Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையில் பேய் வசிக்கும் இடங்கள்!

சென்னையில் பேய் வசிக்கும் இடங்கள்!

By Staff

கரிக்கட்டு குப்பம்

Karikattukuppam

இந்தப் பகுதி, சுனாமியின்போது மிகவும் பாதிக்கப்பட்டு பல உயிர்கள் பறிபோக‌ நேர்ந்தது. கிழக்கு கடற்கரை சாலையருகே அமைந்திருக்கும் இந்த இடத்தில் ஒரு முதியவர் மற்றும் குழந்தையின் ஆவி சுற்றுவதாக அருகில் வசிப்பவர்கள் சொல்கிறார்கள். இதன் காரணமாக இந்த இடத்தில் யாரும் தங்குவதில்லை. இந்த இடத்தில் இருக்கும் ஒரு கோவிலில், ரத்தக் கறைகள் இருப்பதாகவும் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.

வால்மீகி நகர்

Haunted

இங்கிருக்கும் ஒரு வீட்டில், தற்கொலை செய்து கொண்ட‌ ஒரு பெண்ணின் ஆவி இருப்பதாக நம்புகிறார்கள். கூகுள் வரை தெரிந்திருக்கிறது. கூகுள் மேப்பில், இந்த வீட்டைப் பேய் வீடாக‌ காட்டுகிறது. இந்த வீட்டை கடக்கும்போது, கதவு அடித்துக் கொள்வதும், மொபைல் சிக்னல் கட் ஆவதும், கூச்சல்கள் கேட்பதும் பலரைத் தெறிக்க விடுகிறது.

டிமாண்டி காலனி

Demonte

இது ஒரு வீடல்ல. பெயரைப் போலவே பல வீடுகள் கொண்ட காலனி. வாட்ச்மேன், தெரு நாய்கள் தவிர யாரும் இல்லை. இருந்தவர்களும் காணாமல் போய்விட்டார்கள் என்கிறார்கள். டிமாண்டி காலனி படம் வந்த பிறகு பலர் இங்கு வந்து பார்க்க ப்ரியப்படுகிறார்கள். அதனால், காவல்துறை இங்கு ஒரு எச்சரிக்கை பலகையே வைத்துவிட்டது. இப்போது இங்கிருக்கும் வீடுகளை இடித்து விட்டார்கள். அடுக்குமாடி குடியிருப்பு வரலாம். அப்போது இந்த இடத்தின் பேய் பயம் போய்விடும்.

பெசன்ட் அவென்யு சாலை

பகல் நேரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்தி மயங்கும் நேரத்தில், அதிகம் வெளிச்சமில்லாத, எரியாத தெரு விளக்குகள், ஆள அரவமற்று இருக்கும் சூழல் எல்லாம் சேர்ந்து வயிற்றில் கிலியை கிளப்பும். மீறி சென்றவரகள் பலரை கன்னத்தில் அறை வாங்கியதாகவும், சாலையில் தூக்கி வீசப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இங்கிருக்கும் பேயைத் துரத்துவதற்கு ஒரு சின்ன‌ கோவிலை அமைத்திருக்கிறார்கள். ஆனால், இன்னும் பேய் இந்த இடத்தை விட்டு சென்றபாடில்லை. முடிந்தால் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

உடைந்த பாலம் - பெசன்ட் நகர்

Bridge

Photo Courtesy : Planemad

எலியட்ஸ் கடற்கரையிலிருந்து இரண்டு கி.மீ இந்தப் பாலம். செல்லும் வழியெங்கும் சேறு, குப்பைகள், சரியான சாலை வேறு கிடையாது. இதையெல்லாம் தாண்டி சென்றால் இந்தப் பாலத்தை அடையலாம். பகல் நேரத்தில் இளைஞர்கள் செல்ஃபி எடுக்க வருவார்கள். இருட்டும் முன் ஓடிவிடுவாரக்ள்.

இரவு நேரத்தில் ஒலங்கள் கேட்பதாக இங்கு வந்தவர்கள் சொல்கிறார்கள். பல படங்களில் இந்த இடம் வந்திருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

More News

    Read more about: haunted chennai places
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+