» »என்னங்க! இந்த மாதிரி பண்டிகைகள்லாம் இந்தியாவுலயும் நடக்குதா?

என்னங்க! இந்த மாதிரி பண்டிகைகள்லாம் இந்தியாவுலயும் நடக்குதா?

Written By: Udhaya

திருவிழாக்கள் என்றவுடன் நம் மனதில் ஊரில் கொண்டாடும் பழைய நினைவுகளை அசைபோடுவோம். அந்த சூழ்நிலைக்குள்ளேயே போய்விடுவோம். அதிலும் இந்தியா என்றவுடன் சொல்லவே வேண்டாம். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. உண்மையில் கிராமத்து விழாக்களே நகரத்தில் சற்று மேம்போக்காக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போதைய மேற்கத்திய கலாச்சாரங்கள் நம் பண்பாட்டுக்கு சீரழிவு என்று கூவுபவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு, உலகின் அத்தனை பண்டிகைகளையும் சாதி, மத, தேசிய, இன வேறுபாடு பாராமல் கொண்டாடவேண்டும். அதற்காகத்தான் சொந்த நாட்டு விழாக்களில் கூட அயல்நாட்டு தலைவர்களை அழைத்து சிறப்பிக்கிறோம். நம் கலாச்சாரத்தை உலகம் அறிந்து கொள்ளவேண்டும் அல்லவா.. உலக நாடுகள் அவற்றை கொண்டாடி வரும் வேளையில், இந்தியாவே தன் சொந்த நாட்டு மக்களின் பெருமையையே வெளிப்படுத்த தயங்குகிறது. சரி... வாருங்கள், இந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் கொண்டாடப்படும் சில வித்தியாசமான திருவிழாக்களுக்கு சென்று கொண்டாடி மகிழலாம்.

கிலா ராய்பூர் கிராம ஒலிம்பிக்ஸ் :

கிலா ராய்பூர் கிராம ஒலிம்பிக்ஸ் :

நம்ம ஊர்களில் பொங்கல் சமயங்களில் கபடி, கயிறு இழுக்கும் போட்டிகள் நடப்பதை போல பஞ்சாப் மாநிலத்தில் கிலா ராய்பூர் என்ற கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் கிராம ஒலிம்பிக்ஸ் என்ற பெயரில் கிராமங்களுக்கே உரித்தான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா.

T Frey

எருது விரட்டு

எருது விரட்டு

பிப்ரவரி மாத முதல் வாரத்தில் நடக்கும் இந்த ஒலிம்பிக் போட்டியில் எருது விரட்டு, யானைகளின் மேல் அமர்ந்து கால்பந்து விளையாடுவது, போலோ விளையாட்டு, தோள்களின் மேல் மூட்டை சுமந்து செல்லுதல் போன்ற பஞ்சாபி கிராமங்களுக்கே உரித்தான வித்தியாசமான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன.

T Frey

ஒலிம்பிக்

ஒலிம்பிக்


பஞ்சாப் மாநிலத்தில் உள்ள எல்லா கிராமங்களில் இருந்தும் பெரும் ஆர்வத்துடன் ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் இந்த ஒலிம்பிக் பந்தையங்களில் கலந்து கொள்கின்றனர். போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு ஆயிரக்கணக்கான ருபாய் ரொக்க பரிசும் வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளை காண டிக்கெட் கட்டணம் ஏதும் இல்லை என்பதால் சுற்றுலாப்பயணிகளும் இந்த போட்டிகளை காண குவிகின்றனர்.

T Frey

சரி, இந்த கிலா ராய்புரை

சரி, இந்த கிலா ராய்புரை


பஞ்சாப் மாநிலத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்றான லூதியானாவில் இருந்து வெறும் 15 கி.மீ தொலைவில் தான் கிலா ராய்பூர் அமைந்திருக்கிறது. புது தில்லியில் இருந்து லுதியானாவிற்கு நேரடி விமான மற்றும் ரயில் சேவைகள் உள்ளன. லூதியானாவில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்

T Frey

ஜெய்சால்மர் பாலைவன திருவிழா :

ஜெய்சால்மர் பாலைவன திருவிழா :


ராஜ வாழ்க்கை எப்படி இருக்கும் என நீங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் கண்ணை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய இடம் ராஜஸ்தான் தான். தன் ராஜ பாரம்பரியத்தை இன்றும் தன்னுள் அப்படியே தக்கவைத்திருக்கும் இம்மாநிலத்தில் இருக்கும் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத்தல நகரம் ஜெய்சால்மர்.

Ben Beiske

மணி மகுடம்

மணி மகுடம்


ராஜஸ்தானத்தின் மணி மகுடம் என்று அழைக்கப்படும் இந்நகரத்தில் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் பாலைவன திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒட்டகங்களை அலங்கரிக்கும் போட்டி, ஒட்டக ஓட்டப்பந்தையம், போலோ விளையட்டு போட்டி, நீளமான மீசை வளர்ப்பவர்களுக்கான போட்டி, கைப்பாவை நாடகங்கள், மல்யுத்த போட்டிகள் என இங்கு ஆச்சர்யங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

Ben Beiske

..

நாட்டுப்புற நடனங்கள்

நாட்டுப்புற நடனங்கள்

மூன்று நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் போது மாலை நேரங்களில் ராஜஸ்தானின் நாட்டுப்புற நடனங்களை ரசித்தபடி ஒரு காலத்தில் ராஜ பரம்பரையினர் மட்டுமே சுவைத்த ராஜஸ்தானின் ராஜ போஜனங்களை சுவைத்து மகிழலாம்.

Wanki Lee

ஜெய்சால்மரை எப்படி அடைவது ?

ஜெய்சால்மரை எப்படி அடைவது ?

