாவில் காணவேண்டிய இடங்கள்

கடப்பா நகரில் 1982-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பகவான் மஹாவீர் அருங்காட்சியகம், ஜைன மதத்தின் சிறப்புகளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் உன்னத சாட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தில் கற்கள், வெண்கலம், களிமண் ஆகியவற்றை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்களும், கல்வெட்டுகள் சிலவற்றையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.

பகவான் மஹாவீர் அருங்காட்சியகத்தில் யானை காலுடன் காட்சியளிக்கும் பிள்ளையார் சிலை, பின்னப்பட்ட கூந்தலோடு தோற்றமளிக்கும் ஹனுமான், தலையிலிருந்து கங்கை கொட்டுவதற்கு பதிலாக பக்கங்களிருந்து கொட்டும் கங்கா நதியுடன் கூடிய சிவன் சிலை என்று சில வினோதமான சிற்பங்களை பயணிகள் இங்கு பார்க்கலாம்.

IM3847

 போடா போடி

போடா போடி

போடா போடி அப்படின்னு ஒரு படம், வரலட்சுமிகூட ஜோடியா நடிச்சிருப்பாரு சிம்பு. இந்த படத்தோட பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டுல நடந்ததுனு நமக்கு தெரியும். ஆனா சில காட்சிகள் சென்னையிலயும் எடுக்கப்பட்டிருக்கு. அதுல முக்கியமானது ஒரு பாடல்.

லவ் பண்லாமா வேணாமா? இந்த பாடல் முழுக்க சென்னையில படம் புடிச்சிருக்காங்க.

சென்னை

சென்னை

சென்னையின் அழகிய சுற்றுலாத் தளங்களைப் பற்றி தெரிந்து கொள்ள சொடுக்குங்கள்

SwiftRakesh

வாலு

வாலு

சிம்பு, ஹன்சிகா கூட சேர்ந்து நடிச்ச படம் வாலு. இந்த படத்துலதான் ரெண்டு பேருக்கும் காதல் வந்துச்சினு கூட சொல்றாங்க. அதுக்கு அப்றம் அந்த காதல் முறிஞ்சது வேற விசயம். சரி நாம விசயத்துக்கு வரலாம். இந்த படத்துல வர்ற ரயில் காட்சிகள்லாம் நிஜமாவே தாம்பரத்துல எடுத்ததா இல்ல வேற எங்கையும் எடுத்தாங்களானு சந்தேகம் வரும். ஏன்னா எப்படி அவ்ளோ பீக் அவர்ஸ்ல சிம்பு நடிக்குற காட்சிகள படமாக்கமுடியும். ரசிகர்கள் தொல்லை இருக்காதானு.. ஆனா இந்த படத்தோட ரயில் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது தாம்பரத்துல இல்லியாம்.

லிங்கம்பள்ளி ரயில் நிலையம்

லிங்கம்பள்ளி ரயில் நிலையம்

லிங்கம்பள்ளி ரயில் நிலையம் எங்க இருக்கு தெரியுமா? ஹைதராபாத்ல..

தென்னிந்தியாவில் மிகப்பிரசித்தமான சுற்றுலா நகரங்களில் ஒன்றான இந்த ‘ஹைதராபாத்' நகரம் - ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மூஸி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் இந்த நகரமானது வரலாற்று காலத்தில் கீர்த்தி பெற்றிருந்த குதுப் ஷாஹி வம்சத்தை சேர்ந்த மன்னரான முஹம்மது குலி குதுப் ஷா என்பவரால் 1591ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

Nikhilb239

ஹைதராபாத்தில் காணவேண்டிய இடங்கள்

ஹைதராபாத்தில் காணவேண்டிய இடங்கள்

சார்மினார்

ஹைதராபாத் எனும்போதே ‘சார்மினார்' என்ற பெயரையும் சேர்த்து சொல்லும்படியாக சர்வதேச அளவிலும் இது புகழ்பெற்றுள்ளது. சார்-மினார் எனும் பெயருக்கு நான்கு கோபுரங்கள் என்பது பொருளாகும். கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த நுணுக்கமான கட்டமைப்பு அக்கால கட்டிடக்கலை மஹோன்னதத்தின் சாட்சியாக வீற்றுள்ளது. ராஜரீக வேலைப்பாட்டுடன் கூடிய விதான அமைப்பின் மீது எழுப்பப்பட்டுள்ள நான்கு அழகிய குமிழ் கோபுரங்களை இது கொண்டுள்ளது.

கோல்கொண்டா கோட்டை

கோல்கொண்டா கோட்டை அல்லது கொல்ல கொண்டா கோட்டை என்று அழைக்கப்படும் இந்த கோட்டை ஹைதராபாத் நகரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் ஒரு மலையின்மீது அமைந்துள்ளது. கொல்ல கொண்டா என்பது மேய்ப்பர் மலை என்ற மலையை குறிப்பிடுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்த ஒரு தலைநகரமாக விளங்கிய கோல்கொண்டா தற்போது சிதிலங்களாக மட்டுமே காட்சியளிக்கிறது.

ராமோஜிராவ் பிலிம் சிட்டி

ஹைதராபாத் நகரத்தின் எல்லைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி - சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கான படப்பிடிப்புத்தளமாக மட்டுமல்லாமல் பிக்னிக் சுற்றுலா, பார்ட்டி கொண்டாட்டம், தனியார் நிறுவன நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், சாகச கேம்ப்'கள், மாநாடுகள் மற்றும் தேனிலவுப்பயணம் என்று பலதரப்பட்ட தேவைகளுக்கேற்ற ஸ்தலமாக மாறியுள்ளது.

