» »விஜய் படத்தில் வந்த சில அற்புதமான சுற்றுலாத்தலங்கள்

விஜய் படத்தில் வந்த சில அற்புதமான சுற்றுலாத்தலங்கள்

Written By: Staff

அடுத்தது: உலகநாயகனின் அற்புதமான திரைப்படங்கள் படம் பிடிக்கப்பட்ட இடங்கள்

விஜய் ஒரு நடிகர் என்பதை தாண்டி தமிழ் ரசிகர்கள் மனதில் அண்ணனாக, நண்பனாக, காதலனாக முக்கியமாக தலைவனாக நீங்கா இடம்பிடித்தவர். தன் தந்தையின் தயவால் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தன் இயல்பான நடிப்பினால், துள்ளல் நடனத்தினால் இன்று ரஜினி, கமல் போன்ற வெகு சிலரே அடைந்திருக்கும் உயரத்தை தன் சுய முயற்சியால் அடைந்தவர்.

திருநள்ளாறுவில் மீண்டும் தடுமாறிய செயற்கைகோள்கள் - உண்மை என்ன தெரியுமா?

இன்று அவர் தன்னுடைய 41ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அப்படிப்பட்ட இந்த தருணத்தில் அவர் படத்தில் வந்த சில அற்புதமான சுற்றுலாத்தலங்கள் பற்றி தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நீருக்கு மத்தியில் தங்க கோயில் எங்கே தெரியுமா?

துப்பாக்கி - மும்பை :

துப்பாக்கி - மும்பை :

தமிழ் சினிமா மாஸ் ஹீரோக்களுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படங்கள் பல மும்பையில் தான் எடுக்கப்பட்டிருக்கின்றன . கமலின் 'நாயகன்', ரஜினியின் 'பாட்ஷா', அஜித்தின் 'மங்காத்தா' போன்ற படங்களின் வரிசையில் முதல் முறையாக மும்பையில் படமாக்கப்பட்ட விஜய் படம் தான் 'துப்பாக்கி'. விஜய்க்கு அதிரிபுதிரி ஹிட் கொடுத்த இந்த படம் படமாக்கப்பட்ட மும்பை நகரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அடுத்த பக்கத்தில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

துப்பாக்கி - மும்பை :

துப்பாக்கி - மும்பை :

அரபிக்கடலோரத்தில் அமைந்திருக்கும் மகாராஸ்டிரா மாநிலத்தின் நகரம் தான் இந்த மும்பை மாநகரம். இதற்கு 'கனவுகளின் நகரம்' என்ற பெயரும் உண்டு காரணம் எண்ணற்ற இந்தியர்கள் தங்களின் கனவுகளை நிஜமாக்கும் இடமாக மும்பையை நினைக்கின்றனர். திறமையும் துடிப்பும் இருந்தால் வாழ்கையின் எந்த உயரத்திற்கும் அழைத்துச்செல்லும் என நம்புகின்றனர்.

Photo:Cididity Hat

துப்பாக்கி - மும்பை :

துப்பாக்கி - மும்பை :

இந்தியாவின் மற்ற பெருநகரங்களை போலவே இந்த நகரத்திலும் பழமையான வரலாற்று இடங்கள் இன்றும் புதுப்பொலிவுடன் பராமரிக்கபப்ட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானதும் மும்பை நகரின் முகமாக திகழ்வதுமான பெருமையை உடைய இடம் 'இந்தியாவின் நுழைவு வாயில்' எனப்படும் 'கேட் வே ஆப் இந்திய' தான்.

Photo:Coolaks21

துப்பாக்கி - மும்பை :

துப்பாக்கி - மும்பை :

பிரிட்ஷ் ஆட்சி காலத்தின் போது ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் 1911ஆம் ஆண்டு இந்தியா வந்ததை கவுரவிக்கும் பொருட்டாக இது கட்டப்பட்டது. தெற்கு மும்பையில் அரபிக்கடலின் ஓரத்தில் இருக்கும் இது தான் மும்பையின் மிகவும் உயிர்ப்பான பகுதியாகவும் இருக்கிறது. ஒரு அந்தி மாலை நேரத்தில் உங்கள் அன்பானவருடன் வந்து இந்தியாவின் நுழைவு வாயிலின் முன்பாக ஒரு 'செல்பி' எடுக்க மறந்து விடாதீர்கள்.

