Search
  • Follow NativePlanet
Share
» » வரலாற்றில் முதன்முறையாக சென்னை நகருக்குள் தனியார் பேருந்துகள் – தனியாரிடம் செல்கிறதா MTC?

வரலாற்றில் முதன்முறையாக சென்னை நகருக்குள் தனியார் பேருந்துகள் – தனியாரிடம் செல்கிறதா MTC?

நாம் காலம் காலமாக சென்று வந்த சென்னை பெருநகர பேருந்துகள் எதிர்காலத்தில் தனியார் மயமாக்கப்படலாம் என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால் அது உண்மை தான்! தமிழ்நாட்டின் தலைநகர் வரலாற்றில் முதல்முறையாக, மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மொத்த விலை ஒப்பந்தத் திட்டத்தின் கீழ், நகரம் முழுவதும் தனியார் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நகரத்தில் பல்வேறு வழித்தடங்களில் 500 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

chennaimtclocalbuses

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து கழகங்களில் ஒன்று

1972 இல் நிறுவப்பட்ட சென்னை மாநகர போக்குவரத்து கழகம் இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து கழகங்களில் ஒன்றாகும். இது 3,700 க்கும் மேற்பட்ட பேருந்துகளைக் கொண்டுள்ளது, தற்போது சென்னையில் MTC 625 வழித்தடங்களில் 3436 பேருந்துகளை இயக்குகிறது. தினமும் 29.5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் MTC பேருந்துகளில் பயணிக்கின்றனர். இதில் மொத்தமாக 20301 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஊழியர்கள் சென்னையில் உள்ள 31 பஸ் டிப்போக்கள் மூலம் எம்டிசி பஸ் செயல்பாடுகளை கையாளுகின்றனர்.

chennaimtclocalbuses

சென்னை நகரை மேம்படுத்த திட்டம்

சென்னை நிலையான நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் (C-SUSP) கீழ் செயல்படுத்தப்படும் GCC திட்டத்தின்படி, தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் தனியார் டெப்போக்களைப் பயன்படுத்தி தங்கள் பேருந்துகளை இயக்கலாம். இந்த நடவடிக்கை பல தொழிலாளர்களை கவலையடையச் செய்துள்ளதுடன் மகிழ்ச்சியற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும் உதவும் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

chennaimtclocalbuses

உலக வங்கியின் நிதியுதவி

இந்தத் திட்டம் உலக வங்கியின் முடிவுகளுக்கான செயல்திட்டமாக செயல்படுத்தப்படுகிறது மற்றும் IBRD (புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான சர்வதேச வங்கி), மற்றும் AIIB (ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி) ஆகியவற்றிலிருந்து தலா 150 மில்லியன் டாலர் நிதியுதவியை உள்ளடக்கியது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் (TNIDB) சென்னை நகர கூட்டாண்மைக்கான (CCP) திட்ட மேலாண்மை அலகு (PMU) ஆகியவை இந்த திட்டத்தின் செயலாக்கத்தை மேற்பார்வை செய்கிறது.

chennaimtclocalbuses

இந்த ஆண்டு இறுதிக்குள் 500 இலவச பேருந்துகள்

2023 ஆம் ஆண்டுக்குள் செயல்திறன் அடிப்படையிலான கட்டண ஒப்பந்தத்தின் அடிப்படையில் 500 பேருந்துகளின் சேவைத் திறனுக்கு இணையான பேருந்துகளையும், 2025 ஆம் ஆண்டுக்குள் மேலும் 500 பேருந்துகளையும் சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்ய உள்ளது. பெசன்ட் நகர்-அயனாவரம் (23C), வடபழனி-மெரினா (12B) மற்றும் திருவான்மியூர்-தாம்பரம் (91) ஆகிய வழித்தடங்களில் தனியார் பேருந்துகள் முதற்கட்டமாக இயக்கப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் நகரத்தில் பல்வேறு வழித்தடங்களில் 500 தனியார் பேருந்துகள் இயக்கப்படும்.

chennaimtclocalbuses

அதிகரிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை

புதிய திட்டத்தின் மூலம், மேலும் 1,000 பேருந்துகளை சேர்த்து, மாநகரில் பேருந்துகளின் எண்ணிக்கையை 4,700 ஆக உயர்த்த போக்குவரத்து அதிகாரிகள் இலக்கு வைத்துள்ளனர். சென்னையில் எம்டிசி பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது பயணிகளுக்கு உதவும், ஏனெனில் அவர்கள் பயணிக்க அதிக பேருந்துகள் இருக்கும் மற்றும் செயல்திறன் மேம்படும்., இந்த நடவடிக்கையானது சேவையின் செயல்திறனையும், பேருந்துகளின் தரத்தையும் அதிகரிக்கும் என்று பயணிகள் வரவேற்றனர்.

chennaimtclocalbuses

இலவச பேருந்து நிறுத்தப்படுமா?

சென்னையில் உள்ள பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு MTC பேருந்துகள் தனியார் வசம் செல்லும்போது அவர்களுக்கு இலவச பயணத்தை வழங்குமா என்பது கேள்விக்குறி தான். மற்ற மாநிலங்களில் தனியாருக்குச் சொந்தமான டவுன் பஸ்களில் பெண்கள், மாணவர்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

More News

    Read more about: chennai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+