Search
  • Follow NativePlanet
Share
» »சோழ இளவரசி குந்தவை பற்றி நாம் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள் இவ்வளவு இருக்கின்றனவா?

சோழ இளவரசி குந்தவை பற்றி நாம் அறிந்திராத சுவாரஸ்ய தகவல்கள் இவ்வளவு இருக்கின்றனவா?

சோழப் பேரரசர் ராஜராஜ சோழன், சோழ இளவரசி குந்தவை தேவி, மாவீரன் ஆதித்த கரிகாலன், வாணர் குலத்து வீரன் வந்தியத்தேவன் பற்றியெல்லாம் நாம் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும், பல வரலாற்று தொகுப்புகளிலும், புத்தகங்களிலும் படித்து இருப்போம். ஆனால் ஆயிரம் காலம் கடந்து இன்னமும் பேசப்பட்டு வரும் சோழ பேரரச சாம்ராஜ்யத்திற்கு ராஜ தந்திரியாக இருந்தவர் குந்தவை இளவரசி தான் என்று நம்மில் பலருக்கு தெரியாது. தனது சகோதரரான ராஜராஜ சோழன் ஆட்சியிலும், அவருக்கு பின்னர் அவரது மகனான ராஜேந்திர சோழன் ஆட்சியிலும் சோழ பேரரசு கடல் கடந்து கொடி கட்டி பறந்ததிற்கு காரணமாக இருந்தவர் சோழ இளவரசி குந்தவை தேவி! அவரைப் பற்றி நாம் அறிந்துக்கொள்ள வேண்டிய தகவல்களும் சோழர் காலத்து தலைநகரங்களும் இதோ!

Tanjore

தன் தாய்நாட்டை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே தங்கியவர்

ஆசைப்பட்டு தனது மணாளனாக்கிய வந்தியத்தேவருக்கு வாணர்குல அரசு கிடைத்தப்போதிலும் அங்கு சென்று ராணியாக பதவியேற்க குந்தவை தேவிக்கு மனது வரவில்லை. அங்கு சென்றால் தன்னால் தஞ்சைக்கு அடிக்கடி வர இயலாது, சோழ சாம்ராஜ்யத்தை காக்க இயலாது என எண்ணி கடைசி வரை சோழர்களின் இளவரசியாக தஞ்சையிலேயே தங்கியுள்ளார். ஆனாலும் இறுதி வரை தன் கணவர் மீது கொண்ட அன்பும், மரியாதையும் குறையாமல்அவருக்கு தொண்டாற்றி வந்துள்ளார்.

Tanjore

பெண் என்பதால் சோர்ந்து அமர்ந்துவிடவில்லை

இளவரசி குந்தவை தேவி பெண் என்பதால் அரியணை ஏற முடியாமல் போனது. ஆனால் அரசனுக்கு உரிய அனைத்து அம்சங்களும், ராஜ தந்திரங்களும் போர் தந்திரங்களும் குந்தவை தேவியிடம் மிகுதியாகவே இருந்தது. அரியணையை அலங்கரிக்க அவருக்கு விருப்பம் இல்லாமல் போனாலும், சோழர்களின் ஆட்சியை விவரிக்கவும் மக்கள் போற்றும் படி நல்லாட்சி செய்யவும் இளவரசி குந்தவை தேவி சோழ பேரரசிற்கு முதுகுத்தண்டு போல இருந்து காப்பற்றிய தெய்வம் ஆவார்.

Tanjore

சோழ பேரரசர்களுக்கு ராஜதந்திரியாக இருந்தவர்

அவருடைய வீரமும், புத்திசாலித்தனமும் மற்றும் சீர்ப்படுத்தும் திறன்கள் மிகவும் பழம்பெருமை வாய்ந்தவையாக இருந்தன. அவற்றைக் கொண்டு தன் சகோரரான மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆட்சியில் உதவி புரிந்தார். அதுமட்டுமில்லாமல் தான் பாராட்டி சீராட்டி வளர்த்த தன் சகோதரின் மகனான ராஜேந்திர சோழனுக்கும் ராஜதந்திரியாக இருந்து சோழ சாம்ராஜ்யம் கடல் கடந்து கொடிக்கட்டி பறக்க வித்திட்டவர் சோழ வீர பெண்மணி குந்தவை தேவி.

Tanjore

அக்காலத்திலேயே இலவச மருத்துவமனையை நிறுவியர்

சோழர்கள் யாவரும் சிவன் மீது பக்தி கொண்டு உலகம் போற்றும் பல சிவாலயங்களை பல்வேறு இடங்களில் நிறுவினர். சிவாலயங்கள் மட்டுமின்றி, விஷ்ணு, புத்த மத, ஜெயின் கோவில்களையும் எந்த வேறுபாடுமின்றி எழுப்பினர். ஆனால் குந்தவை தேவியோ, இவற்றையெல்லாம் விட இலவச மருத்துவமனை மக்களுக்கு உதவிகரமாக இருக்குமென்று, அக்கால கட்டத்திலேயே பொதுமக்களின் நலனுக்காக இலவச மருத்துவமனையை நிறுவினார்.

என்ன இருந்தாலும் சர்ச்சை நிறைந்த வாழ்க்கை

குந்தவையின் வாழ்க்கை சர்ச்சைகள் இல்லாமல் இல்லை, தன் தம்பி ஆதித்த கரிகாகாலனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டாள், ஆனால் இந்த வதந்தியை அகற்றி, அரசியல் அமைதியின்மையைத் தவிர்க்க, தங்களது அண்ணனை விட ராஜ்ஜியம் ஒன்றும் பெரிதல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக குந்தவையும் ராஜராஜ சோழனும் இணைந்து தங்களது மாமாவான உத்தம சோழனாக முடி சூட்டினார்கள். அவர் ஆட்சிக்கு பின்னரே, அருண்மொழிவர்மன் முடி சூட்டி 'மாமன்னர் ராஜராஜ சோழனாக' பெயர் பெற்று, இன்றளவும் பெருமையாக பேசப்பட்டு வருகிறார்.

என்ன ஒரு வீரம் நிறைந்த பெண்மணியாக சோழ இளவரசி குந்தவை தேவி வாழ்ந்திருகிறார் அல்லவா!

More News

    Read more about: tanjore tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+