Photo:Rahul Bulbule

துப்பாக்கி - மும்பை :

துப்பாக்கி - மும்பை :

கிர்கௌம் சொவ்பாட்டி :

இன்று நம் தெருமுனை கடையில் மாலை நேரத்தில் சக்கை போடு போடும் பெல் பூரி, பானி பூரி போன்ற நொறுக்கு தீனி வகைகளின் பிறப்பிடம் இந்த கிர்கௌம் சொவ்பாட்டி எனப்படும் சொவ்பாட்டி கடற்கரையாகும்.

Photo:Rakesh

துப்பாக்கி - மும்பை :

துப்பாக்கி - மும்பை :

மும்பை நகரமே கோலாகலமாக கொண்டாடும் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியின் போது ஊர்வலமாக கொண்டுவரப்படும் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலையில் இந்த கடற்கரையில் தான் கரைக்கப்படுகின்றன என்பதும் இந்த இடத்தை பற்றிய குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். எனவே மும்பை வர நேர்ந்தால் இந்த கடற்கரைக்கு வந்து சுவையான மாலை நேர உணவுகளை ஒரு பிடி பிடிக்க தவறாதீர்கள்.

Photo: Flickr

துப்பாக்கி - மும்பை :

துப்பாக்கி - மும்பை :

எலிபெண்டா குகைகள் :

உலக அளவில் இன்னும் அதிகம் அறியப்படாத அதிசயங்களில் ஒன்றாக இருப்பது மும்பை நகரில் இருந்து 11 கி.மீ தொலைவில் அரபிக்கடலில் இருக்கும் ஒரு குட்டி தீவில் அமைந்திருக்கும் எலிபெண்டா குகை குடைவரை சிற்பங்கள் ஆகும்.

Photo:Frederick Noronha fredericknoronha1@gmail.com

துப்பாக்கி - மும்பை :

துப்பாக்கி - மும்பை :

கேட் வே ஆப் இந்தியாவில் இருந்து இந்த தீவை அடைவதற்கு தினமும் படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த குகைகளினுள் 5-7ஆம் நூற்றாண்டு காலத்தில் குடையப்பட்ட மிக பிரமாண்டமான ஹிந்து கடவுள்களின் சிற்பங்கள் இருக்கின்றன. மிக நுணுக்கமாக கலைநயத்துடன் வடிக்கப்பட்டிருக்கும் இந்த சிற்பங்களை வாழ்கையில் நாம் நிச்சயம் காண வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.

Photo: Kiran SRK

துப்பாக்கி - மும்பை :

துப்பாக்கி - மும்பை :

மும்பையில் உள்ள D.Y. பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் தான் துப்பாக்கி படத்தில் வரும் 'அண்டார்டிகா..' எனத்துவங்கும் பாடல் படமாக்கப்பட்டது.

Photo:Redtigerxyz

துப்பாக்கி - மும்பை :

துப்பாக்கி - மும்பை :

இது தவிரவும் மும்பையில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. இந்தியாவின் 'ஐகானிக்' நகரங்களில் ஒன்றான மும்பைக்கு வாழ்கையில் ஒருமுறையேனும் வாருங்கள். மும்பை நகரை பற்றிய மேலதிக தவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள். 'கில்லி' படத்தில் வந்த அற்புதமான இடங்களை பற்றி அடுத்த பக்கத்திற்கு வாருங்கள் .

கில்லி - மதுரை :

கில்லி - மதுரை :

தமிழ் சினிமாவில் கில்லியாக வந்து சொல்லியடித்த படம் 'கில்லி' ஆகும். 2004ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் இன்று வரை விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த படத்தின் அறிமுக காட்சியின் போது ரசிகர்களின் ஆரவாரத்தில் அரங்கங்கள் அதிர்ந்தன. இந்த படமானது மதுரையிலும் சென்னையிலும் படமாக்கப்பட்டது.

கில்லி - மதுரை :

கில்லி - மதுரை :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் :

இந்த படத்தின் அறிமுக காட்சி தமிழரின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முன்பாக படமாக்கப்பட்டிருக்கும். தமிழராய் பிறந்த எவரும் வாழ்கையில் ஒருமுறைக்கு பலமுறை தரிசிக்க வேண்டிய பேரற்புதம் இந்த கோயிலாகும்.