ராஜஸ்தானின் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து 571 கி.மீ தொலைவில் ஜெய்சால்மர் நகரம் அமைந்திருக்கிறது. இந்நகரை ஜெய்ப்பூரில் இருந்து ரயில், சாலை மற்றும் விமான மார்கமாக சில மணிநேர பயணத்தில் எளிதாக அடையலாம். ஜெய் சால்மர் நகரை பற்றிய மேலதிக தகவல்களையும், அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Tracy Blacher

கோவா கார்னிவல் :

கோவா கார்னிவல் :


கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து ஓய்ந்த சில நாட்களிலேயே அடுத்த அமர்க்களத்துக்கு தயாராகிறது கோவா. பிப்ரவரி 14 - 17 வரை கொண்டாடப்படும் இந்த கார்னிவல் 18ஆம் நூற்றாண்டில் கோவாவை ஆட்சி செய்த போர்த்துகீசியர்களால் துவங்கப்பட்டதாகும். வருடம் செல்ல செல்ல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பிரேசிலில் நடக்கும் புகழ்பெற்ற சாம்பா திருவிழாவை போல களைகட்டுகிறது கோவா கார்னிவல்.

Vinay Raikar

பேரழகுடைய கடற்கரை

பேரழகுடைய கடற்கரை


கோவாவின் தலைநகரும் பேரழகுடைய கடற்கரையை கொண்ட பனாஜி நகரின் வீதிகளில் இந்த கார்னிவல் கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்கும் மக்கள் மாறுவேடம் அணிந்தும், திகிலூட்டும் முகமூடிகள் அணிந்தும் நடமாடி மகிழ்கின்றனர்.

Vinay Raikar

சாம்பா போன்றே

சாம்பா போன்றே

பிரேசிலில் நடக்கும் சாம்பா திருவிழாவில் இருப்பது போன்றே இங்கும் விதவிதமாக அலங்கார ஊர்திகளில் நடமாடியபடி வலம் வருகின்றனர். காதலர் தினத்தன்று இவ்விழா துவங்குவதால் உங்கள் காதலனுடனோ, காதலியுடனோ எங்காவது வித்தியாசமான இடத்திற்கு சுற்றுலா செல்ல நினைப்பவர்கள் கோவா சென்று இந்த கொண்டாட்டங்களில் பங்குபெறலாம்.

Madan kumaraswamy

 சுற்றுலாத்தலங்கள்

சுற்றுலாத்தலங்கள்

கோவா மாநிலத்தில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். மேலும் கோவாவுக்கு செல்ல ரயில், பேருந்து மற்றும் விமானம் என எதுவானாலும் நம் தளத்திலேயே குறைந்த விலையில் புக் செய்து உங்கள் பயணத்தை இனிமையாக்குங்கள்.

Vinay Raikar

சிவ ராத்திரி

சிவ ராத்திரி


ஆதி கடவுளான சிவன் சூன்யத்தில் இருந்து அண்டத்தை படைக்கும் பொருட்டு தாண்டவம் ஆடிய பொழுதே சிவ ராத்திரி என்று உலகம் முழுவதும் உள்ள ஹிந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. பிறப்பு, இறப்பு என்பதில் இருந்து விடுதலை பெற்று மோட்சம் வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரி இரவின் போது கங்கையில் ஸ்நானம் செய்கின்றனர்.

பூஜைகள்

பூஜைகள்

சிவராத்திரி பண்டிகையின் போது நாடு முழுவதிலும் உள்ள சிவன் கோயில்களில் இரவு முழுக்க சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியா முழுக்க இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் வெகு சிறப்பாக சிவ ராத்திரி கொண்டாடப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோயில், ராமேஸ்வரம் ராமலிங்கேஸ்வரர் கோயில் போன்றவை சில முக்கியமான ஜோதிர்லிங்க கோயில்கள் ஆகும். இவ்வருடம் பிப்ரவரி 17ஆம் சிவ ராத்திரி கொண்டாடப்படுகிறது.

 முகலாய சாம்ராஜ்யம்

முகலாய சாம்ராஜ்யம்

தாஜ்மஹால், சந்தேகமே இல்லாமல் உலகத்தில் இருக்கும் மிக உன்னதமான கட்டிடம். இந்த தாஜ்மஹாலை கொண்டாடும் பொருட்டும், முகலாய சாம்ராஜ்யத்தின் கலை, கலாச்சாரம் ஆகியவற்றை பறைசாற்றும் பொருட்டும் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதத்தில் 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 10 நாட்கள் தாஜ் மகா உத்சவ் என்னும் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

தாஜ்மஹாலின் பேரழகு

தாஜ்மஹாலின் பேரழகு


1992ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இப்பண்டிகையின் போது இந்தியா முழுவதிலும் இருந்து வரும் ஓவியர்களின் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன, அதேபோன்று திரையிசை பாடகர்கள் பங்குபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், முகலாய உணவுத்திருவிழா நிகழ்ச்சிகளால் களைகட்டுகிறது. தாஜ்மஹாலின் பேரழகை ரசித்தபடி சுவையான முகலாய உணவுகளை சாப்பிடுவதற்கு இணையான அனுபவம் வேறெதுவுமே இருக்க முடியாது.

தாஜ் மாஹா உத்சவ்

தாஜ் மாஹா உத்சவ்


தாஜ் மஹாலின் கிழக்கு வாயிலுக்கு அருகில் இந்த திருவிழா நடக்கிறது. இதில் பங்கேற்க இந்திய குடிமக்களுக்கு 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தாஜ்மஹால் உங்களுக்கு பிடிக்குமெனில் கண்டிப்பாக இந்த தாஜ் மாஹா உத்சவ் பண்டிகையிலும் கலந்து கொள்ளுங்கள்.

Read more about: travel festivals

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்