மெக்கா மஸ்ஜித்

ஹைதராபாத் நகரில் உள்ள பழமையான மசூதிகளின் ஒன்று என்ற பெருமையை மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மசூதிகளில் இதுவும் ஒன்று என்ற பெருமையையும் இந்த மெக்கா மஸ்ஜித் பெற்றுள்ளது. முஸ்லிம்களுக்கான ஆன்மிக திருத்தலமாக மட்டுமல்லாமல் குறிப்பிடத்தக்க வரலாற்றுப்பின்னணியையும் பெற்றுள்ளதால் இந்த மசூதி மாநில அரசாங்கத்தால் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படுகிறது.

சௌமொஹல்லா மாளிகை

சௌமொஹல்லா பேலஸ் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை ஹைதராபாத் நிஜாம் அரசர்களுக்கு சொந்தமானதாகும். இது ஆசஃப் ஜாஹிஸ் என்ற மன்னரின் இருப்பிடமாக விளங்கியிருக்கிறது. நான்கு அரண்மனைகள் என்ற பொருளை குறிக்கும் ‘சஹார்‘ மற்றும் ‘மஹாலத்' எனும் பர்ஷிய வார்த்தைகளிலிருந்து இந்த அரண்மனைக்கான பெயர் உருவாகியிருக்கிறது. இரான் நாட்டிலுள்ள ஷா மன்னரது அரண்மனை போன்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Mandapati Sravya Sudha

அச்சம் என்பது மடமையாடா

அச்சம் என்பது மடமையாடா

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு அப்றம் கௌதம் வாசுதேவ் சிம்பு ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சூப்பர் காதல் கதை குடுத்துருக்காங்க. இந்த படத்துல வர்ற பாடல்கள் எல்லாமே சூப்பர் ஹிட். இந்த படம் கிளைமேக்ஸ்காக அதிகம் பேசப்பட்டது.

விசயமே இதுதான். இந்த படத்தோட கிளைமேக்ஸ் காட்சிகள் பீச் ஹவுஸ் செட்டப்ல ஒரு இடத்துல எடுத்துருப்பாங்க. அது அடையார் ல எடுத்ததா சில தகவல்களை கிடைக்குது. ஆனா அந்த படத்துல வர்ற காட்சிகள பாத்தா பெசன்ட்நகர் பீச் ஹவுஸ் மாதிரியும் இருக்கு. அடையாற்றுக்கு அந்த பக்கமா இந்த பக்கமானு யோசிக்க வேண்டாம். பெசன்ட் நகர் பீச் பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க.

பெசன்ட் நகர் பீச்

பெசன்ட் நகர் பீச்

எலியட்ஸ் பீச் என்று அழைக்கப்படும் இந்த பெசன்ட் நகர் கடற்கரையானது தென்சென்னை பகுதியை சேர்ந்த மக்கள் பொழுதுபோக்க பயன்படும் ஒரு முக்கியமான இடமாகும். டாக்டர் அன்னி பெசன்ட் இப்பகுதியில் வசித்த காரணத்தால் பெசண்ட் நகர் என்ற பெயர் இப்பகுதிக்கு ஏற்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரையின் நீட்சியானது அடையாறு ஆறு கழிமுகம் வரை முடிந்த பின்னர் ஆற்றுக்கு இக்கரையிலிருந்து பெசன்ட் நகர் பீச் துவங்குகிறது. இந்த கடற்கரைக்கு அருகிலேயே வேளாங்கன்னி மாதா கோயில் மற்றும் அஷ்டலட்சுமி கோயில் ஆகிய முக்கிய ஆன்மீகத்தலங்களும் அமைந்திருக்கின்றன.

Gowrishanker

 தக்ஷிண்சித்ரா

தக்ஷிண்சித்ரா

தக்ஷிண்சித்ராவில் ஆந்திரம், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய திராவிட கலைமரபின் ஒன்று சேர்ந்த உன்னதங்களை மாதிரி வடிவமைப்புகளாகவும், சேகரிப்புகளாகவும் காணலாம். மேலும் தென்னிந்திய வசிப்பிட கலையம்சங்கள், நாட்டுப்புற இசைமரபு, நடன வடிவங்கள், கட்டிடக்கலை, கைவினை பாரம்பரியம் மற்றும் நாட்டுப்புற வாழ்க்கை மரபுகள் போன்றவை குறித்த துல்லியமான அறிமுகத்தை பார்வையாளர்கள் பெறும் வகையில் பல அம்சங்களை கொண்டதாக இந்த வளாகம் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

Koshy Koshy

விண்ணைத் தாண்டி வருவாயா

விண்ணைத் தாண்டி வருவாயா

லேடி ஆப் ரேன்சம் சர்ச் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ள வல்லர்பாடம் கிறிஸ்தவர்களுக்கு மிகவும்

பிரபலமான ஊராகும். காரணம் அங்கு அமைந்துள்ள லேடி ஆப் ரேன்சம் சர்ச். உள்ளூர் மக்கள் இந்த ஆலயத்தை வல்லர்பாடம்

ஆலயம் என்று அழைக்கின்றனர். இங்கதான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தோட கேரள காட்சிகள் எடுக்கப்பட்டது. நீங்க கவனிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்.

Captain

Read more about: chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more