கில்லி - மதுரை :

கில்லி - மதுரை :

வைகையாற்றின் கரையில் அமைந்திருக்கும் இக்கோயில் தான் 2500 பழமையான மதுரை நகரின் உயிர் நாடியாக இருக்கிறது. பார்வதி தேவியின் ரூபமான மீனாட்சி அம்மன் உடையார் சுந்தரேஸ்வரருடன் அருள்பாலிக்கிறார். இராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத்தமிழ் பாடல்களில் இக்கோயிலைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

கில்லி - மதுரை :

கில்லி - மதுரை :

13ஆம் நூற்றாண்டில் இந்த கோயிலானது இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பின் போது சிதைக்கப்பட்டு பின்னர் 16ஆம் நூற்றாண்டில் நாயக்கர்களின் ஆட்சி காலத்தில் தற்போதிருக்கும் தோற்றத்தை அடைந்திருக்கிறது. இந்த கோயிலில் இருக்கும் நான்கு வாயில் கோபுரங்கள் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே போல இருக்கும். இதனுள் உள்ள குளத்தில் தங்க தாமரையும், மீனாட்சி அம்மனின் கருவறை கோபுரத்தின் மேல் தங்கத்தகடும் பதிக்கட்டுள்ளன.

கில்லி - மதுரை :

கில்லி - மதுரை :

உலகிலேயே கற்கூரையை உடைய மிகப்பெரிய கட்டிடமாகவும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் நடக்கும் 'மீனாட்சி திருக்கல்யாணம்' வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கில்லி - மதுரை :

கில்லி - மதுரை :

தென் தமிழகத்தின் தலைநகரான மதுரைக்கு இதுவரை வர இயலாதவர்கள் ஒரு விடுமுறையின் போது கட்டாயம் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வாருங்கள். இக்கோயிலைப் பற்றிய மேலதிக தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

நண்பன் - அந்தமான் :

நண்பன் - அந்தமான் :

இந்தியில் வெளியாகி இந்திய சினிமாவின் வசூல் சாதனைகளை முறியடித்த '3 இடியட்ஸ்' படத்தின் தமிழ் மருவுருவாக்கமாக வெளியான படம் 'நண்பன்'. இதுவரை வந்திருந்த விஜய் படங்களில் இருந்து முற்றிலும் புதுமையான படமாக இது இருந்தது. இப்படத்தில் எல்லோரையும் கவர்ந்த காட்சியென்றால் அது இப்படத்தின் 'கிளைமாக்ஸ்' தான். படத்தின் திருப்புமுனை காட்சியாக அது இருந்ததோடு மட்டுமில்லாமல் அது படமாக்கப்பட்ட இடமும் எலோரையும் கவர்ந்தது. அது எந்த இடம் என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நண்பன் - அந்தமான் :

நண்பன் - அந்தமான் :

சின்கே தீவு :

அந்தமான் & நிகோபார் தீவுகளின் தலைநகரமான போர்ட் பிளேரில் இருந்து 26 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் சிறிய தீவு தான் இந்த சின்கே தீவு ஆகும். இது வடக்கு சின்கே தீவு மற்றும் தெற்கு சின்கே தீவு என இரண்டு தீவுகளாக இருக்கிறது. இந்த இரண்டு தீவுகளையும் ஒரு மணல் திட்டு இணைக்கிறது. அந்த இடத்தில் தான் 'நண்பன்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.

நண்பன் - அந்தமான் :

நண்பன் - அந்தமான் :

அந்தமானில் இயற்கை அழகு பொதிந்த மிக அழகான இடங்களில் இந்த சின்கே தீவும் ஒன்று. இது தேசிய பூங்காவாக அறிவிக்கபப்ட்டு பாதுகாக்கப்படுகிறது. இந்த தீவில் மனிதர்களே வசிப்பதில்லை என்பது முக்கியமான அம்சமாகும். இதனால் இங்கு வருவதற்கு முன்பாக சிறப்பு அனுமதி பெறவேண்டியதும் அவசியமாகும்.இங்கே ஸ்கூபா டைவிங், ஸ்நார்கிளிங் போன்ற கடல் சார்ந்த சாகச விளையாட்டுகளும் சுற்றுலாப் பயணிகளுக்காக நடத்தப்படுகின்றன .

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்